ஜப்பான் கார் கம்பெனியை அசால்ட்டா நினைச்சிடாதீங்க... கஸ்டமர்ஸ் எண்ணிக்கை ஏற்கனவே 15% அதிகமாயிடுச்சு!!
ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் நடந்து முடிந்த கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 518 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 6,394 யூனிட்களாகும். அமேஸ் (Amaze), சிட்டி (City) மற்றும் எலிவேட் (Elevate) கார்களுக்கான பண்டிகை கால தேவை அதிகரித்ததால், முந்தைய 2024 ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 15.3% வளர்ச்சி கண்டுள்ளது.
ஏனெனில், 2024 செப்டம்பரில் 5 ஆயிரத்து 546 கார்களை மட்டுமே இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்திருந்தது. அதேநேரம், கடந்த மாதத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்து ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 6,394 கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 10,518இல் மீதி 4,124 ஹோண்டா கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2024 செப்டம்பரில் 4 ஆயிரத்து 534 கார்களை ஹோண்டா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இருப்பினும் உள்நாட்டில் ஹோண்டா கார்கள் விற்பனை அதிகரித்து இருப்பதற்கு காரணம், 2025 தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் அமேஸ், சிட்டி, மற்றும் எலிவேட் கார்களுக்கு ரூ.1.51 லட்சம் வரை கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்கியது ஆகும்.
பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக, 2025 செப்டம்பரில் எலிவேட் எஸ்யூவி காருக்கு புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு புதுப்பிப்புகள் செய்யப்பட்டன. ஹோண்டா கார்ஸ் இந்தியா (HCIL) நிறுவனம் தற்போதுள்ள அதன் கார் மாடல்கள் வரிசையை மேம்படுத்துவதிலும், எதிர்கால வெளியீடுகளை திட்டமிடுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், அடுத்த தலைமுறை அமேஸ் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் அறிமுகங்கள் அடங்கும்.

எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தனது நுழைவையும் ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தனது பிரபலமான நடுத்தர அளவிலான எஸ்யூவி ஆன ஹோண்டா எலிவேட் காரின் எலெக்ட்ரிக் பதிப்பை உருவாக்கும் பணியில் உள்ளது. இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 2026 அல்லது 2027-க்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் ஹோண்டாவின் மின்மயமாக்கல் உத்தியின் ஒரு பகுதியாகும்.
சமீபத்திய பண்டிகைக் காலத்தில் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் போன்ற ஹோண்டா கார்களுக்கான தேவை அதிகரித்ததால், ஹோண்டா நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்தது. அதேநேரம் மறுப்பக்கம், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் டீலர்ஷிப் நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதிலும் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரின் அறிமுகம் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமேஸ் இந்த 2025 இறுதிக்குள்ளாகவோ அல்லது 2026 தொடக்கத்திலோ விற்பனைக்கு வரலாம். புதிய பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்யவும், உட்புறத்தில் அதிக இடவசதியை மேம்படுத்தவும் புதிய அமேஸ் கார் புதுப்பிக்கப்பட்ட பிளாட்ஃபாரத்தில் கட்டப்படலாம்.
ஹோண்டா ராஜஸ்தானில் உள்ள தபுகாரா உற்பத்தி ஆலையை தற்போதைய மற்றும் எதிர்கால கார்களுக்கான உற்பத்திக்கு பயன்படுத்துகிறது. இது ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனின் மையமாக செயல்படுகிறது. இந்த நிலையில், 2030-க்குள் ஏழு எஸ்யூவிக்கள் உட்பட 10 புதிய கார்களை அறிமுகப்படுத்த போவதாக சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மின்சாரமயமாக்கல் (ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள்) மற்றும் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களைப் பயன்படுத்தி உள்ளூர்மயமாக்கலை அதிகரிப்பது, செலவுகளைக் குறைப்பது ஆகியவற்றில் ஹோண்டா கவனம் செலுத்தி வருகிறது. இதனால், வரும் ஆண்டுகளில் குறைந்த விலையிலான புதிய ஹோண்டா கார்களை எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 ஜப்பான் மொபிலிட்டி கண்காட்சியில், ஹோண்டா நிர்வாகிகள் இந்தியாவை ஒரு முக்கிய சந்தையாக மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும், 2030-க்குள் எஸ்யூவி மற்றும் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் முன்னேற்றம் காணும் லட்சியமான தயாரிப்பு திட்டத்தை சமீபத்தில் அறிவித்த நிலையில், தற்போது உள்நாட்டு விற்பனையில் 15.3% வளர்ச்சியை பதிவு செய்து இருப்பது ஹோண்டா நிறுவனத்திற்கு பெரிதும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









