பல்க் ஆர்டர் போட்டாச்சு... இராணுவத்தில் இனி இந்த காரை பார்க்கலாம் - ஆனா மக்கள் யாரும் அதிகம் வாங்க மாட்றாங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தார் (Thar) வாகனத்திற்கு போட்டியாக பல நிறுவனங்கள் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனத்தை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) கூட 2023ஆம் ஆண்டில் ஜிம்னி (Jimny) வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ஆனால், ஜிம்னியின் வருகைக்கு முன்பு இருந்தே மஹிந்திரா தாருக்கு ஒரு வாகனம் விற்பனையில் போட்டியாக உள்ளது. அதுதான், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors) நிறுவனத்தின் குர்கா (Gurkha) வாகனம் ஆகும்.

கடந்த சில வருடங்களாகவே மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் ஃபோர்ஸ் குர்கா வாகனம் எந்த விதத்திலும் மஹிந்திரா தாருக்கு சளைத்தது கிடையாது. இந்த ஃபோர்ஸ் வாகனத்தின் விலை சற்று அதிகமாக இருப்பதினாலேயே நிறைய பேரால் குர்காவை வாங்க முடியவில்லை. அதிக விலைக்கு ஏற்ப சிறந்த செயல்திறனுக்காகவும், ஆஃப்-ரோடு பயணங்களுக்காகவும் குர்காவில் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

force gurkha for indian defence

ஃபோர்ஸ் குர்காவின் திறனை சரியாக புரிந்துக் கொண்ட மத்திய அரசாங்கம் இந்திய பாதுகாப்பு படைகளில் ஃபோர்ஸ் குர்கா வாகனங்களை உட்படுத்த உள்ளது. இதற்காக, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் மொத்தம் 2,978 குர்கா வாகனங்களை உற்பத்தி செய்து கொடுக்கும்படி இந்திய பாதுகாப்பு படைகளின் சார்பில் பெரிய ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்திய இராணுவத்திலும், இந்திய விமான படையிலும் ஃபோர்ஸ் குர்கா வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கு ஏற்றவாறு பிரத்யேகமாக குர்கா வாகனங்களை தயாரித்து கொடுக்கும்படி ஃபோர்ஸ் நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய பாதுகாப்பு படைகளுக்காக வாகனங்களை உருவாக்கி கொடுப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல.

கடந்த பல வருடங்களாக, குர்கா எல்.எஸ்.வி (Light Strike Vehicle) வாகனங்களை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு வழங்கி வருகிறது. ஏற்கனவே கூறியதுபோல், பொது விற்பனையில் உள்ள குர்கா வாகனத்தை கூட கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப ஃபோர்ஸ் நிறுவனம் உருவாக்குகிறது.

இதற்கேற்ப, குர்கா வாகனத்தின் அடிப்பகுதி தரையில் இருந்து நன்கு உயரமாக வழங்கப்படுவதுடன், இந்த வாகனத்தை 70 செண்டி மீட்டர் ஆழமுள்ள நீரில் கூட கொண்டு செல்லலாம். மேலும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப பவர்ஃபுல்லான 4x4 பவர்டிரெயின் குர்காவில் வழங்கப்படுகிறது. பாலைவன பகுதியில் இருந்து கரடு முரடான மலைப்பாதைகள் வரையில் எந்தவொரு இடத்திற்கும் கொண்டு செல்லக்கூடியவைகளாக குர்கா வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வளவு நேரம் நாங்கள் கூறியது எல்லாம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் ஃபோர்ஸ் குர்கா வாகனத்தை பற்றி ஆகும். இந்திய பாதுகாப்பு படைகளுக்காக என்றால், இன்னும் தரமான குர்கா வாகனங்களை வழங்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சிக்கும். மார்க்கெட்டில் தற்சமயம் 3-டோர் மற்றும் 5-டோர் என 2 விதமான பாடி ஸ்டைல்களில் குர்கா விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இரு பாடி ஸ்டைல்களிலும் ஃபோர்ஸ் குர்காவில் 2.6 லிட்டர் டர்போசார்ஜ்டு இண்டர்-கூல்டு டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் இந்த டர்போ டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 138 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமான படைகளில் பயன்படுத்தும் அளவிற்கு ஃபோர்ஸ் குர்கா மிகவும் சரியான வாகனம் ஆகும். அதுமட்டுமின்றி, குர்கா வாகனங்களை இந்திய பாதுகாப்பு படைகளுக்காக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி கொடுப்பது இது ஒன்றும் முதல்முறை இல்லை. குர்காவின் விற்பனை பொது வெளியில் பெரியதாக இல்லாவிட்டாலும், இவ்வாறு பெரிய ஆர்டர்கள் மூலமாக ஃபோர்ஸ் மோட்டார்ஸின் தொழில் ஓடிக்கொண்டிருக்கிறது.

FAQs
ஃபோர்ஸ் குர்காவில் வழங்கப்படும் அலாய் சக்கரங்களின் அளவு என்ன?

18-இன்ச்

ஆஃப்-ரோடு பயணங்களுக்காக ஃபோர்ஸ் குர்காவில் வழங்கப்படும் முக்கியமான அம்சம் என்ன?

முன் & பின்பக்க லாக்கிங் டிஃப்ரென்ஷியல் (Locking Differential).

ஃபோர்ஸ் குர்காவில் இயக்க ஆற்றல் வாகனத்தின் எந்த சக்கரங்களுக்கு செல்கிறது?

வாகனத்தின் அனைத்து 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில்.

DriveSpark Automotive

More from DriveSpark

Article Published On: Thursday, March 27, 2025, 23:59 [IST]
English summary
Force gurkha suv ordered for indian defence forces
மேலும்... #force motors #gurkha #indian army
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+