27கிமீ மைலேஜ் தரும் ஹைப்ரீட் காரை வாங்க இதைவிட என்ன காரணம் வேண்டும்? ஹோண்டாவுக்கு எப்படி கட்டுப்படி ஆக போகுதோ!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் அதன் பிரபலமான சிட்டி (City) காரில் இ:எச்.இ.வி (e:HEV) என்கிற பெயரில் ஹைப்ரீட் வெர்சனை கடந்த சில வருடங்களாக விற்பனை செய்து வருகிறது. சிட்டி காரின் விற்பனையில் ஹைப்ரீட் வெர்சனின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இதனாலேயே சிட்டி ஹைப்ரீட் காரில் அவ்வப்போது அப்டேட்களை மறக்காமல் ஹோண்டா நிறுவனம் கொண்டுவந்து விடுகிறது. அந்த வகையில், தற்போது சிட்டி ஹைப்ரீட் காரின் விலையை ஹோண்டா கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்தும், சிட்டி இ:எச்இவி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தற்சமயம் மூன்றே மூன்று கார்களை மட்டுமே விற்பனை செய்கிறது. எலிவேட் (Elevate), அமேஸ் (Amaze) மற்றும் சிட்டி என்பன அந்த மூன்று ஹோண்டா கார்கள் ஆகும். இதில், நீண்ட வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் இருப்பது, சிட்டி ஆகும்.

honda city e-hev price slashed

ஹோண்டாவின் உலக பிரபலமான செடான் (Sedan) ரக காரான சிட்டி கடந்த காலங்களில் இருந்து பல்வேறு வெர்சன்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அந்தந்த காலத்திற்கு ஏற்ப ஹோண்டா சிட்டி கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அப்டேட் செய்யப்பட்டு இருப்பது சிட்டி இ:எச்இவி காரின் வேரியண்ட்களின் வரிசையையும், சில வேரியண்ட்களின் விலையையும் ஆகும்.

அந்த வகையில், சிட்டி ஹைப்ரீட் காரின் விலை குறைவான வி வேரியண்ட்டின் விற்பனையை ஹோண்டா நிறுத்திக் கொண்டுள்ளது. இதனால், இனி இசட்.எக்ஸ் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே சிட்டி இ:எச்இவி காரை வாங்க முடியும். வி வேரியண்ட்டின் விற்பனையை ஹோண்டா நிறுத்தி இருப்பதற்கு காரணம், இசட்.எக்ஸ் வேரியண்ட்டின் விலையை குறைப்பதினால் ஆகும்.

honda city e-hev price slashed

சிட்டி இ:எச்இவி காரின் இசட்.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.95,000 குறைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த விலை குறைப்பினால், சிட்டி ஹைப்ரீட் காரின் இசட்.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20 லட்சத்திற்கு கீழ் குறைந்து ரூ.19.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது இந்த காரின் முந்தைய விலையை காட்டிலும் 4.56% குறைவாகும்.

மேலும் ரூ.19.90 லட்சம் என்பது, தற்போது விற்பனை நிறுத்தப்பட்டுள்ள வி வேரியண்ட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த எக்ஸ்-ஷோரூம் விலையை காட்டிலும் ரூ.90 ஆயிரம் மட்டுமே அதிகமாகும். முன்பு வி மற்றும் இசட்.எக்ஸ் வேரியண்ட்களின் விலைகள் இடையேயான வித்தியாசம் ரூ.1.85 லட்சமாக இருந்தது. சிட்டி ஹைப்ரீட் காரின் விலை சமீபத்தில் கடந்த மே மாதத்தில் ரூ.29,900 உயர்த்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

honda city e-hev price slashed

1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் உடன் சிட்டி ஹைப்ரீட் கார் இயங்குகிறது. பெட்ரோல் என்ஜின் மூலமாக காரின் பேட்டரி சார்ஜ் ஆகிறது. லிட்டருக்கு ஏறக்குறைய 27கிமீ மைலேஜ் தரக்கூடிய இந்த ஹைப்ரீட் காரில் லெவல்-2 அடாஸ் (ADAS) வசதிகள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா சிட்டி இ:எச்இவி காரின் வி வேரியண்ட்டை காட்டிலும் அதிகப்படியான தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் இசட்.எக்ஸ் வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், குறைக்கப்பட்ட விலையில் இனி சிட்டி ஹைப்ரீட் காரை அதிக தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் வாங்கலாம். வாடிக்கையாளர்களை கவர இதுவும் ஒரு யுக்தி ஆகும்.

Source: Express Drives (https://www.financialexpress.com/auto/)

Translated and published for our readers in Tamil.

More from DriveSpark

Article Published On: Friday, July 4, 2025, 20:53 [IST]
English summary
Honda city e hev hybrid car price slashed in india check new price here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X