இப்ப வாங்குறத விட வருஷ கடைசில கார் வாங்குனா விலை கம்மியா கிடைக்குமா? இது தெரியாம முடிவெடுக்காதீங்க?

இந்தியாவில் நாளை (செப்22ம்தேதி) முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்த நேரத்தில் வாகனம் வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்பதால் சிலர் வாகனங்களை வாங்க நினைக்கிறார்கள். அதே நேரம் 2025ம் ஆண்டு இறுதியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தாண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களின் ஸ்டாக்கை காலியாக்க தள்ளுபடிகளை வழங்கும். அப்பொழுது விலை இதை விட குறைவாக இருக்கும் என்பதால் வருட இறுதியில் வாகனம் வாங்க முடிவு செய்துள்ளனர். உண்மையில் எது லாபமாக இருக்கும்? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 நாளை அதாவது செப்டம்பர் 22ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த வரி மாற்றத்தில் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திற்கு பதிலாக 18 சதவீதம் தான் வரி விதிக்கப்படுகிறது. அதே நேரம் சொகுசு வாகனங்களுக்கு 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பில் சிறிய ரக வாகனங்கள், சொகுசு வாகனங்கள் இரண்டுமே விலை குறைகிறது.

Festive Season vs Year-End Deals

இதனால் பலர் இதன் பிறகு வாகனம் வாங்க முடிவு செய்துள்ளனர். அதே நேரம் வழக்கமாக வாகனங்கள் 2025ம் ஆண்டு தயாரித்த வாகனங்களை இந்தாண்டு இறுதி அல்லது 2026 ஜனவரி மாதத்தில் வாங்கினால் பழைய ஸ்டாக் என அந்த வாகனங்களுக்கு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல தள்ளுபடிகளை வழங்கும்.

இந்த நேரத்தில் தற்போது உள்ளதை விட இன்னும் குறைந்த விலையில் வாகனங்கள் கிடைக்கும் என காத்திருக்க முடிவு செய்துள்ளனர். எது சரியான அணுகுமுறை? எந்த நேரத்தில் வாகனம் வாங்கினால் லாபம் என பலர் குழம்பி வருகின்றனர். இது குறித்த தெளிவான விளக்கத்தை தான் இங்கே காணப்போகிறோம்.

Festive Season vs Year-End Deals

இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களுக்கான விலை உயர்வு அறிவிப்பு குறித்த விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டிற்கு 4 முறை விலையேற்றம் செய்ய முடிவு செய்யலாம். அதன்படி வருட கடைசி அல்லது துவக்கம், புதிய நிதியாண்டு, பண்டிகை காலம் துவங்கவதற்கு முன்பு மற்றும் அவ்வப்போது ஏற்படும் மூலப்பொருட்கள் விலையேற்றம் என 4 தருணங்களில் சராசரியாக விலையை ஏற்றும்.

இதை விலையேற்றத்திற்கு எந்த விதிகளும் இல்லை. கட்டாயமாக இந்த 4 தருணத்தில் மட்டும் தான் விலையேற்றும் என சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால விலையேற்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது இந்த 4 தருணங்கள் பெரும்பாலான நேரங்களில் இருந்துள்ளது. இதன்படி பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை ஏற்ற வாய்ப்புள்ளது.

Festive Season vs Year-End Deals

இப்படியாக ஏற்றப்படும் போது அந்த காலகட்டத்தில் விற்பனவையை குறைக்காமல் இருக்க சில தள்ளுபடிகளையும் அறிவிப்பார்கள். அப்பொழுது பார்த்தால் நமக்கு விலை குறைவாக கிடைப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். ஆனால் இது பழைய விலையில் தான் இருக்கும். விலையேற்றத்திற்கு முன்பு உள்ள ஸ்டாக்குகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடியை தருவார்கள்.

இதை கணக்கிட்டு பார்க்கும் போது தற்போது வாகனங்களின் விலை கணிசமாக குறைவதால் இதன் பலன்களை பெரும்பாலான நிறுவனங்கள் நேரடியாக மக்களுக்கு வழங்கியுள்ளன. ஆனால் இந்த விலை குறைப்பை வைத்து எதிர்காலத்தில் படிப்படியாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலையை ஏற்ற முடிவு செய்திருக்கலாம். இதனால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இந்த வாகனங்களின் விலை கணிசமாக உயரவே வாய்ப்புள்ளது.

அப்பொழுது தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டாலும் அது கிட்டத்தட்ட தற்போது உள்ள வாகன விலையிலேயே கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் உண்மையில் ஜிஎஸ்டி குறைந்த உடன் வாகனம் வாங்குவதற்கும், ஆண்டு இறுதி தள்ளுபடியில் வாகனங்கள் வாங்குவதும் கிட்டத்தட்ட ஒரே விலை தான் இருக்கும். பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. விலை குறையும் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் வாகனங்களை வாங்க காலதாமதப்படுத்த தேவையில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் பலர் ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கிறது. இதை பயன்படுத்தி வாகனங்கள் வாங்குவது தான் புத்திசாலித்தனம். ஆண்டிறுதி வரை காத்திருப்பது பெரும்பாலும்தேவையில்லாத காத்திருப்பாக இருக்கலாம். ஆனால் இது வாகனத்திற்கு வாகனம், நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபட வாய்ப்பு உள்ளது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 21, 2025, 15:47 [IST]
English summary
Festive season vs year end deals which is the best time to buy a new car in 2025
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X