இனி 28க்கு பதிலா 40 சதவீதம் வரி! இருந்தாலும் இந்த காரின் விலையெல்லாம் குறையுது! எப்படி தெரியுமா?
இந்தியாவில் சொகுசு கார்களுக்கான வரியை மத்திய அரசு உயர்த்தவுள்ளது. இதனால் எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற கார்களின் விலை குறைகிறது. என்னது ஜிஎஸ்வி வரி ஏறினால் விலை குறைகிறதா? கேட்கேவ குழப்பமாக இருக்கிறது அல்லவா? ஆம் இதுவரை 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்த இந்த கார்களுக்கு இனி 40 சதவீத வரி விதித்தாலும் காரின் விலை குறைகிறது. இது எப்படி என்கிற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வரும் செப் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு இருக்கிறது. இதன்படி 28 மற்றும் 12 ஆகிய வரி விதிப்புகள் தற்போது நீக்கப்படுகிறது. 28 சதவீதத்தில் விற்பனையாகி வந்த வாகனங்கள் எல்லாம் தற்போது 18 சதவீதத்திற்கு மாற்றப்படுகிறது. அதே போல சொகுசு வாகனங்களுக்கு 28 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி இனி 40 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறிய ரக கார்களுக்கு 18 சதவீதமும் பெரிய ரக கார்களுக்கு 40 சதவீதமும் வரியாக செலுத்தப்படவேண்டும். இந்நிலையில் ஜிஎஸ்டி வரியில் 40 சதவீத்திற்கு செல்லும் கார்களின்விலை குறையப்போகிறது. ஆம் இதுவரை 28 சதவீத வரியில் இருந்த கார்களுக்கு இனி 40 சதவீதம் வரி இருந்தாலும், கார்களின் விலை கணிசமாக குறையும்.
இதற்கு முன்னர் 28 சதவீதம் தான் வரி என்றாலும் அதற்கு மேலாக கூடுதலாக 22 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்பட்டது. அதாவது 28 சதவீதம் போக கூடுதலாக 22 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டது. இதை கணக்கிட்டு பார்த்தால் 50 சதவீதம் வரியாக செலுத்தி வந்தனர். ஆனால் இனி அந்த ரக கார்களுக்கு 10 சதவீதம் செலுத்தினால் போதும். முன்னர் 28 சதவீதமாக இருந்த வரி 40 சதவீதமாக உயர்ந்தாலும் செஸ் வரி இல்லை என்றால் ஏற்கனவே செலு்த்தப்பட்ட விரியை விட 10 சதவீதம் வரை குறைவான வரியே விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் மஹிந்திரா ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 700, ஹூண்டாய் டுஸான், எம்ஜி குளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய கார்களுக்கு இதுவரை 28 சதவீத ஜிஎஸ்டி, அதற்கு கூடுதலாக 22 சதவீத வரி சேர்த்து 50 சதவீத வரி செலுத்தப்பட்டு வந்த இடத்தில் தற்போது 40 சதவீதம் தான் வரி செலுத்தப்படுகிறது.
இதனால் ஏற்கனவே இந்த கார்களின் எக்ஸ் ஷோரூம் விலை 50 சதவீ வரியுடன் கணக்கிடப்பட்டு வந்தது. இனி அதற்கு 40 சதவீதம் தான் வரி இருக்கும். இதனால் இந்த காரின் விலை தற்போது இருக்கும் விலையை விட சுமார் 7.5 சதவீதம் அளவிற்கு குறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்க ரூ1.45 லட்சமும்,. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு ரூ1.43 லட்சமும், ஹூண்டாய் டுஸான் காருக்கு ரூ2.40 லட்சமும், டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு ரூ3.49 லட்சமும், எம்ஜி குளோஸ்டர் காருக்கு ரூ3.04 லட்சம் வரை பணம் மிச்சமாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு கார்களுக்கு அதிக ஜிஎஸ்டி வரி என பலர் பேசி வருகின்றனர். இதற்கு முன்னர் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி இருந்தாலும், 22 சதவீதம் வரை செஸ் வரி இருந்தது. தற்போது செஸ் வரி இல்லாமல் ஜிஎஸ்டி மட்டும் 40 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் வரி அதிகமானாலும் விலை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications









