ஹாரியர் இவி காரை வாங்கினால் ஒரு கி.மீக்கு ரூ4 மிச்சம் பண்ணலாம்! இப்படி தான் கணக்கு போடனும்!

டாடா நிறுவனம் இன்று தனது ஹாரியர் இவி காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பல்வேறு நவீன அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு பெரும்பாலும் அதன் கம்பஷன் இன்ஜின் மாடல்களின் வடிவமைப்பு போல தான் இருக்கிறது. தற்போது ஹாரியர் காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் டீசல் இன்ஜின் காரை வாங்கலாமா அல்லது எலெக்ட்ரிக் காரை வாங்கலாமா என்ற குழுப்பத்தில் இருக்கின்றனர். இந்த கார்களில் எது பெஸ்ட் என்ற விரிவான விரபங்களையும் எது நல்ல லாபம் தரும் என்ற விபரங்களையும் இங்கே காணலாம்.

டாடா நிறுவனத்தின் ஹாரியர் இவி காரை பொருத்தவரை 65 கிலோ வாட் ஹவர், 75 கிலோ வாட் ஹவர் அகிய 2 பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி பார்த்தால் இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 75 யூனிட் மின்சாரம் செலவாகும். சாதாரணமாக ஒரு வீட்டிற்கு 500 யூனிட் மின்சாரம் செலவாகிறது என வைத்துக்கொள்கவோம். அது போக இந்த காரை மாதம் 3 றை சார்ஜ் ஏற்றினால் இது 825 யூனிட் மின்சாரம் செலவாகும்.

Harrier Ev vs Harrier Diesel Cost

அப்படி கணக்கிடும் போது தமிழ்நாட்டில் வீட்டு முறை மின்சாரத்திற்கு 800 யூனிட்டிற்கு மேல் செலவு செய்தால் ஒரு யூனிட்டிற்கு 10.70 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும். அப்படி பார்த்தால் ஒரு முறை சார்ஜ் செய்தால் ரூ802.5 செலவாகும். ரூ800க்கு செலவு செய்து 500 கி.மீ வரை பயணிக்க முடியும் என டாடா நிறுவனம் கூறுகிறது.

அதாவது ஒரு கி.மீ பயணிக்க மின்சார கட்டணம் மட்டும் ரூ1.6 செலவாகிறது.இது இதுவே நாம் டீசல் கார்கள் மூலம் பயணித்தால் எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு பார்ப்போம். டாடா வேரியன்ட் டீசல் காருக்கு 16.8 கி.மீ அளவிற்கு மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இன்று தமிழ்நாட்டில் 92.5 ரூபாய் என்ற விலையில் டீசல் விற்பனையாகிறது. அதை வைத்து பார்த்தால் ஒரு கி.மீ பயணிக்க ரூ5.7 டீசல் செலவாகிறது.

Harrier Ev vs Harrier Diesel Cost

வாகனத்தின் செலவுகளை கணக்கிட்டால் டீசல் வேரியன்ட் கார் ரூ17.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. அப்படி பார்த்தால் சுமார் 4.69 லட்சம் கூடுதலாக செலவு செய்ய வேண்டியது உள்ளது. தற்போது டீசல் காரை விட பெட்ரோல் காரில் பயணிக்கும் போது ஒரு கி.மீ பயணிக்க ரூ4.1 மிச்சமாகிறது.

அதனால் காரின் விலைக்காக நாம் வழங்கும் 4.69 லட்சத்தை மீட்டெடுக்க நாம் எலெக்ட்ரிக் காரில் 1,14,400 கி.மீ ஓட்ட வேண்டும். தினமும் நீங்கள் சராசரியாக 100 கி.மீ வாகனம் ஓட்டும் பழக்கம் கொண்டவராக வைத்துக்கொண்டால் ஆண்டிற்கு 36500 கி.ம ஆண்டிற்கு பயணிப்பீர்கள். இந்த பணத்தை திருப்பி எடுக்க 3.13 ஆண்டுகள் நீங்கள் வாகனம் ஓட்ட வேண்டும்.

Harrier Ev vs Harrier Diesel Cost

மேலும் 1.14 லட்சம் கி.மீ பயணித்தற்கு பிறகு தான் நீங்கள் டீசல் காரை விட அதிக லாபத்தில் காரை இயக்க முடியும். பெரும்பாலும் வாகன ஓட்டிகள் பலர் வாகனத்தை 1 லட்சம் கி.மீ பயணித்திற்கு பிறகு மாற்றி விடுவார்கள். லாப அடிப்படையில் பார்த்தால் டீசல் கார் தான் சற்று லாபமாக இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செலவுவை கணக்கிட்டால் டீசல் கார் உங்களுக்கு பெஸ்டாக தோன்றலாம். ஆனால் அம்சங்களை கணக்கிட்டு பார்க்கும் போது பல நவீன தொழிற்நுட்பங்கள் இந்த காரில் இருக்கிறது. இதன் ஆல் வீல் டிரைவ் அம்சம் உள்ளிட்ட ஆப்ஷன்களை மக்களை அதிகம் ஈர்க்கும். இதனால் விலை அதிகமாக இருந்தாலும் பலர் டீசல் கார்களை அதிகம் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 3, 2025, 20:00 [IST]
English summary
Harrier ev vs harrier diesel variant cost per km comparison
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X