இவரே பேசுனதுக்கு அப்புறம் நடக்காம இருக்குமா? இன்னும் சில மாதங்களில் சென்னைக்கு நல்ல செய்தி வரப்போகுது!

ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தைக்கு மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறு, வாகனத் துறையில் ஒரு பெரிய பேசுபொருளாக மாறி வருகிறது. இந்திய சந்தைக்கு மீண்டும் நுழைவதற்கான திட்டத்தை அந்த நிறுவனம் இன்னும் மதிப்பீடு செய்து வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்தாண்டு ஆண்டு கோடைகாலத்தின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாமதம், உலகளவில் முக்கிய நாடாக மாறிய இந்திய மார்கெட்டிற்க்கு ஃபோர்டு தனது அணுகுமுறையை மறுமதிப்பீடு செய்ய உதவுகிறது.

இந்திய மார்கெட்டிலிருந்து வெளியேறியபோதிலும், சென்னையில் ஒரு பெரிய தொழிற்சாலையை ஃபோர்டு நிறுவனம் இன்றும் சொந்தமாக வைத்திருக்கிறது. அ்ந்நிறுவனத்தின் சனந்த் ஆலையை டாடா மோட்டார்ஸ் வாங்கியது. ஃபோர்டு எவரெஸ்ட் (என்டெவர்) மற்றும் ரேஞ்சர் பிக்-அப் டிரக் போன்ற சோதனை மாடல்கள் இந்தியாவில் காணப்பட்டதால், எதிர்காலத்தில் ஃபோர்டு மார்கெட்டிற்க்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை குறிப்பிடுகின்றன.

Ford India Chennai Plant

தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் ஃபோர்டுஅதிகாரிகளை சந்தித்தார், ஆனால் எந்தவொரு உறுதியான முடிவுகளும் வெளியிடப்படவில்லை. இந்த விஷயத்தில் நமக்கு தெரிந்த தகவலின்படி, ஃபோர்டு நிர்வாகக் குழு ஜனவரி 2025ல் இந்தியத் திட்டங்களைப் பற்றி விவாதித்தது, ஆனால் உடனடியாக எதையும் அறிவிக்கவில்லை.

தற்போது, ஃபோர்ட் தனது சென்னை ஆலையை சர்வதேச மார்கெட்களுக்குப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், இந்த ஆலை ஏற்றுமதிக்காக மட்டுமா அல்லது இந்தியாவுக்கு மீண்டும் வருவதற்கான திட்டம் ஏதும் இருக்கிறதா என அவர்கள் எந்தவொரு குறிப்பிட்ட விவரங்களையும் வெளியிடவில்லை. இன்னும் சில மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது

Ford India Chennai Plant

மார்கெட் நிபுணர்கள், சென்னை அருகே உள்ள மறைமலைநகர் ஆலையை புதுப்பிக்க சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 2,614 கோடி) வரை செலவாகும் என்று கூறுகிறார்கள். இந்த ஆலை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது. நவீன தரங்களை பூர்த்தி செய்ய அதற்கு பெரிய அப்டேட்கள் தேவை. அப்பொழுது தான் தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

முன்னதாக, ஃபோர்டு, இந்தியாவின் 4 மீட்டருக்கு குறைவான SUV பிரிவில் எகோ ஸ்போர்ட் மூலம் வெற்றி பெற்றது. டொயோட்டா ஆதிக்கம் செலுத்தும் பெரிய SUV மார்கெட்டில் அவர்களுக்கு வலுவான இருப்பு இருந்தது. இருப்பினும், ஃபிக்கோ, ஸ்பைர், மற்றும் ஃபிரீஸ்டைல் போன்ற அவர்களின் மக்கள் மத்தியில் பிரபலமான வாகனங்களின் விற்பனை காலப்போக்கில் குறைந்து வந்தது.

Ford India Chennai Plant

ஃபோர்ட் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான அதிக அறிகுறிகள் இருந்தாலும், தாமதத்திற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடுவதற்கு முன்பு பல்வேறு அளவுருக்களை கருத்தில் கொண்டு ஃபோர்ட் தனது திட்டங்களை மேம்படுத்த நேரம் தேவை. இதனால் அடுத்த சில மாதங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.;

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிற்கு மீண்டும் வந்தால் நிச்சயம் இந்தியாவில் மிகப்பெரிய போட்டி உருவாகும். எஸ்யூவி பிரிவு வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல மவுசு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்திய மார்கெட்டும் விரிவடைந்து வருவதால் நிச்சயம் இது மிகப்பெரிய மாற்த்தை கொண்டு வரும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2025, 11:19 [IST]
English summary
Ford is contemplating its return to the Indian automotive market, with a decision anticipated in late summer 2025. The company continues to utilise its Chennai facility for global production while evaluating the necessary investments for local operations.
மேலும்... #ford #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X