எல்லா பக்கத்திலும் எடையை குறைச்சிருக்காங்க... சக்கரங்களுக்கு நடுவே ஒரு ஆள் படுத்து தூங்கலாம்!

கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors) நிறுவனம் எப்லு சீட்டி (Eblu Cety) என்கிற பெயரிலான அதன் 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா (Electric Auto Richshaw)-ஐ டெல்லியில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. சமீபத்தில்தான் எப்லு சீட்டி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதனை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட எப்லு சீட்டி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது.

ராய்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம், 2025 ஆட்டோ எக்ஸ்போவில் தனது பல்வேறு புதிய வாகனங்களை காட்சிக்கு நிறுத்தியது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமின்றி, 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களும் பார்வையாளர்கள் முன் காட்சிப்படுத்தப்பட்டன.

eblu cety electric auto rickshaw

சில புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களை விலைகள் உடன் 2025 ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கோதாவரி நிறுவனம், சில ஆட்டோ ரிக்‌ஷாக்களை வெறுமனே பார்வையாளர்கள் முன் காட்சி மட்டும் செய்தது. அவ்வாறு, காட்சி செய்யப்பட்ட கோதாவரியின் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களில் ஒன்றுதான், எப்லு சீட்டி ஆகும்.

கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகளை அழைத்து செல்வதற்கான இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த கலவையில் அறிமுகம் செய்யப்பட்ட எப்லு சீட்டி ஆட்டோ ரிக்‌ஷா, தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது.

eblu cety electric auto rickshaw

இதில் இருந்து எப்லு சீட்டி ஆட்டோவை கோதாவரி நிறுவனம் அப்டேட் செய்திருப்பதை அறிய முடிகிறது. வழக்கமான நம்ம ஊர் 3-சக்கர ஆட்டோ ரிக்‌ஷாக்களில் டிரைவருக்கு பின்னால் 2 அல்லது 3 பேர் அமரலாம். ஆனால், இந்த ஆட்டோ ரிக்‌ஷாவில் இன்னும் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய முடியும். ஏனெனில், எப்லு சீட்டி எலக்ட்ரிக் ஆட்டோவில் பின்னால் எதிரெதிரே இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது எப்லு சீட்டி ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது. உலக இவி தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு அறிமுகத்திற்கு முன்னதாகவே 100க்கும் மேற்பட்ட புக்கிங்குகள் குவிந்தன. இந்த ஆட்டோ ரிக்‌ஷாவின் நீளம் 2795மிமீ, அகலம் 993மிமீ மற்றும் உயரம் 1782மிமீ ஆகும்.

eblu cety electric auto rickshaw

முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2170மிமீ ஆகும். இந்த ஆட்டோவில் 51.2 வோல்ட் மின்னழுத்தம் மற்றும் 100 ஆம்பியர் திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 95கிமீ வரையில் 100% சார்ஜில் செல்லலாம். அதிகப்பட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை பின்னோக்கியும் ஓட்டலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்லு சீட்டி எலக்ட்ரிக் ஆட்டோவின் நிறத்தை தவிர்த்து பெரியதாக எதுவும் மாற்றப்பட்டு இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம். ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் தான் எப்லு சீட்டி ஆட்டோ ரிக்‌ஷாவை கோதாவரி நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது அல்லவா... இந்த புதிய பச்சை-மஞ்சள் நிற எப்லு சீட்டி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2025, 10:40 [IST]
English summary
Godawari eblu cety electric auto rickshaw showcased at 2025 auto expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X