காரை முன்னால் பார்த்து ஏமாறாதீங்க! காரை உருவாக்கியவர்கள் பார்த்தால் கண்ணீர் விடுவார்கள்

ஃபோர்டு (Ford), அமெரிக்காவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். ஆனால், வேறு வழியில்லாமல் இந்தியாவில் இருந்து சில வருடங்களுக்கு முன்னர் விடைபெற்று சென்றது. அதாவது, இந்தியாவில் இருந்து முழுவதுமாக வணிகத்தை ஃபோர்டு நிறுத்திக் கொண்டது. கார்கள் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதுதான் இந்தியாவில் இருந்து ஃபோர்டு வெளியேறியதற்கு முக்கியமான காரணம் ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் ஓரளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக ஃபிகோ (Figo)-ஐ சொல்லலாம். அத்தகைய ஃபோர்டு ஃபிகோ காரை தான் இங்கு ஒருவர் நீளமான காராக மாற்றிக் கொண்டுள்ளார்.

எந்த அளவிற்கு நீளமான கார் என்றால், 3 ஃபிகோ கார்கள் ஒன்றாக இணைக்கப்பட்டால் எவ்வளவு நீளம் வருமோ அந்த அளவிற்கு இந்த குறிப்பிட்ட ஃபிகோ கார் மாற்றப்பட்டுள்ளது. இதனாலேயே இந்த மாடிஃபை செய்யப்பட்ட ஃபிகோ காரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ford figo car modified

இவ்வாறான நீளமான கார்களை சில வெளிநாட்டு கார் நிறுவனங்கள் உருவாக்குகின்றன. அவற்றை லிமௌசைன் (Limousine) என அழைக்கின்றனர். லிமௌசைன் கார்களை பெரும்பாலும் ஒரு நாட்டின் அதிபர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களும், பெரும் செல்வந்தர்களும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனாலேயே லிமௌசைன் கார்கள் மிகவும் பிரத்யேகமானவைகளாக உருவாக்கப்படுகின்றன; அவற்றின் விலைகளும் அதிகமாக உள்ளன.

அவ்வாறான லிமௌசைன் காரை வாங்க முடியாத விரக்தியில் தான் இவ்வாறு ஃபோர்டு ஃபிகோ காரை இங்கு சிலர் இவ்வாறு நீளமானதாக உருவாக்கி உள்ளனர் என நினைக்கிறோம். ஃபோர்டு ஃபிகோ ஆனது ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் மிகவும் அளவில் சிறியதான மற்றும் விலை குறைவான கார் ஆகும்.

ford figo car modified

அத்தகைய காரை தான் பாதியாக வெட்டி, அவற்றிற்கு இடையே நீளமான இரும்பு கம்பிகளை இணைத்து, இவ்வாறு நீளமான காராக உருவாக்கி உள்ளனர். அதாவது, இந்த நீளமான காருக்கு முன்னாலும், பின்னாலும் இருப்பது ஃபிகோ கார் ஆகும். இவ்வாறு காரை இரண்டாக வெட்டி, அதற்கு இடையில் மிக பெரிய பாகத்தை இணைப்பது என்பது நாம் நினைப்பதை காட்டிலும் மிகவும் சவாலான காரியம் ஆகும்.

ஏனெனில், எந்தவொரு காருக்கு அடியிலும் எக்ஸாஸ்ட் குழாய், டிரான்ஸ்மிஷன் ஷாஃப்ட் உள்பட நிறைய கேபிள் வயர்கள் செல்லும். காரை பாதியாக வெட்டும்போது அவற்றையும் தான் சேர்த்து வெட்ட வேண்டியதாக இருக்கும். ஒரு சில வயர்கள் & குழாய்களை வெட்ட முடியாத/கூடாத கட்டாயம் ஏற்படும்போது அவற்றிற்கான மாற்று வழியை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்.

ford figo car modified

எல்லாவற்றையும் விட முக்கியமாக, காரின் அடிப்படையான சேசிஸை வெட்ட வேண்டியிருந்ததால், இந்த குறிப்பிட்ட ஃபிகோ காருக்கு அடியில் புதிய ஃபிரேமை பிரத்யேகமாக உருவாக்கி இணைத்துள்ளனர். இந்த காரின் மேற்கூரையில் பெரும்பான்மையான பகுதி கண்ணாடியால் வழங்கப்பட்டுள்ளதால், காருக்கு உள்ளே அதிக ஒளி கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்லா வேலைகளும் முடிந்த பின் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துள்ளனர். அந்த காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதனை பார்க்கும்போது, இந்த நீளமான காரை ஓட்டுவதில் எந்த பிரச்சனையும் இருப்பதுபோல் தெரியவில்லை. இருப்பினும், இவ்வாறான அதிக நீளமான காரை சாலையில் ஓட்டும்போது எந்நேரமும் மிகவும் கவனம் தேவை. இன்னும் சொல்லப்போனால், இந்த காரை சாலையில் போலீசார் பார்த்தார்கள் என்றால் கொத்தாக பறிமுதல் செய்துவிடுவர்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 20, 2025, 17:22 [IST]
English summary
Ford figo car modified to extended wheelbase
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X