27.26 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரின் விலையை ரூ95 ஆயிரம் குறைச்சிட்டாங்க! இப்ப என்ன ரேட் தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி ஹைபிரிட் காரின் விலையை ரூ95ஆயிரம் வரை குறைத்துள்ளது. அதே நேரம் பேஸ் வேரியன்ட் காரை விற்பனையிலிருந்து நிறுத்தியுள்ளது. இசட் எக்ஸ் வேரியன்ட் காரின் விலையை ரூ20 லட்சத்திற்கும் குறைவான விலையில் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் இந்த ரக கார்களை விரும்பி வருகின்றனர். அதே நேரத்தின் செடான் கார்களின் வீிற்பனை சரிந்து வருகிறது. இந்த இரண்டையும் சமன் செய்யவும், இந்தியாவில் ஹைபிரிட் தொழிற்நுட்பத்திற்கு கிடைக்கும் வரவேற்ப்பை பார்க்கவும் ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி என்ற காரின் ஹைபிரிட் வெர்ஷனாக இ:எச்இவி என்ற காரை விற்பனை செய்துள்ளது வருகிறது.

Honda City Hybrid Price Slashed

இந்நிலையில் இந்த காரின் விற்பனையில் புதிய மாற்றத்தை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்த காரின் என்டரி லெவல் வேரியன்டான வி வேரியன்ட் காரின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அவித்துள்ளது. இனி இந்த கார் ஒரே ஒரு வேரியன்டாக இசட் எக்ஸ் என்ற டாப் வேரியன்டில் மட்டுமே விற்பனையாகும் என அந்நிறுவனம் தெரவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் டாப் வேரியன்டான இசட் எக்ஸ் வேரியன்டின் விலையை ரூ20 லட்சத்திற்குள் கொண்டு வர வேண்டும் என அந்நிறுவனம் திட்டமிட்டு தற்போது ரூ95 ஆயிரம் விலையை குறைத்து ரூ19.90 லட்சம் என அந்த காருக்க எக்ஸ் ஷஏாரூம் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்திய மார்கெட்டில் இந்த காருக்கு நேரடி போட்டியாக எந்த கார்களும் விற்பனையில் இல்லை.

Honda City Hybrid Price Slashed

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காரில் முழுமையான எல்இடி ஹைட்லைட்டுகள், டிஆர்எல், டுயல் டோனில் 16 இன்ச் அலாய் வீல்கள், 8 இன்ச் கொண்ட சென்ட்ரல் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, முக்கியமாக சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், 8 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது தான் இதற்கு முக்கியமான காரணம். இந்த காரில் 6 ஏர்பேக்குகள், டிராக்ஷன் கண்ட்ரோல், மல்டி ஆங்கிள் ரியர் கேமரா, எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐஎஸ்ஓ சைல்டு சீட் மவுண்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

Honda City Hybrid Price Slashed

இந்த காரில் லெவல் 2 அடாஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இதன் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொத்தப்பட்டுள்ளது. இது அட்கின்சன் ஹைபிரிட் தொழிற்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 124 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 27.26 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களுக்கு நல்ல மவுசு இருந்தாலும் இந்த காரின் விலை அதிகமாக இருப்பதால் விற்பனை சற்று குறைவாகவே உள்ளது. இருந்தாலும் ஹோண்டா இந்த ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை சோதனை செய்து தான் வருகிறது. இதை முழுவதுமாக இந்தியாவிலேயே தயாித்தால் அடுத்தடுத்த கார்களில்இதை பொருத்தும் போது குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் கார்கள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 8, 2025, 8:10 [IST]
English summary
Honda city hybrid price slashed by rs 95000 in india
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X