ஆக்டிவா இவியை வாங்க ஆளே இல்லை! தயாரிப்பை நிறுத்தியே 4 மாசம் ஆச்சு!

ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா இ மற்றும் க்யூசி 1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருந்தாலும் கடந்த 4 மாதங்களாக ஒரு ஸ்கூட்டர்கள் கூடதயாரிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த காரணம் மற்றும் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹஏாண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வ தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வந்தது. அப்பொழுது ஆக்டிவா இ மற்றும் க்யூசி 1 ஆகிய ஸ்கூட்டர்களை விற்பனவைக்கு கொண்டு வந்தது. இந்த ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் களம் இறங்கின. இந்த இரண்டு ஸ்கூட்டர்களும் நல்ல விற்பநனையை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சோசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சரர்கள் தரப்பில் இருந்து வெளியான தகவலின் அடிப்படியில் கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கூட அந்நிறுவனம் தயாரிக்கவில்லை எனவும் தற்காலிகமாக இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Honda Activa e and QC1 Production Closed
இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி முதல் ஜூலை 3 மாதம் வரை மொத்தம் 11,168 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளனர். இதில் மொத்தமே 5201 ஸ்கூட்டர்கள் மட்டுமே டீலர்களுக்க சென்றுள்ளது. அதாவது மொத்த தயாரிப்பில் 46.6 ஸ்கூட்டர்களை மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மற்ற ஸ்கூட்டர்கள் எல்லாம் விற்பனையாகாமல் ஸ்டாக்கில் தான் உள்ளது. இதுவும் தயாரிப்பு நிறுத்தப்பட்டதற்கு முக்கியமான காரணம் என தெரியவந்துள்ளது.

ஏன் இந்த ஸ்கூட்டர்கள் விற்பனையாகவில்லை என பார்க்கும் போது ஆக்டிவா இ எலெக்ட்ரிக் றா்கூட்டர் தற்போது பெங்களூருல மும்பை டில்லி ஆகிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பேட்டரி ஸ்வாப்பிங் ஆப்ஷன் உள்ளதால் எந்தெந்த நகரங்களில் ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை அமைக்க முடியுமே அங்கு மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மாறாக க்யூசி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெங்களூரு, ஹைதிராபாத், மும்பை, புனே, டில்லி, சண்டிகர் ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது மார்கெட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல தான் என்றாலும் இதன் விற்பனையும் குறைவாக தான் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் போட்டி தயாரிப்புகள் தான்.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் ஆகிய ஸ்கூட்டர்கள் கிட்டத்தட்ட இதே க்யூசி 1 வாகனத்தின் விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதன் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் ரேஞ்ச் அதிகமாக உள்ளது. இதனால் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது ஹோண்டா க்யூசி 1 குறைவான பெர்ஃபார்மென்ஸ் மற்றும் திறனை வழங்குகிறது.இது தான் இந்த விற்பனை குறைவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் விற்பனை சரிவாக இருக்கலா4ம் எனவும் பேசப்படுகிறது. இது குறித்து அந்நிறுவனம் ஆய்வு செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இந்த தருணத்தில் தனது தனது வாகனத்தின் விற்பனை யுக்தியை மாற்ற வேண்டும். அல்லது வாகன லைன்அப்களையே மாற்றி போட்டி தயாரிப்புகளுக்கு இணையாகவும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் விரிவாக்கம் செய்தால் நிச்சயம் விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஹோண்டாவின் தற்போதைய முயற்சி வெற்றிபெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 21, 2025, 19:15 [IST]
English summary
Honda activa e and qc1 production stopped no scooters made since august
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+