24 மணி நேரத்தில் 10,000 பேர் இந்த காரை புக் பண்ணிட்டாங்க! இதுல அப்படி என்ன இருக்குது?
டாடா ஹாரியர் இவி காருக்கான புக்கிங் துவங்கிய நிலையில் புக்கிங் துவங்கிய 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்துவிட்டதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளத. இந்த கார் மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை தற்போது விற்பனைக்காக அறிமுகப்படத்தியது. இந்த காருக்கான புக்கிங் கடந்த ஜூலை 2ம் தேதி துவங்கியது. இந்த காருக்கான புக்கிங் துவங்கிய முதல் நாளே 10 ஆயிரம் பேர் இந்த காரை புக் செய்துவிட்டாதக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செக்மெண்டலேயே இரண்டாவது அதிக புக்கிங் பெற்ற கார் இது தான்.

மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வரும் எக்ஸ்இவி9இ காருக்கு முதல் நாளே 16900 புக்கிங் குவிந்தது. அதற்கு அடுத்த இடத்தில் டாடா ஹாரியர் இவி தான் இருக்கிறது. ஹாரியர் இவி காருக்கு மாதாந்திர தயாரிப்பு டார்கெட் எவ்வளவு என்ற விபரத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் நிச்சயம் மார்கெட் தேவைக்கு ஏற்ப அதை அதிகரிப்பு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது ரேர் எர்த் மெட்டலின் தட்டுப்பாடு காரணமாக தயாரிப்பு மந்தமாகும் என பேசப்பட்டாலும், டாடா நிறுவனம் தற்போது வரை அதற்கான கதப்படு இல்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் அதற்கான மாற்றுவழியை டாடா செய்யும் என சொல்லியுள்ளதால் இந்த காரின் டெலிவரியில் தாமதம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த காருக்கான மூலப்பொருட்களை அதிக அளவில் அந்நிறுவனம் ஸ்டாக்கில் வைத்துள்ளது. முக்கியமாக பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் அதிகமாக ஸ்டாக்கில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் புனோவல் உள்ள ஆலையில் இந்த காரை தயாரிக்கிறது.

டாடா ஹாரியர் இவி காரை பொருத்தவரை 2 விதமா பேட்டரி பேக்குகள் உள்ளன. 65 kWh மற்றும் 75 kWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இதில் சிறிய பேட்டரி ஆப்ஷன் 538 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என்றும், பெரிய பேட்டரி ஆப்ஷன் 627 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரியர் இவி டாப் வேரியன்ட் காரில் க்யூடபிள்யூடி ஃபார்மெட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் டுயல் மோட்டார் செட்டப் உடன் விற்பனக்கு வருகிறது. இந்த கார் 158 பிஎஸ் பவரை முன்பக்க வீல் டிரைவ் வேரியன்டில், 238 பிஎஸ் பவர் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் காரில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் தான் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் அதிக வாகனங்களை தயாரித்து வந்தாலும் சமீப காலமாக அதன் மார்கெட் பங்கு குறைந்து வருகிறது. இதற்கு எம்ஜி மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் வளர்ச்சி முக்கியமான காரணமாக இருக்கிறது. டாடா நிறுவனம் தொடர்ந்து 50 சதவீத்திற்கும் அதிகமான மார்கெட் பங்கை தக்க வைக்க இப்படியொரு காரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஹாரியர் இவி கார் இந்திய மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கெட்டில் போட்டி இருந்தாலும் இந்த காருக்கு என தனி பெயர் இருப்பதால் இந்த கார் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









