எவ்ளோ வேணும்னாலும் பாத்துக்கோங்க ஆனா ஆச மட்டும் வச்சுடாதீங்க! கண்டிப்பா இந்த சிட்டு (கார்) நம்ம கையில சிக்காது

கைகளில் சிக்காத சிட்டு போல இந்த கார் நம்மில் பலருக்கு இருக்க போகின்றது. அவ்வளவு அதிக விலையிலேயே ஃபெர்ராரி (Ferrari) நிறுவனம் தன்னுடைய புதிய கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் 12 சிலிண்ட்ரி (12 Clindri) எனும் கார் சூப்பர் கார் மாடலையே இந்தயிாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கான ஃபெர்ராரியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இந்த கார் பற்றிய விபரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து புதுமுக காரின் விலைகள் பற்றிய விபரங்களையும் அவர்கள் அறிவித்திருக்கின்றனர். ஃபெர்ராரி நிறுவனம் தன்னுடைய 12 சிலிண்ட்ரி சூப்பர் கார் மாடலில் அதிக பவர்ஃபுல்லான எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றது. 12 சிலிண்டர்கள் (12 Cylinders) எஞ்சினையே அதில் பயன்படுத்தி இருக்கின்றது.

Ferrari 12cilindri launched in india

இதை குறிக்கும் விதமாகவே அந்த காருக்கு 12 சிலிண்ட்ரி எனும் பெயரை அது சூட்டி உள்ளது. அறிமுகமாக இந்த சூப்பர் காருக்கு ரூ. 8.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்ரோடில் இதை விட இன்னும் காஸ்ட்லியாக இருக்கும்.

12 சிலிண்ட்ரி கூபே (Coupe) எனும் வெர்ஷனுக்கே இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதேபோல், ஸ்பைடர் (Spider) எனும் ஆப்ஷனும் இந்த காரில் விற்பனைக்குக் கிடைக்கும் அதற்கு ரூ. 9.15 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

நம்ம உள்ளூர் லெஜண்ட் சரவணா தொடங்கி முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களை வளைத்துப் போடும் நோக்கிலேய இந்த காரை ஃபெர்ராரி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கேற்ப நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அட்வான்ஸ்டு லக்சூரி அம்சங்களை மிக தாராளமாக 12 சிலிண்ட்ரி காரில் ஃபெர்ராரி வழங்கி இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை ஏற்கனவே கூறியதைப் போல 12 சிலிண்டர்கள் கொண்டி 6.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி12 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 830 எச்பி ஆற்றலை உருவாக்கும். 8 ஸ்பீடு டிரான்ஸ் ஆக்ஸில் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நிறுவனம் இதுவரை விற்பனைக்குக் கொண்டு வந்ததிலேயே மிகவும் காஸ்ட்லியான மற்றும் அதிகம் கவர்ச்சியான சூப்பர் கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. தனித்துவமான லுக் மற்றும் பெயிண்ட் பூச்சு உள்ளிட்டவற்றாலேயே இந்த காரை ஃபெர்ராரி அலங்கரித்திருக்கின்றது. லம்போர்கினி ரெவியுல்டோ மற்றும் அஸ்டன் மார்டின் வேன்க்யூஷ் போன்ற கார் மாடல்களுக்கே போட்டியாக இந்த கார் மாடல் உலக சந்தையில் விற்பனையில் இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காருக்கான புக்கிங்குகள் தற்போது நாட்டில் தொடங்கிவிட்டன. விரைவில் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அந்த நாள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. உலக அளவில் இந்த கார் சென்ற ஆண்டு மே மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே விரைவில் இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 20:47 [IST]
English summary
Ferrari 12cilindri unveiled in india with prices starting at rs 8 5 crores
மேலும்... #ferrari #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+