100த்துக்கு 20 பேர் இந்த காரை தான் வாங்குவாங்க! டாடா நிறுவனம் இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்குதா?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் இவி காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது மூலம் மீண்டும் தனது கார்களில் இந்த 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் டாடா சஃபாரி ஸ்டிரோம் காரில் இந்த அம்சம் இருந்தது. ஆனால் இந்த கார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த காரை நிறுத்திவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த சிஸ்டம் அந்நிறுவனத்தின் எந்த காரிலும் இல்லாத நிலையில் தற்போது டாடா ஹாரியர் இவி காரில் கொண்டு வந்துள்ளது.
டாடா ஹாரியர் இவி காரில் இந்த 4 வீல் டிரைவ் சிஸ்டம் குவாட் வீல் டிரைவ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. ஒவ்வொரு வீலிலும் ஒவ்வொரு மோட்டார் என பொருத்தப்படுகிறது. இது தான் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது.

டாடா நிறுவனம் கம்பஷன் இன்ஜின் வாகனங்களில் ஆல் வீல் டிரைவ்சிஸ்டத்தை நிறுத்தியதற்கு முக்கியமான காரணமாக அதன் விற்பனை குறைவாக இருப்பது தான் என கூறப்பட்டது. குறிப்பாக இந்த செக்மெண்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்கள் 1 இலக்க சதவீத விற்பனையை தான் பெற்றது. ஆனால் ஹாரியர் இவி காரில் உள்ள க்யூடபிள்யூடி சிஸ்டம் 20 சதவீத விற்பனையை பெறும் என அந்நிறுவனம் கணித்துள்ளதாக தெரிகிறது.
டாடா நிறுவனம் தனது புதிய 4 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு க்யூடபிள்யூடி என பெயர் வைத்துள்ளதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனம் இதில் தனித்துவமான தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இப்படியாக 4வீல் டிரைவிற்காக தனித்துவமான தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவதில் டாடா முதல் நிறுவனம் அல்ல. ஏற்கனவே சுஸூகி நிறுவனம் ஆல் கிரிப் ஏடபிள்யூடி என்றபெயரில் புதிய தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.

அதே போல ஜீப் நிறுவனம் ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை பயன்படுத்தி வருகிறது. ஆடி நிறுவனம் சாதாரண சாலையில் பயன்படுத்தும் வகையில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை பயன்படுத்தி வருகிறது. ஆனால் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள க்யூடபிள்யூடி அம்சம் ஆஃப்ரோடு அம்சங்கள் மற்றும் ஆன்ரோடு அம்சங்கள் என இரண்டும் இருக்கும் வகையில் இதை உருவாக்கியுள்ளது.
தற்போது 4 வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட கார்களை தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஹாரியர் இவி ஒர நல்ல ஆப்ஷனாக உள்ளது. விலையை பொருத்தவரை டாடா நிறுவனம் தனது 65 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனிற்கு மட்டுமே விலையை வெளியிட்டுள்ளது. க்யூடபிள்யூடி ஆப்ஷன் கொண்ட கார்களில் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதன் விலையை டாடா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

டாடா நிறுவனத்தின் இந்த 4 வீல் டிரைவ் சிஸ்டம் வாடிக்கையாளரகள் மத்தியில் நீண்ட நாட்களாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆஃப்ரோடு பயணத்தை விரும்பும் மக்கள் பல இந்த வாகனத்தை விரும்பி வருகின்றனர். இந்நிறுவனம் இந்த காரை பெரிய செங்குத்தான மலையில் ஏற்றி வீடியோ எடுத்து வெளியிட்டனர். இது பெரிய அளவில் பலரை ஆச்சரியப்படுத்தியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் இந்தியாவில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பலரது எததர்பார்ப்பை பூர்த்தி செய்யும். அதே நேரம் இந்த ஃபெர்பார்மென்ஸ் சிறப்பாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால் நிச்சயம் இந்த தொழிற்நுட்பம் மற்ற கார்களிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









