ஹோண்டா கார் வாங்க வைக்க இதுக்கு மேல் சலுகை வழங்க முடியாது! சென்னையில் வசிப்பவங்க யூஸ் பண்ணிக்கலாம்!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் இந்திய கார்கள் சந்தையில் தனது இடத்தை தக்க வைக்க தொடர்ந்து போராடி வருகிறது. ஹோண்டாவில் இருந்து தற்போதைக்கு அமேஸ் (Amaze), சிட்டி (City), எலிவேட் (Elevate) என்கிற மூன்று கார் மாடல்கள் மட்டுமே தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஹோண்டா சிட்டி ஆனது ஹைப்ரீட் வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு மூன்றே மூன்று கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வந்தாலும், ஹோண்டா கார்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் டீலர்ஷிப் ஷோரூம்களும், கார் சர்வீஸ் மையங்களும் உள்ளன. அவ்வாறு சென்னை, ஆலப்பாக்கத்தில் செயல்படும் ஹோண்டாவின் 'மான்சரோவர் ஹோண்டா கார்ஸ்' (Maansarovar Honda Cars) டீலர்ஷிப் ஷோரூமை தற்போது நாங்கள் பார்வையிட்டோம்.

honda cars year-end offers

அப்போது, அந்த ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்கவர் ஹோண்டா கார்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது மட்டுமன்றி, இந்த ஹோண்டா ஷோரூமில் 2025 வருட இறுதியை முன்னிட்டு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் கேட்டறிய முடிந்தது. அவற்றை தான் இந்த தொகுப்பில் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள போகிறோம்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் விலை குறைவான கார்களுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்துக் கொண்டதற்கு பிறகு இந்த குறிப்பிட்ட ஹோண்டா ஷோரூமில் கஸ்டமர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதேநேரம் தற்போது, வருட இறுதி சலுகைகளை பயன்படுத்தி நிறைய பேர் வாங்க விரும்புவார்கள் என்பதால், இந்த ஹோண்டா ஷோரூமில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

honda cars year-end offers

இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் மிக குறைவான செடான் (Sedan) ரக கார்களுள் ஒன்றான ஹோண்டா அமேஸ் 2ஆம் தலைமுறை மற்றும் 3ஆம் தலைமுறை என இரு தலைமுறைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 2ஆம் தலைமுறை அமேஸ் காருக்கு ரூ.98,000 வரையிலும், 3ஆம் தலைமுறை மாடலுக்கு ரூ.87,000 வரையிலும் இந்த குறிப்பிட்ட ஆலப்பாக்கம் ஹோண்டா ஷோரூமில் 2025 வருட இறுதி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சற்று விலைமிக்க கார்களான சிட்டி மற்றும் எலிவேட் கார்களுக்கு இந்த ஷோரூமில் ரூ.1 லட்சத்து 78,000 வரையிலும் வருட இறுதி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பணம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பிரேட் போனஸ் உள்பட ஹோண்டா மோட்டார்சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கும் ஸ்பெஷல் சலுகை கிடைக்கும் என ஷோரூம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

honda cars year-end offers

விற்பனையை பொறுத்தவரை, குறைந்த விலையில் அடாஸ் (ADAS) உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் உடன் கிடைக்கும் அமேஸ் சிறப்பாக விற்பனையாகுவதாக கூறும் இந்த ஷோரூம் அதிகாரி, இதற்கடுத்து சிட்டி செடான் காருக்கு கஸ்டமர்கள் அதிகம் வருவதாக தெரிவிக்கிறார். இவற்றிற்கு இணையாக சிறப்பாக விற்பனையாகுவதற்காக எலிவேட் காருக்கும் தொடர்ந்து அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா கார்களின் மார்க்கெட் சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு சுருங்கியுள்ளது என சொன்னால், அது மிகையில்லை. இருப்பினும், இந்த நிலைமையை சரி செய்ய தொடர்ந்து புது, புது முயற்சிகளை மேற்கொண்டுவரும் ஹோண்டா நிறுவனம், இவ்வாறு டீலர்கள் லெவலிலும் சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, December 26, 2025, 5:00 [IST]
English summary
Honda cars year end offers at chennai alapakkam maansarovar dealership showroom
மேலும்... #honda cars #Year Ender 2025 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X