பிரீமியம் அம்சங்களை மிக தாராள மனசுடன் கொண்டிருக்கும் டாப் 5 சிஎன்ஜி கார்கள்.. மலிவு விலை கார் லிஸ்ட்ல உண்டு!

இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே சிஎன்ஜி (CNG) கார்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கே சவால் விடுக்கும் விதமாக அது விற்பனையாகிக் கொண்டுள்ளது. சிஎன்ஜி கார்கள் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மட்டுமல்ல, அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவும் உள்ளன. இந்தியர்கள் மிகப் பெரிய பிரீமியம் அம்சம் விரும்பிகள் என்பதாலேயே வாகன உற்பத்தியாளர்கள் ஆடம்பர கார்களுக்கு இணையான அம்சங்களைத் தாங்கியதாக சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதனாலேயே சிஎன்ஜி கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பானது நாளுக்கு நாள் இரட்டிப்பாகிக் கொண்டே உள்ளது. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டே இந்த பதிவில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 பிரீமியம் அம்சங்களை தாராள மனசுடன் கொண்டிருக்கும் சிஎன்ஜி கார்களின் லிஸ்ட்டை தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க இதுபற்றிய விரிவான தகவலை பார்க்கலாம்.

Top 5 premium cng cars in india

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): சிஎன்ஜி காரை மிக அதிக பிரீமியம் அம்சங்களுடன் வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? அதுவும் சற்றே குறைவான விலையில் வாங்க வேண்டுமா?.. அப்படி என்றால் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டே உங்களுக்கான கார் மாடல் ஆகும்.

இதிலேயே மிக அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய சிஎன்ஜி ஆப்ஷன் சற்றே குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்விஃப்ட் காரின் இசட்எக்ஸ்ஐ டிரிம்-மே அது ஆகும். இதை ரூ. 9.20 லட்சம் என்கிற விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த விலையிலேயே வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின் பக்கத்திற்கான ஏசி வெண்டுகள், சாவியே இல்லாமல் காரை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப்பாக்கும் வசதி, 6 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம் மற்றும் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல மைலேஜை தருவதிலும் இந்த கார் பெஸ்ட்டானதாக உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 32.50 கிமீட்டர் மைலேஜை இந்த கார் வழங்கும்.

டாடா டிகோர் (Tata Tigor): மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு அடுத்தபடியாக அதிகம் பிரீமியம் தாங்கியவாறு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சிஎன்ஜி காராக டிகோர் உள்ளது. இந்த கார் மாடலின் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ட்ரிம்மே அது ஆகும். ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் இது கிடைக்கின்றது.

இந்தியாவில் வேறு எந்த சிஎன்ஜி காரிலும் இந்த கியர்பாக்ஸ் வசதியைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 9.50 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே எல்இடி லைட், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, மழை வந்தால் தானாக வைப்பாகும் வைப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், 10.25 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம் பெற்றிருக்கும். இதன் மைலேஜ் திறன் கிலோ ஒன்றிற்கு 24 கிமீ முதல் 26 கிமீட்டராக உள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய நிலையில் சற்றே குறைவான விலையில் விற்பனைக்குக் சிஎன்ஜி கார்களின் பட்டியலில் டிசையரும் இடம் பிடித்திருக்கின்றது. இந்த கார் மாடலின் இசட்எக்ஸ்ஐ ட்ரிம்மே அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய சிஎன்ஜி காராக உள்ளது.

இதன் விலை ரூ. 9.89 லட்சம் ஆகும். பிரீமியம் அம்சங்களைத் தாங்கி இருப்பதில் மட்டுமல்ல பாதுகாப்பை தருவதிலும் இந்த கார் மாடல் மிகவும் பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களையே அது பெற்றிருக்கின்றது. பவர்டு ஓஆர்விஎம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன.

இதுமட்டுமல்ல, ஆட்டோமேட்டிக் ஏசி, பின் பக்கத்திற்கான ஏசி துவாரங்கள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ரிவர்ஸ் பார்க்கிங், 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்ற சிஎன்ஜி கார்களில் இருப்பதே மிக அதிக பிரீமியம் அம்சங்கள் இந்த காரிலும் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரில் ஒரு கிலோ சிஎன்ஜி நிரப்பினாலே 33.73 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

டாடா பஞ்ச் (Tata Punch): இந்த கார் மாடலில் டாடா மோட்டார்ஸ் ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை வழங்கி இருக்கின்றது. சன்ரூஃப், மழையின்போது தானாகவே இயங்கும் வைப்பர்கள் மற்றும் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சமும் கூட இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுமட்டுமல்ல ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், க்ரூஸ் கன்ட்ரோல், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் போன்றவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தனை அம்சங்களையும் ரூ. 10 லட்சம் விலையிலேயே டாடா மோட்டார்ஸ் இந்த காரில் வழங்குகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த மைக்ரே எஸ்யூவி கார் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 25கிமீ முதல் 27கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): இந்த கார் மாடலின் எக்ஸ்இசட் பிளஸ் ஓஎஸ் டிரிம்மே அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. வாய்ஸ் வசதிக் கொண்ட சிங்கிள் பேன் பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏர் ப்யூரிஃபையர், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், 10.25 அங்குல வசதிக் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல அம்சங்களை இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இந்த காரில் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 24 கிமீ முதல் 26 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி காரை அதிகம் பிரீமியம் அம்சங்களுடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாகவே இந்த பதிவை இங்கே வழங்கி இருக்கின்றோம். இந்த பதிவில் பார்த்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், மைலேஜ் திறன் அராய்-ஆல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை என்பதும் கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2025, 5:00 [IST]
English summary
Explore the top 5 cng cars in india offering premium features and fuel efficiency
மேலும்... #auto news #cng car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+