கார் விலை தரைமட்டத்துக்கு குறையப்போகுது! மோடியால் இவி விற்பனையில் விழப்போகுது அடி!

இந்தியாவில் வரும் தீபாவளி முதல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அறித்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இவி வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வாகனங்கள் விற்பனையில் தற்போது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தன உரையின் போது பிரதமர் இந்தியா மக்களுக்கு தீபாவளியில் ஜிஎஸ்டியில் பரிசு காத்திருக்கிறது என சூசகமாக கூறினார். இதன்படி பார்த்தால் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

15 28 18 0 12 28 28 18 12 5 28 40 10 3-5 28 18 6-8 5

இந்நிலையில் தற்போது இந்தியாவில் வாகனங்களுக்கு 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இது தீபாவளிக்கு 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எச்எஸ்பிசி முதலீட்டு நிறுவனம் இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வில் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடந்த பிறகு எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் இன்ஜின் கார்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் மாறுபடும். இதனால் மக்கள் பலர் எலெக்ட்ரிக் காரை வாங்குவதை விட கம்பஷன் இன்ஜின் காரை வாங்க விரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு எலெக்ட்ரிக் கார்களுக்கான வரியை 0 ஆக்கினால் இந்த பிரச்சனைகள் இருக்காது.

15 28 18 0 12 28 28 18 12 5 28 40 10 3-5 28 18 6-8 5

தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள 12 மற்றும் 28 ஆகிய வரிகளை நீக்க திட்டமிட்டுள்ளது. இதனால் 28 சதவீத வரியில் உள்ள பல பொருட்கள் 18 சதவீத வரிக்கு வந்துவிடும். அதே போல 12 சதவீத வரியில் உள்ள பல பொருட்கள் 5 சதவீதமாக குறைக்கப்படும். இதில் வாகனங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

அதே போல பெரிய ரக கார்களுக்கு தற்போது உள் செஸ் வரி உள்ளிட்ட வரிகளை எல்லாம் நீக்கிவிட்டு 40 சதவீதம் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இதை சரியாக கணக்கிட்டால் சிறிய ரக கார்களுக்கு10 சதவீதம் வரையிலும் பெரிய ரக கார்கக்கு 3-5 சதவீதம் வரையிலும் வரியில் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GST Cut EV Sales

மற்றொரு வாய்ப்பாக 28க்கு பதில் பெரிய கார்களுக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு அதற்கு செஸ் வரி கூடுதலாக விதிக்கப்படவும் வாயப்புள்ளது. 6-8 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்பட்டால் பெரிய ரக கார்களுக்கு கணிசமான அளவு விலை குறைப்பு என்பது இருக்கும். அதே நேரம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது 5 சதவீதம் தான் இருப்பதால் அதன் வரி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவி கார்களின் விலை குறைய வாய்ப்பு குறைவு தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் அதிக வரியை குறைக்க திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் வளர்ச்சியை ஏற்படுத்தி தரும். இதனால் இந்தியாவில் கம்பஷன் இன்ஜின் வாகனங்களின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த வரி குறைப்பு தீபாவளி சமயத்தில் தான் வரப்போகிறது என்பதால் பலர் இதற்காக காத்திருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் வழக்கமாக நடக்கும் விற்பனவை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்

More from DriveSpark

Article Published On: Sunday, August 24, 2025, 15:30 [IST]
English summary
Gst cut ev sales impact ice vehicle tax reduction slows ev growth
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X