டெஸ்லா கார்களில் இனி ஏஐ வரப்போகுது! இவரே சொல்லிட்டாரே! இனி என்னலாம் நடக்கப்போகுதோ?
டெஸ்லா கார்களில் க்ரூக் என்ற செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை புகுத்தும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ள தான் அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தெரியவித்துள்ளார். அதன்படி செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தில் எதிர்காலத்தில் வாகனங்கள் இயங்கும் வகையில் பல மாற்றங்கள் வரவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று உலகில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ என்ற தொழிற்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த தொழிற்நுட்பம் மனிதர்களை போல தானாக சிந்தித்து, ஒரு வேலையை மனிதர்களை விட சிறப்பாக செய்யும் திறன் கொண்டதாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது ஏஐ புரட்சி நடந்து வருகிறது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் எக்ஸ்ஏஐ என்ற நிறுவனம் க்ரூக் என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை உரவாக்கியுள்ளது. இந்த எக்ஸ் ஏஐ நிறுவனத்தை எலான் மஸ்க் தான் நடத்தி வருகிறார். இவர் தனது டெஸ்லா கார்களில் எக்ஸ் ஏஐ நிறுவனத்தின் க்ரூக் ஏஐயை டெஸ்லா கார்களில் பொருத்த திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் ஏஐ தொழிற்நுட்பத்தை இணைக்கும் முயற்சியில் இவர் இழங்கியுள்ளார்.
வெளிநாடுகளில் டெஸ்லா கார்கள் தானாக இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இனி இந்த காரில் செல்லும் வாடிக்கையாளர்கள் செயற்கை நுண்ணறிவு விஷயங்களை ரியல் டைமில் பயன்படுத்த முடியும் என சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த ஏஐ-யை கார்களில் பொருத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி டெஸ்லா கார்களில் பயணிப்பவர்கள் தங்கள் காரின் பயணித்தின் போதே வாய்ஸ் அசிஸ்ட் மூலம் ஏஐ உடன் பேச முடியும். முக்கியமாக கார் செல்லும் ரூட், டிராஃபிக் கண்டிஷன், வாகனத்தின் திறன் உள்ளிட்ட விஷயங்களை ரியல் டைமில் ஏஐ-யிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் காரில் மாற்ற நினைக்கும் செட்டிங்ஸ்களையும் சுலபமாக வாய்ஸ் அசிஸ்ட் மூலம் மாற்றிக்கொள்ள முடியும்.
இதனால் டெஸ்லா உரிமையாளர்களுக்கு சிறப்பான ரைடிங் அனுபவம் கிடைக்கும். ரைடிங்கின் போது பல்வேறு விதமான திட்டங்களை செய்ய இது உதவியாக இருக்கும். இது முதற்கட்டமாகவே செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதில் அடுத்தடுத்த அப்டேட் வரும் வகையில் எதிர்காலத்தில் மக்களின் தேவையை உணர்ந்து பல அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது டெஸ்லா நிறுவனம் முழுமையாக காரை செல்ஃப் டிரைவ் செய்யும் சப்ஸ்கிரப்ஷனை பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெளிநாட்டில் இந்த காரை தற்போது வைத்திருப்பர்களுக்கும் இந்த சேவை படிப்படியா ரோல் அவுட் செய்யப்படும். இது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி வெற்றிகரமான விஷயங்களை செய்தால் மற்ற நிறுவனங்கள் கூட தங்கள் கார்களில் செயற்கை நுண்ணறிவு விஷயங்களை புகுத்தும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளார். இது ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏஐ தொழிற்நுட்பத்தை காரில் பொருத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?


Click it and Unblock the Notifications








