கம்மி விலையில் மீண்டும் புதிய அவதாரம் எடுக்கும் ஃபியட் புண்டோ! இந்த காருக்கு உலகமே வெயிட்டிங்!
எலெக்ட்ரிக் வாகனங்களின் காலத்தில், கிளாசிக் கார்களை எலெக்ட்ரிக் வடிவத்தில் மீண்டும் உருவாக்குவது தற்போது டிரெண்டாகி வருகிறது. புண்டோ காரையும் இப்படி மாற்றுவது பற்றி ஃபியட் யோசித்து வருகிறது, இருப்பினும் இன்னும் எந்த பணிகளும் தற்போது தொடங்கவில்லை. ஃபியட் சிஇஓ ஒலிவியர் பிரான்சுவா, புண்டோவின் எதிர்காலத்தைப் பற்றிய சிலதகவல்களைப் பகிர்ந்து கொண்டார், அதில் எலெகட்ரிக் வாகனமாக இந்த கார் மீண்டும் வருவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டினார்.
ஒரு நேர்காணலில், பிரான்சுவா, ஒரு சாஃப்டான மற்றும் ஸ்போ்ட்டியான புண்டோ எலெக்ட்ரிக் காரை தயாரிக்கும் என்று குறிப்பிட்டார். இருப்பினும், அதன் வெளியீடு சாதகமான மார்கெட் நிலைமைகளைப் பொறுத்தது. எலெக்ட்ரிக் ஹேச்பேக்குகளுக்கு கணிசமான தேவை இருந்தால் மட்டுமே இந்த திட்டம் தொடரும். மார்கெட் அந்த திசையில் மாறினால் ஃபியட் பொருத்தமான தயாரிப்புகளுடன் தயாராக இருக்கும் என்று பிரான்சுவா உறுதியளித்தார்.

தற்போது, செடான்கள் மற்றும் எஸ்யூவிகள் எலெக்ட்ரிக் வாகன பிரிவே ஆதிக்கம் செலுத்துகின்றன. 2024 இன் அதிக விற்பனையாகும் மின்சார கார்களின் பட்டியலில் செடான்களில் டெஸ்லா மாடல் 3 மற்றும் BYD கின் பிளஸ் போன்ற மாடல்கள், மற்றும் எஸ்யூவிகளில் டெஸ்லா மாடல் Y மற்றும் ஃபோர்ட் மஸ்டாங் மாக்-இ போன்றவை உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், ஹேட்ச்பேக்குகள் இல்லை, ஐரோப்பாவில் வோக்ஸ்வாகன் ID.3 மட்டுமே உள்ளது.
ஃபியட் புண்டோ எலெக்ட்ரிக் காரை கொண்டு வர முடிவு செய்தால், அது STLA ஸ்மால் தளத்தைப் பயன்படுத்தலாம். இந்த கட்டமைப்பு, பியூஜோட் 208 மற்றும் ஒபல் கோர்சா போன்ற சப்-கம் பேக்ட் ஹேச்பேக்கு கார்களுக்கு பயன்படுத்தப்படும் CMP தளத்தின் மேம்படுத்தப்பட்ட எடிசன் ஆகும். இருப்பினும், இந்த தளத்தைப் பயன்படுத்துவது மற்ற ஸ்டெல்லாண்டிஸ் மாடல்களுடன் போட்டியை ஏற்படுத்தும்.

மாற்று யுத்தியில் STLA மீடியம் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு பெரிய புண்டோ எலெக்ட்ரிக்கை உருவாக்குவதும் முக்கியமானது. மீண்டும், இது ஸ்டெல்லாண்டிஸின் வரிசையில் போட்டியை ஏற்படுத்தும். மற்றொரு சாத்தியம் சிட்ரோன் C4 கார் போன்ற ஒரு கிராஸ்ஓவரை வடிவமைப்பதும் வரிசையில் உள்ளது. இருப்பினும், ஃபியட் கடந்த ஆண்டு வெளியான ஃபாஸ்ட்பேக் கான்செப்ட்டால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய மாடலை உருவாக்கி வருகிறது, இது 'சாஃப்ட் மற்றும் ஸ்போரட்டியான' வடிவமைப்பிலிருந்து வேறுபடுகிறது.
புகழ்பெற்ற புண்டோவின் அடுத்த தலைமுறைகள் இல்லாதது தற்போது கேள்விகளை எழுப்புகிறது. பொதுவாக, அத்தகைய மாடல்களுக்கு அடுத்த தலைமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. புண்டோவிற்கான அடுத்த தலைமுறை கார் ஒன்றை ஃபியட் திட்டமிட்டாலும், 2011 இல் பிரான்சுவா சிஇஓ ஆனபோது அது ரத்து செய்யப்பட்டது.
வணிக நடைமுறை மற்றும் மார்கெட் டிரெண்டுகள் புண்டோவின் அடுத்த தலைமுறை ரத்து செய்யும் முடிவை பாதித்தன. உலகளாவிய அளவில் கவர்ச்சிகரமான, அதிக விற்பனை சாத்தியம் கொண்ட மாடலை வெளியிட பிரான்சுவா திட்டமிட்டுக் கொண்டிருந்தார், இது ஹேட்ச்பேக்குகளை விட கிராஸ்ஓவர்கள் அல்லது எஸ்யூவிகளாக இருக்கும் என தோன்றியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனமாக புண்டோ மீண்டும் வருவது நிச்சயமற்றது. ஆனால் இப்படி இந்த கார் வெளியானால் நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும். எலெக்ட்ரிக் ஹேச்பேக்குகளுக்கு மாறிவரும் மார்கெட் டிரெண்ட் மற்றும் நுகர்வோர் விருப்பங்களைப் பொறுத்து இந்த முடிவுகள எடுக்கப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








