புது காரு வாங்க போறீங்களா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இந்த ஜனவரில நிறைய கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!!

புத்தாண்டு தொடங்கிருச்சு.. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் நிறைய புதுமுக வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில், ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் பலதரப்பட்ட கார் மாடல்கள் தங்களின் அறிமுகத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கார் மாடல்கள் எவை என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, 2025 ஜனவரியில் அறிமுகம் மற்றும் வெளீட்டைக் காண இருக்கும் கார் மாடல்கள் பற்றியும், அவற்றின் சிறப்புகள் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

மாருதி சுஸுகி தொடங்கி எம்ஜி வரை என பல முன்னணி பிராண்டுகள் இந்த 2025 ஜனவரியை அலங்கரிக்கும் விதமாக புதுமுக கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன. இதில் ஹூண்டாய் கிரெட்டா மின்சார கார் மாடலும் அடங்கும். வாங்க இவை பற்றிய விரிவான தகவலைக் காணலாம்.

January 2025 new car launches in india

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எஸ்யூவி (Mercedes-Benz EQS SUV): ஆண்டின் தொடக்கத்தை அலங்கரிக்கும் விதமாக இந்த கார் மாடலே முதலில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. இதன் அறிமுகம் ஜனவரி 9 ஆம் தேதி அன்றே அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றது.

இது அதிக லக்சூரி அம்சங்களைத் தாங்கிய 5 சீட்டர் கார் மாடல் ஆகும். மேலும், இது ஓர் மின்சார கார் மாடலும் கூட. ஓர் முழு சார்ஜில் 500 கிமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என கூறப்படுகின்றது. அதிக ரேஞ்சைப் போலவே மிக அதிக லக்சூரி அம்சங்களையும் தன்னுள் தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஏர் ப்யூரிஃபையர், அதிக சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்கும் இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் இக்யூஎஸ் காரில் இடம் பெற்றிருக்கும். இதுமட்டுமல்ல, பெரிய பொழுதுபோக்கு திரைகளையும் இந்த காரில் தன்னுள் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. உலக சந்தையில் இந்த கார் 7 சீட்டர் வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஜி (Mercedes-Benz EQG): பென்ஸ் நிறுவனம் இக்யூஎஸ் எஸ்யூவி உடன் சேர்த்து இந்த காரையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. இதுவும் ஓர் மின்சார கார் மாடலே ஆகும். இந்த காரில் அதிக ரேஞ்சை தருவதற்காக 116 kWh பேட்டரி பேக்கை வழங்கி இருக்கின்றனர்.

இது ஓர் முழு சார்ஜில் 479 கிமீ வரையில் ரேஞ்ச் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த ஆண்டிலேயே இதன் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இந்த காரிலும் லக்சூரி அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki eVitara): மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும். இதன் வெளியீட்டு நிகழ்வும் இந்த ஜனவரி மாதத்திலேயே அரங்கேற இருக்கின்றது. ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ-வில் இதன் வெளியீட்டு நிகழ்வு அரங்கேற இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த கார் பற்றிய முக்கிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜனவரி 17 வெளியீட்டு நிகழ்வின்போதே அதுபற்றிய பல்வேறு விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV): இந்திய மின்சார கார் காதலர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இந்த கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் மாடலின் வெளியீட்டு நிகழ்வும் ஜனவரி 17 ஆம் தேதி அன்றே அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த காரின் சோதனையோட்ட பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டன. 17 ஜனவரி வெளியீட்டைத் தொடர்ந்து இந்த காரை அது விற்பனைக்கான அறிமுகத்தையும் செய்ய இருக்கின்றது. ஜனவரி இறுதிக்குள்ளாக இதன் அறிமுக நாள் பற்றிய விபரம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாயின் விலை குறைவான மின்சார கார் மாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா சிரோஸ் (Kia Syros): இந்தியாவில் எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தன் பக்கம் வளைத்து போடும் விதமாகவ இந்த சிரோஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது ஓர் டால் பாய் தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட காராகவே இதனை கியா தயார் செய்திருக்கின்றது. இந்த காரின் புக்கிங் பணிகள் ஜனவரி 3ஆம் தேதியில் தொடங்கப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து டெலிவரி பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க இந்த காரை 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அன்றைய தினத்தில் இந்த காரின் விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் வெளியீட்டு நிகழ்வு ஏற்கனவே அரங்கேறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ (Mahindra BE 6 and XEV 9e): இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்தானா இவை என கேட்கும் அளவிற்கு அதிக கவர்ச்சியான கார் மாடலாக இவற்றை தயார் செய்திருக்கின்றது, மஹிந்திரா நிறுவனம். இரண்டும் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

இந்த கார் மாடல்களின் வெளியீட்டு நிகழ்வு இந்தியாவில் சமீபத்திலேயே அரங்கேறியது. ஆனால், முழு விபரத்தையும் நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இந்த கார்களின் அனைத்து வேரியண்ட்-இன் விலை விபரங்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறப்பம்சங்கள் மற்றும் பல விஷயங்களில் இந்த இரண்டு கார் மாடல்களும் ஒத்துப் போகும் வகையில் இருக்கின்றன.

மிக முக்கியமான சிறப்பம்சங்களாக இந்த கார்களில் லெவல் 2 வகை அடாஸ் அம்சம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் பன்முக ஏர்-பேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. ஆகையால், மஹிந்திராவின் இந்த தயாரிப்புகள் மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்கவையாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster): இந்தியாவின் சூப்பர் கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக இந்த கார் மாடல் விரைவிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வெளியீட்டு நிகழ்வும் ஏற்கனவே இந்தியாவில் அரங்கேறிவிட்டது. ஆனால், இதன் விலைகள் மற்றும் பிற முக்கிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதுபற்றிய விபரங்களை இந்த ஜனவரியில் வெளியிட்டு, அதிகாரப்பூர்வமாக சைபர்ஸ்டரை எம்ஜி விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல்கள் அனைத்திற்கும் இந்தியாவில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், இந்த கார் மாடல்கள் அனைத்தும் விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இவற்றின் வருகையால் இந்திய வாகன காதலர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் மாதமாக 2025 ஜனவரி அமைய இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 1, 2025, 5:00 [IST]
English summary
Exciting new car launches in india for january 2025 featuring electric suvs and innovations
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+