ஹாரியர் இவி காரில் எத்தனை வேரியன்ட் இருக்குது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் ஜூலை 2ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த காரின் வேரியன்ட் விபரங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனத்தின் ஹாரியர் இவி கார் மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த கார். டாடா நிறுவனம் இந்த காரில் எலெக்ட்ரிக் காரில் புதுமையான வகையில் வாகனத்தை உருவாக்கியுள்ளது. எலெக்ட்ரிக் காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை பொருத்தி வாகனத்தை உருவாக்கியுள்ளது. இந்த செக்மெண்டின் கார்களிலேயே இல்லாத பல்வேறு புதிய அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

Harrier ev Variants Price

இந்த கார் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அட்வெஞ்சர், ஃபியர்லெஸ், எம்பவர்டு ஆகிய 3 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் மொத்தம் 4 விதமான பெயிண்ட் ஸ்கீம்கள் உள்ளன. பிரிஸ்டன் ஒயிட், ஃப்யூர் கிரே, எம்பவர்டு ஆக்ஸைடு, நைனிட்டல் நாக்டூர்ன் ஆகிய கலர்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

டாடா நிறுவனம் இந்த காரில் 2விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 65 கிலோ வாட் ஹவர், மற்றும் 75 கிலோ வாட் ஹவர் ஆகிய 2 விதமான ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் சிங்கிள் மற்றும் டுயல் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளது. இதில் சிங்கிள் மோட்டார் ஆப்ஷன் பின்பக்க வீல் டிரைவ் ஆப்ஷன் கொண்ட காராகவும், டுயல் மோட்டார் செட்டப் QWD எனப்படும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இருக்கிறது.

Harrier ev Variants Price

இதில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கார் 235 பிஎச்பி பவரையும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் 390 பிஎச்பி பவரையும், 504 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்தாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரியர் வீல் டிரைவ்சிஸ்டம் கார் 505 கி.மீ ரேஞ்சையும், QWD டிரைவ் சிஸ்டத்தில் 627 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. இதனால் இந்த கார் மக்களை அதிகம் ஈர்க்கும் காராக மாறியுள்ளது.

இந்த காரில் மிக முக்கிய அம்சமாக ஸ்மார்ட் கீ ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் ஒரு பார்க்கிங்கில் காரை நிறுத்த வேண்டும் என்றால் ஒரு பட்டனை அழுத்தினாலே போது நீங்கள் எந்த விதமான இன்புட்டும் வழங்கவில்லை என்றாலும் கார் சரியாக பார்க்காகி விடும். அதே போல கார் பார்க் ஆகி நிற்கும் போது நீங்கள் நிற்கும் இடத்திற்கு ஒரு பட்டனை அழுத்தினாலே கார் தானா நீங்கள் இடத்திற்கு வரும். இது எல்லாம் தானியங்கியாக நடக்கும்.

Harrier ev Variants Price

இந்த காருக்கான புக்கிங் ஜூலை 2ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை வாங்க வேண்டும் என பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் புக்கிங் குவிந்த பிறகு பலர் இந்த காரை விரும்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் ஹாரியர் இவி கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இதன் விலை அதிகமாக இருந்தாலும் இதன் அம்சங்கள் சிறப்பாக இருப்பதால் இந்த காரின் விற்பனை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 4, 2025, 10:50 [IST]
English summary
Harrier ev suv variants details and features details
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X