இந்த கார்களை வாங்கும்போது மிச்சமாகுற காசுல இன்னொரு புது காரை வாங்கலாம்! எவ்வளவு மிச்சமாகுது தெரியுமா?
மத்திய அரசு வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பை அமலுக்கு கொண்டு வருகிறது. இதனால் வாகனங்களில் விலைகள் எல்லாம் கணிசமாக குறைகின்றன. இந்நிலையில் அதிகபட்சமாக முழு சைஸ் எஸ்யூவி கார்களின் விலை லட்ச கணக்கில் குறைகிறது. இது எந்த அளவிற்கு என்றால் குறையும் விலையில் ஒரு குட்டி புது காரே வாங்கிவிடலாம். அந்த அளவிற்கு விலை குறைகிறது. எந்தெந்த கார் எவ்வளவு விலை குறைகிறது என காணலாம் வாருங்கள்.
டொயோட்டா ஃபார்ச்சூனர்
டொயோட்டா நிறுவனம் முழு சைஸ் எஸ்யூவி கார் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தகார் விற்பனவையில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த காரின் விலை ரூ2.40 -ரூ3.49 லட்சம் வரை விலை குறைகிறது. தற்போது இந்த கார் ரூ36.05 லட்சம் முதல் ரூ52.34 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. விலை குறைப்பிற்கு பிறகு ரூ33.65 லட்சம் முதல் ரூ48.85 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும்.

ஸ்கோடா கோடியாக்
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியாக் காரை பொருத்தவரை ஜிஎஸ்டி விலை குறைப்பில் ரூ3.13 லட்சம் முதல் ரூ3.28 லட்சம் என்ற அளவில் விலை குறைந்துள்ளது. இந்த கார் தற்போது ரூ46.89 லட்சம் முதல் ரூ49.24 லட்சம் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு ரூ43.76 லட்சம் முதல் ரூ45.96 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
ஜீப் மெரிடியன்
ஜீப் நிறுவனத்தின் மெரிடியன் காரை பொருத்தவரை ரூ1.66 லட்சம் முதல் ரூ2.47 லட்சம் வரை ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு விலை குறைகிறது. இந்த கார் தற்போது ரூ24.99 லட்சம் முதல் ரூ36.79 லட்சம் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு ரூ23.33 லட்சம் முதல் ரூ34.34 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

எம்ஜி குளோஸ்டர்
எம்ஜி நிறுவனத்தின் குளோஸ்டர் காரை பொருத்தவரை தற்போது ரூ41.07 லட்சம் முதல் ரூ46.23 லட்சம் வரையிலான விலையில் விற்பவனையாகி வருகிறது. இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பில் ரூ2.71 லட்சம் முதல் ரூ3.04 லட்சம் வரை விலை குறைகிறது. இதனால் இனி இந்த கார் ரூ38.36 லட்சம் முதல் ரூ43.19 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்ரோன் சி5 ஏர்கிராஸ்
இந்த பட்டியலில் கடைசியாக இருப்பது சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் கார் தான். இந்த கார் ஒரே ஒரு வேரியன்டில் தான் விற்பனையாகிறது. இந்த கார் தற்போது ரூ39.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஜிஎஸ்டி குறைப்பில் ரூ2.70 லட்சம் வரை விலை குறைகிறது. இந்த கார் இனி ரூ37.32 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பில் அதிக பலனை பெறுவது இந்த பெரிய ரக கார்கள் தான். இந்த கார்களுக்கு இதற்க முன்னர் 28 சதவீத ஜிஎஸ்டி வரி போக கூடுதலாக 22 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்பட்டது. இதனால் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இனி இந்த கார்களுக்கு ஸ்பெஷல் ஜிஎஸ்டி வரியான 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்த கார்களின் விலையில் 10 சதவீதம் வரை வரி குறைகிறது.இதன் காரணமாக தான் இந்த காரின் விலையும் அதிகமாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முழு சைஸ் எஸ்யூவி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிக விலை காரணமாக விற்பனை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இந்த கார்கள் மக்களுக்கு அதிக பலனை வழங்கி வருகிறது. இதனால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இந்த ரக காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த கார்களில் உங்களுக்கு பிடி்தத காரை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









