ஹோண்டா கார் ஷோரூமை சும்மா கூட யாரும் வந்து எட்டி பார்க்க மாட்றாங்க! இப்படியே போனால் இழுத்து மூட வேண்டியதுதான்!
ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனமான ஹோண்டா கார்ஸ், இந்தியாவில் தற்போதைக்கு வெறும் மூன்றே மூன்று கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்கிறது. அவை மூன்றும் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இந்தியாவில் ஓர் நிலையான மார்க்கெட்டை உருவாக்க போராடும் கார் நிறுவனங்களுள் ஹோண்டா கார்ஸ் ஒன்றாகும். மற்ற ஜப்பானிய கார் நிறுவனங்களான சுஸுகி (Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) மாதத்திற்கு ஆயிரக்கணக்கிலான கார்களை விற்பனை செய்துவரும் நிலையில், ஹோண்டாவால் வெறும் சில ஆயிரம் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம், ஹோண்டாவில் இருந்து வெறும் மூன்று கார் மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவது ஆகும். ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் அந்த மூன்று ஹோண்டா கார்களாவன, அமேஸ் (Amaze), எலிவேட் (Elevate) மற்றும் சிட்டி (City) ஆகும். இத்தனைக்குm இவை மூன்றும் பெட்ரோல், ஹைப்ரீட் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த மே மாதத்தில் எலிவேட் காரின் புதிய அபெக்ஸ் சம்மர் எடிசன் (Apex Summer Edition) அறிமுகம் செய்யப்பட்டது. வழக்கமான எலிவேட் கார் உடன் ஒப்பிடுகையில், அபெக்ஸ் சம்மர் எடிசனில் 360-டிகிரி கேமராக்கள் போன்ற சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதேபோல், அமேஸ் காரிலும் வேரியண்ட்களின் வரிசையில் சில மாற்றங்களை ஹோண்டா கொண்டுவந்தது.

அப்படியிருந்தும், கடந்த மே மாதத்தில் 3 ஆயிரத்து 950 கார்களை மட்டுமே இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இது, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 18.08% குறைவாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 4 ஆயிரத்து 822 கார்களை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மே மாதத்தில் 590 ஹோண்டா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனென்றால், கடந்த ஏப்ரல் மாதத்தில் 3 ஆயிரத்து 360 ஹோண்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுவரையில் நாம் பார்த்தவை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா கார்களின் எண்ணிக்கை ஆகும்.

இந்தியாவில் இருந்து கடந்த மே மாதத்தில் சில ஆயிரம் ஹோண்டா கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவை கார் உற்பத்தி மையமாக பயன்படுத்தும் கார் நிறுவனங்களுள் ஹோண்டாவும் ஒன்றாகும். இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களுக்கு இணையான எண்ணிக்கையிலான கார்களை இங்கு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஹோண்டா ஏற்றுமதி செய்கிறது.
ஏனெனில், நம் நாட்டில் கார் உற்பத்தி செலவு மற்றும் போக்குவரத்து செலவானது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். கடந்த மே மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆகும். அதுவே, 2024 மே மாதத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையை போல், வெளிநாட்டு ஏற்றுமதியும் அதிகமாக இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024 மே மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்ததை காட்டிலும் அதிகமாக, 6 ஆயிரத்து 251 கார்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், ஒரே வருடத்தில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. இவ்வாறு, ஹோண்டா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டுமே குறைந்து வருவது இந்தியாவில் இந்த ஜப்பானிய கார் நிறுவனத்தின் சரிவை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









