காஸ்ட்லி காரெல்லாம் சீப் ரேட்டுக்கு வரப்போகுது! ஜிஎஸ்டி வரி குறைப்பால் இவ்வளவு விலை குறையுதா?

இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிகள் குறைகிறது. இதன்பட இந்தியாவில் விற்பனையாகும் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரிகள் குறைகிறது. இதில் சொகுசு கார்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவில் சொகுசு கார்களுக்கு இனி 40 சதவீதம் வரி வதிக்கப்படும் நிலையில் இந்த ஜிஎஸ்டி வரியால் எவ்வளவு விலை குறைகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம்.

இந்தியாவில் தற்போது வாகனங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு வாகனங்களுக்கான வரியை 28 சதவீதமாக அரசு மாற்றியுள்ளது. அதே போல சொகுசு வாகனங்களுக்கான வரியை 40 சதவீதமாக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

GST on luxury Cars

இதற்கு முன்னர் அரசு 28 சதவீத வரியுடன் சேர்த்து கூடுதலாக 22 சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 50 சதவீத வரி என்பது இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்தது.தற்போது புதிய வரி விதிப்பு முறையில் இது 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சொகுசு வாகனங்களின் விலை கணிசமானஅளவு குறையவுள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்கள் மீதான வரி குறைக்கப்பட்டள்ளது.

இதன்படி பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் தற்போதைய விலை ரூ51.5 லட்சமாக இருப்பது ரூ46.3 லட்சம் என்ற விலையிலும், மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார் தற்போது ரூ50.5 லட்மாக இருப்பது ரூ45.45 லட்சமாகவும், ஃபோர்ஷே 911 கார் ரூ2 கோடி என்ற விலையில் விற்கப்படுவது ரூ1.8 கோடி என்ற விலையிலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ரூ1.3 கோடி என்ற விலையில் விற்கப்படுவது இனி ரூ1.2 கோடி என்ற விலையிலும், ஆடி க்யூ5 கார் ரூ66.9 லட்சம் என்ற விலையில் தற்போது விற்பனையாகும் நிலையில் இனி இது 59.85 என்ற விலையிலும், பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் கார் ரூ2.6 கோடி என்ற விலையில் விற்பனையாகும் நிலையில் இனி ரூ2.34 கோடிக்கு விற்பனையாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாடல் தற்போதைய விலை (ரூபாயில்) எதிர்பார்க்கப்படும் புதிய விலை (ரூபாயில்)
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 51.5 லட்சம் 46.3 லட்சம்
மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 50.5 லட்சம் 45.45 லட்சம்
போர்ஷே 911 2.0 கோடி 1.8 கோடி
பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 1.3 கோடி 1.2 கோடி
ஆடி க்யூ5 66.5 லட்சம் 59.85 லட்சம்
பிஎம்டபிள்யூ எக்ஸ் எம் 2.6 கோடி 2.34 கோடி
GST on luxury Cars

இந்த எதிர்பார்க்கப்படும் விலை எல்லாம் தற்போது விற்பனையாகும் விலையில் 10 சதவீதம் கழிக்கப்பட்ட செய்யப்பட்ட கணக்கீடாகும். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக இந்த விலையை வெளியிடவில்லை. இந்த விலையில் அதிகாரப்பூர்வ விலைகள் வரும் போது விலை வேறுபடும். அதனால் இதை ஒரு உத்தேச மதிப்பீட்டிற்காக மட்டுமே பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வமான விலை செப் 22ம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம். அல்லது அருகில் உள்ள டீலரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்தியாவில் சொகுசு கார்களின் விற்பனை ஒட்டு மொத்த வாகன விற்பனையில் 1 சதவீதம் தான் இருக்கிறது. இதனால் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் படிப்படியாக அதிக விலை கொண்ட கார்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளியான நைட் ஃபிராங்க் ப்ளாக்ஷிப் ஆய்வு தெரிவித்துள்ளது.

GST on luxury Cars

இந்த ஆய்வின் படி கடந்த 2023ம் ஆண்டு 13,263 பேர் பெரும் பணக்காரர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை தற்பேஆது 19,908ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 50 சதவீத வளர்ச்சியாகும். இதுவே சீனாவில் 47 சதவீதமும், துருக்கியில் 42.9 சதவீதமும், மலேசியாவில் 635 சதவீதமும் வளர்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக விலை கொண்ட காஸ்ட்லி கார்கள் எல்லாம் இந்தயாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் ஜிஎஸ்டியில் வந்துள்ள இந்த மாற்றம் வாகனத்தின் விலையை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விற்பனை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, September 5, 2025, 15:45 [IST]
English summary
Gst on luxury cars mercedes bmw audi price drop expected
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X