இந்த 5 கார்கள் மட்டும் விற்பனைக்கு வந்துச்சு இந்தியாவே ஒரு வழி ஆகிரும்.. ஆட்டோ எக்ஸ்போவில் கெத்து காட்டிய கார்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் கார் உற்பத்தி நிறுவனங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தயாரித்த கான்செப்ட் கார் மாடல்களைக் காட்சிப்படுத்தின. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல்களைக் காட்டிலும் இவையே பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாகக் கவரும் வகையில் இருந்தன. அந்தவகையில், பார்வையாளர்கள் மற்றும் கார் காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவரும் விதமாக இருந்த டாப் ஐந்து கான்செப்ட் கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தொடங்கி மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) வரை என முன்னணி நிறுவனங்கள் பல இந்த வாகன கண்காட்சியில் தங்களின் கான்செப்ட் மாடல்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றன. சொல்லப்போனால் இந்த முறை அதிக அளவில் கான்செப்ட் கார் மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Concept cars showcased in auto expo 2025

டாடா அவின்யா எக்ஸ் (Tata Avinya X): இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் காட்சிப்படுத்தப்பட்ட அழகான கான்செப்ட் கார் மாடல்களில் டாடா அவின்யா-வும் ஒன்றாகும். மிக கவர்ச்சியான தோற்றத்தை இந்த கான்செப்ட் கார் மாடல் கொண்டிருந்த காரணத்தினால், ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொண்ட பார்வையாளர்கள் பலரின் கவனத்தை அது வெகுவாகக் கவர்ந்தது.

காற்றை கிழித்துக் கொண்டு செல்லுகின்ற தோற்றம், மெல்லிய கோடு போன்ற லைட்டுகள், மூடிய ஸ்டைல் கொண்ட கிரில் மற்றும் தனித்துவமான வீல்கள் ஆகியவை அதற்கு கூடுதல் கவர்ச்சியை வழங்கும் விதமாக இருக்கின்றன. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் மாடல்களில் காணப்படும் அம்சங்கள் சிலவற்றையும் இந்த கார் மாடலில் நம்மால் பார்க்க முடிகின்றது.

Tata avinya x auto expo

இந்த கார் பற்றிய முக்கிய விபரங்கள் பெரிய அளவில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அதில் பல அட்வான்ஸ்டு அம்சங்கள் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. பெரிய தொடுதிரை, ஹெட்ஸ் அப் திரை, டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் அசிஸ்டம் சிஸ்டம் உள்ளிட்டவை இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes-Benz Concept CLA): பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாகன கண்காட்சியின் வாயிலாக காட்சிப்படுத்தப்பட்ட அசத்தலான கான்செப்ட் கார் மடால்களில் இதுவும் ஒன்றாகும். இது ஓர் அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கிய சொகுசு கான்செப்ட் கார் மாடல் ஆகும்.

Skoda vision 7s concept auto expo

ஸ்போ்ட்டி லுக் கொண்டிருக்கும் இந்த காரை அலங்கரிக்கம் விதமாக பென்ஸ் சின்னத்தை பிரதிபலிக்கக் கூடிய ஹெட்லைட் மற்றும் மெல்லிய ஹெட்லைட்டை பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, பிரத்யேக கிரில் மற்றும் வீல்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். இது பென்ஸ் நிறுவனத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, இந்த காரின் உட்பக்கமும் தனித்துவமான சிறப்பம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், இந்த கார் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இந்த கார் பற்றிய முக்கிய தகவல்களை நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இப்போதே இந்த கார் மாடல் பார்வையாளர்கள் பலரின் கவனத்தை இப்போதே கவர தொடங்கிவிட்டது. பென்ஸ் நிறுவனம் குரட் கட்டளையை ஏற்று செயல்படும் அம்சம் மற்றும் எம்பியூ எக்ஸ் திரை போன்றவை இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

லெக்சஸ் ஆர்ஓவி (Lexus ROV): முற்றிலும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும் ஓர் கான்செப்ட் கார் மடாலே இதுவாகும். இந்த காரில் ஹைட்ரஜன் பவர்டு மோட்டாரையே லெக்சஸ் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. ஆகையால், இது இயங்கும் போது காற்று மாசை ஏற்படுத்தக் கூடிய கார்பன் வெளியேற்றம் துளியும் இருக்காது.

மேலும், இது ஓர் ஆஃப் ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனம் ஆகும். எனவே, இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஆஃப்-ரோடு மற்றும் மிக முக்கியமான பாதுகாப்பு பணி போன்றவற்றிற்கு பயன்படக் கூடிய வாகனமாக மட்டுமே அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் பிஇவி (Toyota Urban Cruiser BEV): பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் பங்கு பெற்ற டொயோட்டா நிறுவனம் சில கார் மாடல்களை மட்டுமே இந்தியாவில் காட்சிப்படுத்தியது. அதில் மிக முக்கியமான ஓர் கார் மாடலாக இது இருக்கின்றது. இது ஓர் கான்செப்ட் கார் மாடல் ஆகும்.

ஆனால் பார்க்க உற்பத்தி தயாராக இருக்கின்றதை போல அது காட்சியளிக்கின்றது. விற்பனையில் இருக்கும் அர்பன் கரூஸர் கார் மாடலை போலவே இது இருக்கின்றது. ஆனால், அதைவிட சற்றே அதிக கவர்ச்சியான கார் மாடலாக அர்பன் பிஇவி கான்செப்ட் காட்சியளிக்கின்றது. இந்த கார் பற்றிய முக்கிய விபரங்களும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

ஸ்கோடா விஷன் 7எஸ் (Skoda Vision 7S): இந்த ஆட்டோ எக்ஸ்போவில் பலரின் கவனத்தைக் கவர்ந்த கான்செப்ட் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். கிரில், பம்பர்,லைட், வீல் மற்றும் வெளிப்புற தோற்றம் என அனைத்திலும் தனித்துவமானதாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது.

இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். ஒரே நேரத்தில் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரிலும் நவீன கால அம்சங்கள் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஆனால், அதுபற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஐந்து கார்கள் மட்டும் விற்பனைக்கு வரும் எனில் இந்திய மார்க்கெட்டை அவை ஒரு வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, விற்பனையில் இவை வெற்றியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த கார் மாடல்களின் அறிமுகம் எப்போது என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் அவற்றை அந்தந்த நிறுவனங்கள் விற்பனைக்குக் கொண்டு வருவது பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 23, 2025, 5:00 [IST]
English summary
Here is top 5 concept cars showcased in auto expo 2025 tata avinya x to skoda vision 7s
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X