3 பேர் பயணிக்க கூடிய சோலார் மட்டுமல்ல இன்னும் பல கார்களை இங்கு வைத்தே அறிமுகம் செஞ்சிருக்காங்க.. முழு விபரம்!

கடந்த காலங்களில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-க்களைப் போலவே இந்த ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ-விலும் புதிய வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்பட்டன. அதாவது, காட்சிப்படுத்துதல், வெளியீடு செய்தல் மற்றும் விற்பனைக்கு அறிமுகப்படுத்துதல் என அனைத்தும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நிகழ்த்தப்பட்டன. அந்தவகையில், சமீபத்தில் தொடங்கிய பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-யை பயன்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப் 5 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் தொடங்கி மின்சாரத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளும் திறன் கொண்ட வேவி ஈவா சோலார் எலெக்ட்ரிக் காரும் இந்த வாகன கண்காட்சி வாயிலாகவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. வாங்க இதுபற்றிய விரிவான பதிவிற்குள் போகலாம்.

Key launches from auto expo 2025

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் அறிமுகம்: பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த உலக மேடையை பயன்படுத்தி இரண்டு கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நான்காம் தலைமுறை எக்ஸ்3 (X3) மற்றும் ஐஎக்ஸ்1 எல்டபிள்யூபி (iX1 LWB) ஆகிய கார் மாடல்களையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

முதல் ஒன்று ரூ. 75.80 லட்சம் தொடங்கி ரூ. 77.80 லட்சம் வரையிலான விலையிலும், இரண்டாவது மாடல் ரூ. 49 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இதில் ஐஎக்ஸ்1 எல்டபிள்யூபி என்பது மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

Vayve eva ev

66.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது. பெரிய பேட்டரி பேக் தேர்வு மட்டுமல்ல பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், டிரைவருக்காக 10.25 அங்குல அளவுள்ள டிஜிட்டர் திரையும், 10.7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமல்ல, 12 ஸ்பீக்கர்கள் ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டம், மசாஜ் மற்றும் எலெக்ட்ரிக் வாயிலாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமல்ல, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Hyundai creta ev

இதுதவிர, 8 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமிரா, பார்க் அசிஸ்ட் மற்றும் டிரைவர் அசிஸ்ட் போன்ற அம்சங்கலும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் காரணமாக இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்பை பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 எல்டபிள்யூ பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைப்போலவே அதிக சிறப்பம்சங்கள் தாங்கியதாக எக்ஸ்3 கார் மாடல் இருக்கின்றது. இது இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட பெட்ரோல் ஆப்ஷன் மற்றும் டீசல் ஆப்ஷனே அவை ஆகும். பெட்ரோல் மோட்டார் 190 பிஎச்பி-யையும், டீசல் ஆப்ஷன் 197 எச்பி-யையும் வெளியேற்றும் என்பது குறிப்பிட்தகுந்தது. இதன் டெலிவரி பணிகள் ஏப்ரல் மாதத்திலேயே தொடங்க இருக்கின்றன.

மினி கூப்பர் எஸ் ஜேசிடபிள்யூ (Mini Cooper S JCW): மினி நிறுவனம் இந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவை பயன்டுத்தி தன்னுடைய கார் மாடலை இந்தயாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 55.9 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி உள்ளன. ஏப்ரலில் டெலிவரி பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric): இந்தியர்களின் எதிர்பார்ப்பை மிகப் பெரிய அளவில் கவர்ந்து வந்த கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரை ஏற்கனவே வெளியீடு செய்துவிட்ட நிலையில், இதன் விலைகளை ஆட்டோ எக்ஸ்போவில் வைத்தே ஹூண்டாய் அறிவித்தது. ரூ. 17.99 லட்சம் தொடங்கி ரூ. 23.50 லட்ச் என்கிற விலையிலேயே இது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. 42 kWh மற்றும் 51.4 kWh பேட்டரி பேக் தேர்வுகளே அவை ஆகும் ஓர் முழு சார்ஜில் 390 கிமீ முதல் 473 கிமீ தூரம் வரை இவை ரேஞ்ச் தரும். ரேஞ்ச் தருவதில் மட்டுமல்ல அதிக பிரீமியம் அம்சங்களையும் இந்த கார் மாடல் தன்னுள் தாங்கியிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

வேவி ஈவா சோலார் எலெக்ட்ரிக் கார் (Vayve EVA Solar Car): இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் சோலார் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும். இந்த காரில் மூன்று பேர் மட்டுமே பயணிக்க முடியும். முன்பக்கத்தில் ஒருவர் (டிரைவர்) மட்டுமே அமர முடியும்.

பின்னிருக்கையில் இருவரால் அமர முடியும். ஆனால், மெல்லிய தேகம் கொண்டவர்களால் மட்டுமே அமர சொகுசாக அமர்ந்து பயணிக்க முடியும். இதற்கு இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையாக ரூ. 3.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. அதிகபட்ச விலையே ரூ. 5.99 லட்சம் மட்டுமே ஆகும்.

இந்த காரை 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' பிளானின்கீழும் வாங்கிக் கொள்ள முடியும். 9 kWh, 14 kWh மற்றும் 18 kWh ஆகிய மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றது. சூரிய ஒளியில் மட்டுமல்ல வீட்டில் வைத்தும் இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைஸ்பார்க் கருத்து: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஐந்து தரமான கார் மாடல்களை மேலே நாம் பார்த்தோம். இவை வரும் நாட்களில் விற்பனையில் மிகப் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 22, 2025, 5:00 [IST]
English summary
Five significant product launches from auto expo 2025 showcasing innovation
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X