சென்னையில் 12,000 பேர் வேலைக்கு ஆப்பு! மோடி செய்த வேலையால் எல்லாமே போச்சு!
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டது. இந்நிறுவனம் சென்னையில் உள்ள ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த முடிவை கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியமாகன காரணமாக இருக்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஃபோர்டு, இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்நிறுவனம் சென்னையில் மறைமலை நகர் பகுதியில் சொந்தமாக ஆலை ஒன்றை வைத்துள்ளது. இந்நிறுவனம் செயல்பாட்டில் இருக்கும்போது இரண்டு ஆலைகளை நடத்தி வந்தது. தற்போது அதில் ஒரு ஆலையை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஆலையை இன்றும் ஃபோர்டு நிறுவனம் தான் சொந்தமாக வைத்துள்ளது. இந்த ஆலையில் கடந்த 2022ம் ஆண்டு மத்தியில் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது இந்த ஆலை பூட்டி தான் கிடைக்கிறது. இந்நிலையில் இந்த ஆலையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருந்தது.
செயல்பாட்டிற்கு வருகிறது என்றால் மீண்டும் வாகனம் தயாரிக்கும் திட்டம் கிடையாது. மாறாக ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இன்ஜனின்களை தயாரித்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என திட்டமிட்டது. குறிப்பாக அமெரிக்காவிற்கு இன்ஜின்களை மட்டும் விற்கலாம் என திட்டமிட்டிருந்தது. இதற்காக சில முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா தற்போது முக்கியம் இல்லை என்ற காரணத்துடன் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து விசாரித்த போது அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள வரி தான் ஃபோர்டு நிறுவனத்தை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் உள்ள ஆலையில் இந்நிறுவனம் இன்ஜின் தயாரிப்பை துவங்கினாலும் அதை அமெரிக்க மார்கெட்டிற்கு ஏற்றுமதி செய்தால் அந்நிறுவனத்திற்கு லாபமாக இருக்காது. இதனால் ஃபோர்டு நிறுவனம் இந்த முடிவை கைவிடும் அபாயம் ஏற்பட்டள்ளது.
அதே நேரம் ஃபோர்டு நிறுவனம் ஐரோப்பிய மார்கெட்டில் 4.4 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை செய்யப்போவாதக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிற்கான முதலீடுகளும் அடங்கும். இது போக பேட்டரிக்கான ஆய்வுகூடங்களுக்காகவும் அந்நிறுவனம் பெரிய முதலீட்டை செய்யப்போகிறது. இதனால் இந்தியாவிற்கு அந்நிறுவனம் செய்த திட்டம் மாறுமோ என்ற பதற்றம் பலருக்கு நிலவி வருகிறது. குறிப்பாக தமிழர்கள் பலர் இந்த நிறுவனம் செயல்பாட்டிற்கு வந்தால் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.

இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும் போது சென்னை ஆலை குறித்த முடிவை அந்நிறுவனம் மாற்றவில்லைஎன்றும் அங்கு தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், என்னதயாரிக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யவில்லை என்றும், இது குறித்த விரிவான தகவல்கள் வர சற்று காலம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஃபோர்டு ஆலை பயன்பாட்டிற்கு வந்தால் நேரடியாகவும் முறைமுகமாகவும் 12,000 பேர் வேலை வாயப்பை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா மீது டிரம்ப் விதித்துள்ள வரியால் இந்த முடிவை எடுப்பதில் அந்நிறுவனம் காலதாமதம் செய்துள்ளது என புரிந்துகொள்ள முடிகிறது. இதன் காரணமாக அமெரிக்கா அல்லாத மற்ற மார்கெட்டிற்கு தேவையான பொருட்களை அந்த ஆலையை உற்பத்தி செய்ய திட்டமிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு ஃபோர்டு நிறுவனத்துடன் பேசி தமிழக ஆலையை விரைந்து துவக்க வைக்க அழுத்தம் கொடுத்த வருகிறது. ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் இந்தியா ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியாவின் முக்கியமான மாநிலமாக மாற உதவி செய்யும் இதற்கான முயற்சிகள் தான் எடுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications









