இந்த 5 ரகசியத்தை வேறு எந்த காரிலும் பார்க்க முடியாது! டாடா ஹாரியர் இவியில் மட்டுமே இருக்கிறது!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஹாரியர் இவி கார இந்திய மார்கெட்டில் ரூ21.49 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின்வேரியன்ட் வாரியிலான விலை விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் இந்த காரில் உள்ள அம்சங்கள் பற்றிய விரிவான விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த காரில் 5 புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது வேறு எந்த காரிலும் காண முடியாது. இந்த 5 அம்சங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
360 டிகிரி கேமரா டிரான்ஸ்ஃபரன்ட் மோடு: இன்று பல கார்களில் 360 டிகிரி கேமரா மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது. இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் டாடா ஹாரியர் காரில் 540 டிகிரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காருக்குள் அமர்ந்து கொண்டே காரை சுற்றி இருப்பது மட்டுமல்லாமல் காருக்கு அடியில் இருக்கும் விஷயங்களையும் டிரான்ஸ்பரன்ட்மோடில் பார்த்து கொள்ளலாம்.

இதனால் விஷூவலில் கார் டிரான்ஸ்பரன்டாக தெரியும். காருக்கும் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெளிவாக பார்க்க முடியும். குறிப்பாக ஆஃப்ரோடு மற்றும் பெரிய பள்ள மேடு நிறைந்த பகுதிகளில் செல்லும் போது டிரைவர்களுக்கு சுலபமாக காரை சுற்றியுள்ள விஷயங்களை பார்க்க முடியும்.
டுயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ்: ஹாரியர் இவி கார் மாஸ் மார்கெட் செக்மெண்டிலேயே முதன் முறையாக டுயல் மோட்டார் உடன் ஆல் வீல் செட்டப் உடன் கூடிய காராக இருக்கிறது. இதில் ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 158 பிஎஸ் பவரையும் 238 பிஎஸ் பவர் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மோட்டாரும் சேர்த்து மொத்தம் 504 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6.3 நொடியில் பிக்கப் செய்துவிடுகிறது.

பெரிய 14.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரில் 14.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கியுள்ளது. இது நியோ க்யூ எல்டி டிஸ்பிளேவாக வழங்கியுள்ளது. இது காரில் உள்ளவர்களுக்கு ஷார்ப் மற்றும் கிரிஸ்பான டிஸ்பிளேவை வழங்குகிறது. சாதாரண ஹாரியர் காரில் 12.3 இன்ச் டிபிளே தான் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஐஆர்விஎம்: ஹாரியர் இவி காரில் அதன் ஷார்க் ஃபின் ஆண்டனா பகுதியில் கூடுலாக ஒரு கேமரா பெஆரத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் லைவ்வாக ஓட்டுனரின் ஐஆர்விஎம் பகுதியில் தெரிகிறது. இது டிரைவருக்கு காருக்கு பின்னால் என்ன வருகிறது என்பதை தெளிவாக பார்க்க உதவும். இது இந்த செக்மெண்டில் உள்ள மற்ற கார்களில் இல்லை.
ஆட்டோ பார்க்: ஹாரியர் இவி காரில் ஆட்டோ பார்க் அசிஸ்ட் அம்சம் இருக்கிறது. இந்த சிஸ்டம் காரை டிரைவரின் உதவி இல்லாமலேயே பார்க் செய்ய உதவும் இந்த அம்சம் ஏற்கனவே மஹிந்திரா பிஇ6 மற்றும் எக்ஸ் இவி 9இ ஆகிய கார்களில் இருகு்கிறது.
சம்மன் மோடு: இந்த மோடை பயன்படுத்தி காரை முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் தானாக நகர்த்த முடிவும். இதனால் பார்க்கிங்கில் உள்ள காரை வெளியே எடுக்கவும் டைட்டான இடத்தில் காரை பார்க் செய்யவும் முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஹாரியர் இவி காரில் இப்படியாக பார்க்கிங் அம்சம் முதல் பல பாதுகாப்பு வசதிகள் வரை இந்த செக்மெண்டில் வேறு எந்த காரிலும் இல்லாத வகையில் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கார் தனித்துவமாக காராக மாறிவிற்பனை அதிகரிப்பெற பெற உதவி செய்கிறது.


Click it and Unblock the Notifications









