ரூ.3.5 லட்சத்தில் சீனாவால் கார் தயாரிக்க முடியுது... நம்மால் ஏன் முடியல? உள்ளே இல்லாத வசதியே கிடையாது!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் பிரபலமான கார்களுள் ஒன்று, டிஃபெண்டர் (Defender) ஆகும். உலகில் எத்தனை விதமான எஸ்யூவி (SUV) ரக கார்கள் இருந்தாலும், டிஃபெண்டர் ஆனது அவற்றுள் தனித்துவமானது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு டிஃபெண்டர் கார்கள் கம்பீரமான தோற்றத்தில் பார்க்கும் எவரொருவரையும் கவரக்கூடியவைகளாக உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்ப டிஃபெண்டர் கார்களின் விலைகளும் கோடி ரூபாய்கள் அளவில் நிர்ணயிக்கப்படும் நிலையில், சீனா (China)-இல் டிஃபெண்டர் காரை காப்பியடித்து, வெறும் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஒரு கார் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சீனா என்றாலே பிற கார்களை காப்பியடித்து கார்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது என்பதை நமது செய்தித்தளத்தில் கூட பலமுறை பார்த்துள்ளோம். ஏனெனில், அந்த நாட்டில் நிலவும் காப்புரிமை தொடர்பான சட்டங்கள் அவ்வாறானவைகளாக உள்ளன. குறிப்பாக, உலகளவில் பிரபலமான கார்களை தான் அதிகமாக காப்பியடித்து சீனாவில் கார்கள் உருவாக்கப்படுகின்றன.

fake land rover defender car

நம் இந்தியாவில் பிரபலமாக உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களில் இருந்து, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) போன்ற பைக்குகள் வரையில் கூட காப்பியடித்து சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, உலகின் பிரபலமான வாகனங்களை பார்த்து சீனாவில் வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை வெளிக்காட்டும் வகையிலான வீடியோக்கள் சமீப காலமாக அதிகளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

சமீபத்தில்கூட, மிக விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் (Rolls-Royce Cullinan) காரை காப்பியடித்து உருவாக்கப்பட்ட போலி சீன கார் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதனை பற்றி நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். இந்த நிலையில், அந்த வரிசையில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை காப்பியடித்து சீனாவில் ஒரு கார் உருவாக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

fake land rover defender car

அதனை அன்-பாக்ஸிங் (Unboxing) செய்யும் வீடியோவை ஒருவர் தனது யூடியூப் (Youtube) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின் துவக்கத்தில், பெரிய மர பெட்டியினுள் வைத்து டெலிவிரி செய்யப்பட்ட அந்த போலியான டிஃபெண்டர் காரை வெளியே கொண்டுவருவது காட்டப்பட்டுள்ளது. பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் இந்த கார் பார்ப்பதற்கு வேண்டுமாயின் டிஃபெண்டர் போன்று இருக்கலாம். ஆனால், டிஃபெண்டர் காருக்கு உண்டான நிறைய விஷயங்கள் இந்த காரில் இல்லை.

குறிப்பாக, இந்த சீன கார் ஆனது அளவில் மிகவும் சிறியதாக உள்ளது. இதனாலேயே, வழக்கமான டிஃபெண்டருக்கும், இந்த போலி டிஃபெண்டருக்கும் இடையே விலையில் மிக பெரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவில் இந்த சீன காரின் விலை 4 ஆயிரம் டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு வெறும் ரூ.3.5 லட்சம் ஆகும்.

fake land rover defender car

இந்த போலி டிஃபெண்டர் காரின் முன்பக்கத்தில் எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஹெட்லைட்கள் செவ்வகம் வடிவில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க பம்பரில் உள்ள சில்வர் நிறத்திலான கிராஃபிக்ஸ் பார்ப்பதற்கு அருமையாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். காரின் அளவில் சிறியதான தோற்றத்திற்கு ஏற்ப சக்கரங்களும் அளவில் சிறியவைகளாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த சீன காரின் முன்பக்கமும், பக்கவாட்டு பகுதியும் ஓரளவிற்கு டிஃபெண்டர் காரை போன்று இருந்தாலும், இந்த காரின் பின்பகுதி ஆனது முற்றிலும் வேறுப்பட்டதாக உள்ளது. இந்த போலி டிஃபெண்டர் காரின் உட்புறத்தில் பின் இருக்கைகள் மடக்கக்கூடியவைகளாக உள்ளன. அளவில் சிறியதான காராக இருப்பினும், இந்த காரினுள் போதுமான இடவசதி உள்ளது. டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டேஸ்போர்டில் ஏசி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

fake land rover defender car
Take a Poll

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வீடியோவில் பார்ப்பதற்கு மிகவும் அளவில் சிறியதான காராக இருப்பினும், இதில் 5 பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்யலாம் என்பது ஆச்சிரியமாக உள்ளது. இது எலக்ட்ரிக் கார் என்பதினாலே, காரினுள் அதிக இடவசதியை கொண்டுவர முடிந்துள்ளது. டிஃபெண்டர் கார்களை கரடு முரடான பாதைகளுக்கு கூட கொண்டு செல்ல முடியும். ஆனால், இந்த போலி எலக்ட்ரிக் டிஃபெண்டரை பார்த்தால், அவ்வாறு எல்லாம் கொண்டு செல்லக்கூடியது போல் தெரியவில்லை.

FAQs
இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்கள் என்னென்ன மாதிரியான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன?

பெட்ரோல், டீசல், ஹைப்ரீட்.

இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் எவ்வளவாக உள்ளன?

ரூ.1.04 கோடி முதல் ரூ.2.85 கோடி வரையில்.

இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் எந்தெந்த வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது?

90, 110 மற்றும் 130 ஆகும்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2025, 15:10 [IST]
English summary
Fake land rover defender electric car manufactured by chinese brand
மேலும்... #defender
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X