கம்மியா தான் வித்திருக்குது! ஆனாலும் கம்பெனிக்கு செம லாபம்! எப்படி தெரியுமா?

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. எஸ்யூவி கார்கள் என்றால் முழு சைஸ் எஸ்யூவி கார்கள் தான். மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் அதிகம் விரும்பப்படுவதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இதில் பல்வேறு வகையான வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் முழுமையான எஸ்யூவிகளுக்க இந்தியாவில் தொடர்ந்து தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் விற்பனையான டாப் முழு சைஸ் எஸ்யூவிகள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் தான். இந்த கார் கடந்த மார்ச் மாதம் மட்டும் மொத்தம் 3392 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதே நேரம் கடந்தாண்டு மொத்தம்3621 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் படி பார்த்தால் கடந்த மார்ச் மாத விற்பனை பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது..

Full Size SUV Sales

டொயோட்டா நிறுவனம் இந்த ஃபார்ச்சூனர் காரில் எம்எச்இவி வாகனத்தை 2025ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் சர்வதேச அளவில் மைல்டு ஹைபிரிட் வெர்ஷனாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ39.32 லட்சம் முதல் ரூ61.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 9 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் வீல் டிரைவ் மற்றும் 2வீல் டிரைவ் ஆகிய ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இந்தியாவில் பெரிய பிரபலங்கள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் எனபலர் இந்த காரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பல மாநிலத்தில் உள்ள முதல்வர்கள், ஏன் பிரதமர் மோடி கூட இந்த காரை பயன்படுத்தி வருகிறார்.

Full Size SUV Sales

அடுத்த இடத்தில் ஜீப் நிறுவனத்தின் மெரிடீயன் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மாதம் மொத்தம் 112 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 96 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது ஒரே ஆண்டில் 17 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்த காருடன் விற்பனை அதிகரிப்பை பெற்ற கடைசி கார் இது தான். பட்டியலில் உள்ள மற்ற கார்களில் விற்பனை சரிவை தான் கடந்த மார்ச் மாதம் சந்தித்துள்ளது.

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ29.77 லட்சம் ரூ45.97 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 9 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே விற்பனையாகி வருகிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.

Full Size SUV Sales

இந்த பட்டியலில் 3வது இடத்தில் எம்ஜி குளோஸ்டர் கார் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 100 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 131 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 24 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 2 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைந்துள்ளது.

இந்த காரின் விற்பனையை பொருத்தவரை ரூ46.38 லட்சம் முதல் ரூ52.39 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 15 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் 6 மற்றும் 7 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் பாதுகாப்பு அம்சங்களில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் 4வது இடத்தில் ஸ்கோடா கோடியாக் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மார்ச் மொத்தம் 13 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 136 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் 90 சதவீதம் விற்பனை சரிவடைந்துள்ளது. இந்த கார் இந்தியாவில் தற்போது தனது பிரபலத்தை இழந்து வருகிறது.

ஸ்கோடா கோடியாக் காரை பொருத்தவரை ரூ54.48 லட்சம் முதல் ரூ56.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இ்நத கார் 2 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் ஆட்டோமெட்டிக் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.இந்த காரின் சிறப்பான உட்புற கட்டமைப்பு மற்றும் இட வசதிக்காக பெயர் பெற்ற காராக இருக்கிறது.

இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் கார் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் வெறும் 1 கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 94 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை 99 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிவடைந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டிகுவான் ஆர்லைன் காரை முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்கள் அதிகமாக விற்பனையானாலும் முழு சைஸ் கார் அதிகமாக விற்பனையாகாததற்கு காரணம் அதன் விலை தான். இந்தியாவில் முழு சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனையாகும் விலையில் அதை வாங்கும் பொருளாதார வசதி கொண்ட வாடிக்கையாளர்கள் மிக குறைவாக தான் இருக்கிறார்கள். அதனால் விற்பனை எண்ணிக்கை குறைவு தான்.

அதே நேரம் இந்த விலையில் வாகனம் வாங்குபவர்கள் முழு சைஸ் எஸ்யூவி காரை விட அதிகம் சொகுசு பிராண்ட்களின் காரை விரும்புகிறார்கள். இதில் விதிவிலக்காக டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் இந்த காரை பயன்படுத்துவது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இதனால் இந்த கார் விற்பனை எண் மட்டும் அதிகமாக இருக்கிறது. மற்ற கார்கள் விற்பனையில் திண்டாடி தான் வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முழு சைஸ் எஸ்யூவி கார் சிறப்பாக விற்பனையாகவில்லை என்றாலும் இதன் விற்பனை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த செக்மெண்டில் கார் விற்பனை அதிகமானால் இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது என்ற பொருள் இருக்கிறது. அதிக விலை கொடுத்து மக்கள் கார் வாங்கும் நிலை இருந்தால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று தானே அர்த்தம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 18, 2025, 23:30 [IST]
English summary
Full size suv sales march 2025 know full list
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X