கையில காசு வச்சிருந்தா இந்த 4 காரை வாங்க ரெடியாகுங்க! தீபாவளிக்கு சரவெடி கன்ஃபார்ம்!
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் பலர் புதிய காரை வாங்குவார்கள். இதை முன்னிட்டு பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்யூவி கார்களை இந்த காலகட்டத்தில் களம் இறக்குகிறது. இப்படியாக வரும் தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களை குறி வைத்து விற்பனை வரும் கார்களின் பட்டியலை காணலாம் வாருங்கள்.
மாருதி எஸ்குடோ:
மாருதி நிறுவனம் மிட் சைஸ் செக்மெண்டில் எஸ்குடோ என்ற காரை களம் இறுக்கிறது. இந்த கார் கிராண்ட் விட்டாரா காரை விட பெரிய காராக வடிவமைத்துள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பு இ-விட்டாரா காரின் வடிவமைப்பை கொண்டுள்ளது.

இ-விட்டாரா காரின் பெயரையும் மாரதி நிறுவனம் எஸ்குடோ என மாற்றியுளு்ளதாக தவல்கள் வெளியாியுள்ளன. இந்நிலையில் அதன் கம்ஷன் இன்ஜின் கார் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் மைல்டு ஹைபிரிட்மற்றும் ஸ்டிராங்க் ஹைபிரிட் கொண்ட வெர்ஷன்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ:
ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை வென்யூ காரை விரைவில் பொது சாலைக்கு கொண்டு வரவுள்ளது. இது சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட கிரெட்டா மற்றும் அல்கஸார் காரின் வடிவமைப்பு இந்த காரின் வடிவமைப்பில் இன்ஸ்பயர் செய்யப்பட்டள்ளது.

இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், லெவல் 2 அடாஸ் சிஸ்டம் ஆகியன இந்த காரில் முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த காரின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் இந்த மாற்றங்கள் செய்யப்படடுள்ளன. கவனிக்கதக்க வகையில் பல மாற்றங்கள் வரவுள்ளது. இந்த காரும் பண்டிகை காலத்தை குறி வைத்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
மஹிந்திரா பொலிரோ:
மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ காரை விரைவில் கொண்டு வரவுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம் வரும் 15ம் தேதி முக்கியமான சில கான்செப்ட் கார்களை அறிமுகப்படுத்துகிறது.

இந்த பொலிரோ கார் லேடர் பிரேம் பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இதில் சில பிரிமியம் அம்சங்களை சேர்த்துள்ளது. இந்த காரில் 1.5லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்:
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் அதன் இவி அவதார அவுட்லுக்கில் அப்டேட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறமும், வெளிப்புறமும் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த காரில் 1.2லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் அப்படியே இந்த காரிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அப்டேட்டில் புதிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விற்பனை சரிவடைந்துவரும் நிலையில் இந்த அப்டேட் இந்த காரின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
