ஒரு வாரத்தில் 5 கார்கள் அறிமுகமாக போகுது.. புது கார் வாங்கும் பிளான் இருந்தா கொஞ்சம் வெயிட் பண்ணி பாருங்க!

நடப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் நிறைய புதிய கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. குறிப்பாக, இந்த ஒரு வாரத்தில் மட்டுமே ஐந்து புதிய மற்றும் சிறப்பு கார் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது இன்று (ஏப்ரல் 10) தொடங்கி வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள்ளாகவே இந்த ஐந்து புதிய கார் மாடல்களும் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. அவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

என்னென்ன கார் மாடல்கள் அறிமுகமாக இருக்கின்றன?, என்ன தேதியில் அறிமுகமாக இருக்கின்றன? என்னென்ன சிறப்பம்சங்கள் அந்த கார் மாடல்களில் இடம் பெற்றிருக்கும் என்பது போன்ற சுவாரஷ்ய மற்றும் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Citroen basalt dark edition

சிட்ரோன் சி3 டார்க் எடிசன் (Citroën C3 Dark Edition): இந்த கார் மாடல் இன்று (ஏப்ரல் 10) அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கிடைக்கும் எஸ்யூவி அம்சங்களைத் தாங்கிய ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும்.

இந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பையே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் சிட்ரோன் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. பலதரப்பட்ட அலங்கரிப்புடன் அது விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் டார்க் எடிசன் என்பதால் கார் முழுக்க கருப்பு நிறம் மிகப் பெரிய ஆக்கிரமிப்பைச் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Volkswagen tiguan r line

இப்போது வரை இந்த கார் பற்றிய எந்தவொரு முக்கிய விபரங்களும் வெளியாகவில்லை. இன்றே அது என்னமாதிரியான அலங்கரிப்பைக் கொண்டிருக்கும் என்பது தெரிய வரும். சமீபத்திய டீசர்களின் அடிப்படையில் இந்த டார்க் எடிசன் தனித்துவமான இருக்கை, சாம்பல் நிற அணிகலன்கள், சிவப்பு நிற தையல்களைக் கொண்ட டேஷ்போர்டு, ஆர்ம் ரெஸ்ட்டுகள் உள்ளிட்டவற்றை அது தாங்கியிருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த மாதிரியான அலங்கரிப்பையே மிகப் பெரிய அளவில் டார்க் எடிசன் சிட்ரோன் சி3 தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதைத்தாண்டி வேறு எந்த மாற்றமும் இதில் இருக்காது. குறிப்பாக, எஞ்சின் விஷயத்தில் வழக்கமான சி3 மற்றும் டார்க் எடிசன் சி3 இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். 1.2லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் அல்லது 1.2லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

New skoda kodiaq

சிட்ரோன் பசால்ட் டார்க் எடிசன் (Citroën Basalt Dark Edition): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் விலை குறைவான கூபே எஸ்யூவி ரக கார் மாடலே இந்த பசால்ட் ஆகும். இந்த அழகையே மேலும் மெருகேற்றும் விதமாகவே இதில் டார்க் எடிசனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சிறப்பம்சங்களைப் பொருத்த வரை இதுவும் வழக்கமான பசால்ட்டும் ஒரே மாதிரியே இருக்கும்.

ஆனால், அலங்கரிப்பில் டார்க் எடிசன் பசால்ட் மிகவும் தனித்துவமானதாக தெரியும். குறிப்பாக, டார்க் எடிசன் எனும் பேட்ஜ் காரின் இருக்கை மற்றும் வெளிப்புறங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி இருக்கை மற்றும் டேஷ்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் கான்ட்ராஸ்ட்டான தையல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. சிட்ரோன் பசால்ட் கார் மாடலின் உயர்நிலை தேர்விலேயே டார்க் எடிசன் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், பிரீமியம் அம்சங்களை அது மிக தாராளமாக தாங்கியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் டார்க் எடிசன் (Citroën C3 Aircross Dark Edition): சிட்ரோன் நிறுவனம் சி3 மற்றும் பசால்ட் ஆகிய கார் மாடல்களைப் போலவே சி3 ஏர்கிராஸ் மாடலிலும் டார்க் எடிசனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மேலே பார்த்த கார் மாடல்களை போலவே இதுவும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மேலும், எஞ்சினைப் பொருத்த வரை 1.2லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டர்போ மோட்டார் ஆப்ஷன்கள் இந்த கார் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் (Volkswagen Tiguan R-Line): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிரீமியம் எஸ்யூவி கார் மாடல்களில் டிகுவான்-ம் ஒன்றாகும். இதிலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆர்-லைன் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் வருகின்ற 14 ஆம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது.

அதிக கவர்ச்சியான தோற்றம் கொண்டதாகவும், அலங்கரிப்பைக் கொண்டதாகவும் இந்த வெர்ஷன் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதுமட்டும் அல்ல பெரிய அளவிலான தொடுதிரை இதில் வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்து உள்ளது. 15 அங்குல டச் ஸ்கிரீன் சிஸ்டமே இதில் இடம் பெற உள்ளது.

இதுமட்டுமல்ல வயர்லெஸ் சார்ஜிங் கருவி, 30 வண்ணங்களை அடக்கிய ஆம்பியன்ட் லைட், மூன்று ஜோன்களைக் கொண்ட கிளைமேட் கன்ட்ரோல், 10.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்களும் இந்த காரில் இடம் பெற உள்ளது. அதிக ஆடம்பர அம்சங்களை மட்டுமல்ல அதிக திறனை வெளியேற்றக் கூடிய கார் மாடலாகவும் டிகுவான் ஆர்-லைன் இருக்கும்.

2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 204 எச்பி மற்றும் 320 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 229 கிமீ ஆகும். இதேபோல், இது வெறும் 7.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த அளவு அதிக வேகத்தில் இயங்கும் கார் இது என்பதாலேயே பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருப்பதாக தெரிகின்றது. 9 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் லெவல் 2 அடாஸ் அம்சம் உள்ளிட்டவையே இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய ஸ்கோடா கோடியாக் (New Skoda Kodiaq): இந்த காரின் அறிமுகம் ஏப்ரல் 17 அன்றே அரங்கேற உள்ளது. இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக கோடியாக் உள்ளது. இதன் புதிய தலைமுறை வெர்ஷனையே விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஸ்கோடா நிறுவனம்.

எண்ணற்ற மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் இந்த புதிய கோடியாக் கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. குறிப்பாக, இப்போது இருப்பதைக் காட்டிலும் பிரீமியம் அம்சங்களை மிக தாராளமாக தாங்கியிருக்கும் என தெரிகின்றது. அந்தவகையில், மேட்ரிக்ஸ் புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், கன்னெக்டட் எல்இடி டெயில் லைட், புதிய மற்றும் அழகான கிரில் உள்ளிட்டவற்றை அது தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமல்ல இரண்டு பெரிய திரைகள், லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகள், மிதக்கின்ற மாதிரியான ஸ்டைலிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப், மூன்று ஜோன்கள் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

எஞ்சின் விஷயத்தில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டாரே இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. 4 x 4 தொழில்நுட்பமும் இதில் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 188 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களை புதிய கார்கள் வாயிலாக கவரும் நோக்கிலேயே வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு மற்றும் புதிய தலைமுறைகளை இந்த ஏப்ரல் மாதம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றனர். இந்த பட்டியலில் நாம் பார்த்த கார் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கப்படுகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 11:06 [IST]
English summary
Five mass market cars and suvs set to launch in india within the next week
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X