ஹோண்டா சிட்டி கார் மாடலில் ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்.. இதுதான் விலையா! ரோடு ஃபுல்லா இந்த காரு மேயபோகுது!
ஹோண்டா (Honda) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக சிட்டி (City) இருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் இதுவாகும். இந்த கார் மாடலையே கூடுதல் பிரீமியம் அம்சங்கள் தாங்கியதாக ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதாவது, சிறப்பு பதிப்பையே சிட்டி-யில் ஹோண்டா விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. சிட்டி அபெக்ஸ் எடிசன் (City Apex Edition) எனும் பெயரிலேயே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
வழக்கமான சிட்டி கார் மாடலைக் காட்டிலும் அதிகம் பிரீமியம் அம்சங்கள் தாங்கியதாக இந்த பதிப்பு இருக்கும். இந்த ஸ்பெஷல் பதிப்பு அதிகம் பிரீமியம் அம்சங்களை விரும்பும் பணக்காரர்களைக் கவரும் பொருட்டே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. சிட்டி கார் மாடலின் உயர்நிலை தேர்வுகளான வி (V) மற்றும் விஎக்ஸ் (VX) ஆகியவற்றிலேயே இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கும்.

அனைத்து வேரியண்டுகளிலும் இந்த பதிப்பை இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியாது. தொடர்ந்து, மேனுவல் மற்றும் சிவிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. இவற்றிற்கு ரூ. 13.30 லட்சம் தொடங்கி ரூ. 15.62 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அதிக விலைக்கு ஏற்ப அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கியதாகவே இந்த சிட்டி அபெக்ஸ் எடிசன் காட்சியளிக்கின்றது. அந்தவகையில் இந்த காரின் உட்பக்கம்கூட பிரீமியம் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. பழுப்பு நிறத்தாலேயே அது அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், பிரீமியம் தர லெதர் (இருக்கை, டோர் பேனல் மற்றும் இன்னும் பல பகுதிகளில் இதைக் காண முடியும்), தனித்துவமான பேட்ஜ் மற்றும் எம்பளங்கள் ஆகியவற்றால் இந்த ஸ்பெஷல் பதிப்பு அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுபோன்று அலங்கரிப்பு விஷயத்தில் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு சிட்டி அபெக்ஸ் எடிசன், வழக்கமான பதிப்பு சிட்டி இடமிருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும்.
எஞ்சினைப் பொருத்த வரை எந்த மாற்றமும் இந்த சிறப்பு பதிப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு சான்றாக காரில் இடம் பெற்றிருக்கும் எஞ்சின் உள்ளது. வழக்கமான பதிப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர், விடெக் பெட்ரோல் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 121 பிஎஸ் மற்றும் 145 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். ஹோண்டா நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பு சிட்டி கார் மாடலை வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய செடான் கார் காதலர்களின் ஃபேவரிட் கார் மாடலாக சிட்டி காட்சியளிக்கின்றது. இந்த காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாகவே தற்போது சிறப்பு பதிப்பை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









