இவ்வளவு கம்மி விலையில் இவி ஆட்டோவா? வாங்கி ஓட்டுனா ஏகப்பட்ட காசு மிச்சமாகுமே!

2025 ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் புதிய வகை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் Eblu Rozee ECO மற்றும் Eblu Rozee ஆகிய ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இவை இரண்டும் கடைசி மைல் போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காலாம் வாருங்கள்

கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் Eblu Rozee ECO மற்றும் Eblu Rozee ஆகிய ஆட்டோக்கள் குறிப்பிட்ட சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனமாக உருவாாக்கப்பட்டுள்ளது. இதில் Eblu Rozee ECO ஆட்டோ INR 2,95,999 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Godawari Eblu Rozee ECO

Eblu Rozee ECO என்பது வணிகப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வலுவான 3 வீலர் வாகனம். இது 150 Ah Li-ion பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒரே சார்ஜில் 120 கிமீக்கு மேல் பயணிக்கிறது. நீடித்த சேஸிஸ் உடன் கட்டப்பட்டு, அனைத்து வீல்களிலும் ஹைட்ராலிக் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டு, இது பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. இந்த வாகனம் ஒரு டிரைவர் மற்றும் மூன்று பயணிகளை வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிட்டி போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்றது.

Eblu Rozee மூன்று பேருக்கான சீட்டிங்கை வழங்குகிறது மற்றும் 10.2 kWh கொள்ளளவு கொண்ட லித்தியம்-அயான் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது ஹாலஜன் பல்புகளுடன் இரட்டை லைட்டுகளைக் கொண்டுள்ளது. மற்றும் 2836 மிமீ நீளம், 1350 மிமீ அகலம் மற்றும் 1790 மிமீ உயரம் கொண்டது. 2110 மிமீ வீல் பேஸ் மற்றும் 235 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது , இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 52 கிமீ வேகத்தை பிக்கப் செய்யும் மற்றும் 167 கிமீ ரேஞ்சை வழங்குகிறது.

Godawari Eblu Rozee ECO

சார்ஜிங் திறன் என்பது Eblu Rozee ECO இன் மற்றொரு முக்கிய அம்சமாகும். அதன் 7.8 kWh பேட்டரி அதன் 58.4V 40 Amp சார்ஜர் மூலம் வெறும் 3.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்றிவிடலாம், இது பரபரப்பான நகர்ப்புற சூழலில் விரைவான திருப்பங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.

வாரண்டி விஷயத்தில், Eblu Rozee மூன்று ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை, எது முதலில் வருமோ அதுவரை வாரண்டி வரும். இது நாள்தோறும் இயக்கத்திற்காக வாகனத்தை நம்பியிருக்கும் பயனர்களுக்கு மன அமைதியை உறுதி செய்கிறது. அவர்கள் பேட்டரி வாழ்நாள் பற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை. பேட்டரி செலவை சுலபமாக கணக்கிடலாம்

Godawari Eblu Rozee ECO

Eblu Rozee இல் உள்ள ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பு, பிரேக்கிங் போது மோட்டார் ஆற்றலை மீண்டும் சேமித்து வைக்கப்பட்ட ஆற்றலாக மாற்றுவதன் மூலம் பேட்டரி சார்ஜ் அதிகம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த அம்சம் வாகனத்தின் ரேஞ்சை நீட்டிப்பது மட்டுமல்லாமல், அதன் ஒட்டுமொத்த ஸ்டெபிளிட்டிக்கும் பங்களிக்கிறது.

சுற்றுச்சூழல் மாசு பற்றி பிரச்சனைகள் மற்றும் நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் பிராக்கடிக்கல் அம்சங்களை வழங்குவதன் மூலம் கோதாவரி எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகன துறையில் தொடர்ந்து புதுமை செய்து வருகிறது. அவர்களின் சமீபத்திய வாகனங்கள் இந்தியாவில் முழுவதும் சிட்டி போக்குவரத்து இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது குறைந்த விலையில் ஆட்டோவை பலர் தேடி வரும் நிலையில் இந்த வாகனம் சிறந்த வாய்ப்பாக இருக்கும். சிட்டி பயன்பாட்டிற்கும் ஆட்டோ தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த வாகனம் நல்ல லாபத்தை ஈட்டு தரும். இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்!

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 18:16 [IST]
English summary
Godawari Electric Motors Pvt. Ltd. has launched the Eblu Rozee ECO and Eblu Rozee at the Bharat Mobility Global Expo 2025, emphasising eco-friendly solutions for urban transport. The Eblu Rozee ECO features a powerful battery and impressive range, catering to commercial needs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X