சைக்கிள் உற்பத்தியில் டாப்-இல் இருக்கும் ஹீரோ கம்பெனியிடம் இது மாதிரி இன்னும் எத்தனை ஐடியா இருக்கோ!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், EICMA 2025 கண்காட்சியில் அதன் விடா பிராண்டில் பல கவர்ச்சிக்கரமான தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. விடா ஆனது தற்போதைக்கு ஹீரோ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், வி2 (V2) மற்றும் வி.எக்ஸ்2 (VX2) என்கிற இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் பைக்குகள் எதுவும் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.

அப்படியிருக்க, இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நவம்பர் 9ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள 2025ஆம் ஆண்டிற்கான EICMA கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் அதன் விடா நிறுவனத்தின் சார்பில் பல புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுடன், எலெக்ட்ரிக்கில் இயங்கும் 3-சக்கர டிரைக் (Trike) வாகனம் மற்றும் 4-சக்கர எலெக்ட்ரிக் காருக்கான கான்செப்ட்களையும் காட்சிப்படுத்தி மிரள வைத்துள்ளது.

hero motocorp at eicma 2025

இதற்காகவே, 'நோவஸ்' (Novus) என்கிற தனி பிரிவை விடா அறிமுகம் செய்ய உள்ளது. இதன் கீழ்தான் நெக்ஸ் (NEX) வரிசையில் நெக்ஸ்2 மற்றும் நெக்ஸ்3 என்கிற பெயர்களில் ஒரு எலெக்ட்ரிக் 3-சக்கர டிரைக் மற்றும் எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்கள் EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. நெக்ஸ்1 கான்செப்ட் ஆனது ஒருவர் மட்டுமே நின்றப்படி பயணிக்கும் எலெக்ட்ரிக் வாகனத்திற்கான கான்செப்ட் ஆகும்.

கான்செப்ட்களாக தற்போதைக்கு இருக்கும் இவற்றில் இருந்து வரும் ஆண்டுகளுக்குள் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் ஹீரோ விடாவில் இருந்து அறிமுகம் செய்யப்படலாம். இதில் நெக்ஸ்3 எலெக்ட்ரிக் கார் கான்ப்செட்டை பற்றி ஏற்கனவே ஒரு தொகுப்பில் பார்த்திருந்தோம். இந்த தொகுப்பில் நெக்ஸ்2 கான்செப்ட் வாகனத்தை பற்றி பார்க்க போகிறோம்.

hero vida novus nex2 concept

இது ஒரு கான்செப்ட் வாகனம் என்பதால், ரேஞ்ச், அதிகபட்ச வேகம் அல்லது பேட்டரி திறன் போன்ற துல்லியமான தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இப்போதைக்கு வெளியிடப்படவில்லை. நெக்ஸ்2 ஆனது, நகர்ப்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய, மூன்று சக்கர வாகனம் ஆகும். இது வழக்கமான இரு சக்கர வாகனங்களை விட விபத்துகளை தவிர்த்து அதிக நிலைத்தன்மையை வழங்குவதோடு, நெரிசலான நகரச் சூழல்களில் எளிதாக ஓட்டுவதற்கும் ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வாகனத்தில் ஆட்டோமேட்டிக்காக தன்னை தானே சமநிலைப்படுத்தி, எந்த பக்கமும் சாயாமல் நிற்கும் அமைப்பு உள்ளது. இதன் மூலமாக, வளைவு திருப்பங்களிலும் சவுகரியமாக சாய்ந்தப்படி அமர்ந்து செல்லும் வசதியை வழங்குகிறது. இதன் மூலமாக இது ஒரு பாதுகாப்பான வாகனத்தின் உணர்வையும், அதே நேரத்தில் ஒரு துடிப்பான பயண அனுபவத்தையும் அளிக்கக் கூடியதாக உள்ளது.

hero vida novus nex2 concept

படங்களில், விடா நோவஸ் நெக்ஸ்2 கான்செப்ட் மாதிரியில் முன்பக்கத்தில் நன்கு அகலமான எல்இடி டி.ஆர்.எல்-களை பார்க்க முடிகிறது. அதற்கு மேலே சிறிய அளவில் ஹெட்லைட்டும், அதற்கு மேலே எதிர்காற்றை தடுக்கக் கூடிய விண்ட்ஸ்கிரீனும் உள்ளன. 3-சக்கர ஆட்டோ-ரிக்‌ஷா போல் இல்லாமல், வாகனத்தின் முன்பக்கத்தில் இரு சக்கரங்களும், பின்பக்கத்தில் ஒரு பெரிய சக்கரமும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விடா நெக்ஸ்2 கான்செப்ட் மாடலில் இருந்து உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் டிரைக் வாகனம் இதுபோன்று அச்சு அசலாக இருக்கும் என கூற முடியாது. ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் மேலும் பல மாறுதல்கள் செய்யப்படலாம். இதனால்தான், இந்த வாகனத்தின் தொழிற்நுட்பங்கள் குறித்த எந்த விபரங்களையும் ஹீரோ மோட்டோகார்ப் தற்போதைக்கு வெளியிடவில்லை.

hero vida novus nex2 concept

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, நெக்ஸ்2 கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் டிரைக் வாகனம் அடுத்த 2026 இல்லாமல், 2027 ஏப்ரல் மாத காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம். ஹீரோவின் தற்போதைய கவனம், வி2 மற்றும் விஎக்ஸ்2 ஆகிய 2-சக்கர எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதே உள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நெக்ஸ்2 ஆனது எதிர்கால நகர்ப்புற போக்குவரத்து தீர்வுகளுக்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பார்வையை பிரதிபலிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 8, 2025, 23:58 [IST]
English summary
Hero motocorp showcased nex 2 electric trike concept check more details here
மேலும்... #hero motocorp #electric vehicles #eicma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X