இந்த ஏப்ரலில் ஹோண்டா கார் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.76,100 சலுகை கொடுக்க பெரிய மனசு வேணும்!

ஹோண்டா கார்ஸ் (Honda Cars), இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. இருப்பினும், ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம் இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. இதன் காரணமாகவே, புது, புது கார்களை அறிமுகம் செய்வதுடன், அவ்வப்போது கார்களுக்கு சலுகைகளையும் மறக்காமல் அறிவித்துவிடுகிறது. அந்த வரிசையில் தற்போது 2025 ஏப்ரல் (April) மாதத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில ஹோண்டா கார்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் வழங்கப்பட உள்ள இந்த சலுகைகளின் கீழ் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் எலவேட் (Elevate), சிட்டி (City) மற்றும் அமேஸ் (Amaze) கார்களை சுமார் ரூ.76,100 வரையிலான தள்ளுபடிகள் உடன் வாங்கலாம். இந்த 3 ஹோண்டா கார்களுக்கு ஒவ்வொரு விதமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி விரிவாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

honda announced april car offers

ஹோண்டா எலவேட்: ஹோண்டா நிறுவனத்தில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் காரான இது ஹோண்டாவின் காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக காராக விளங்குகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதத்திற்கான சலுகைகளின்படி அதிகப்பட்ச சலுகையை பெற்றிருக்கும் கார், எலவேட் ஆகும். ரூ.76,100 வரையிலான சலுகைகள் இந்த காருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த சலுகையை பெற வேண்டுமெனில் எலவேட் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான இசட்.எக்ஸ் (ZX)-ஐ சிவிடி கியர்பாக்ஸ் (CVT Gearbox) உடன் வாங்க வேண்டும். அதுவே, எலவேட் காரின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ.56,100 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது இல்லாமல், எலவேட் அபெக்ஸ் எடிசன் காருக்கு ரூ.35,000 மதிப்பிலான ஆக்ஸஸரீகளும் இந்த ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

honda announced april car offers

ஹோண்டா சிட்டி: இந்தியாவில் எத்தனை ஹோண்டா கார்கள் வேண்டுமாயின் வரலாம், போகலாம்... ஆனால் நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஹோண்டா கார், சிட்டி ஆகும். இதனாலேயே அவ்வப்போது சிட்டி கார்களுக்கு மறக்காமல் ஹோண்டா நிறுவனம் சலுகைகளை அறிவித்து விடுகிறது. அந்த வகையில் தற்போது வழக்கமான சிட்டி காருக்கும், சிட்டி ஹைப்ரீட் காருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஹோண்டா சிட்டி காருக்கு வேரியண்ட்டை பொறுத்து ரூ.65,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிட்டி இ:எச்இவி ஹைப்ரீட் காரை நேரடியாக ரூ.65,000 வரையிலான பணம் தள்ளுபடி உடன் வாங்கலாம். ஹோண்டா சிட்டி கார்கள் எஸ்.வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

honda announced april car offers

ஹோண்டா அமேஸ்: இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அதிகம் விற்பனை செய்யும் கார்களுள் அமேஸ் ஒன்றாகும். 2ஆம் தலைமுறை மற்றும் 3ஆம் தலைமுறை அமேஸ் கார்கள் இரண்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், புதிய 3ஆம் தலைமுறை அமேஸ் காரை வாங்கும் குறிப்பிட்ட சில கார்ப்பிரேட் பணியாளர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.

அதுவே, 2ஆம் தலைமுறை அமேஸ் காரை வாங்கும் அனைத்து மக்களும் ரூ.57,200 வரையிலான சலுகைகளை பெறலாம். அதுவும், 2ஆம் தலைமுறை அமேஸ் காரின் எஸ் வேரியண்ட்டை வாங்குவோர் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். கடந்த மார்ச் மாதத்தில், விலை குறைவான அமேஸ் இ வேரியண்ட்டிற்கு பெரிய அளவிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஏப்ரல் மாதத்தில் அவ்வாறான சலுகை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்பது உண்மையே. இதனை சமாளிக்கும் விதமாகவும், பழைய ஸ்டாக் ஹோண்டா கார்களை விற்று தீர்க்கும் முயற்சியாகவும் இந்த ஏப்ரல் மாத சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி ஹோண்டா நிறுவனத்துக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 4, 2025, 20:38 [IST]
English summary
Honda announced car offers upto rupees 76100 for april 2025 in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X