வெறும் 406 கார் தான் வித்திருக்குது! ஒரு காலத்துல ராஜா மாதிரி வித்த காரு, இப்ப யாருமே மதிக்கல!

செடான் கார்கள் இந்தியாவில் ஒரு காலத்தில் சிறப்பாக விற்பனையாகும் காராக இருந்தது. எஸ்யூவி கார்களின் வருகைக்கு பிறகு படிப்படியாக செடான் கார்களின் விற்பனை சரிந்து வருகிறது. இருந்தாலும் செடான் கார் விரும்பிகள் பலர் செடான் காரை தான் விரும்பி வாங்கி வருகின்றனர். அதன்படி இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் செடான் காரின் விற்பனை தற்போது சரிந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா அமேஸ், மாருதி சுஸூகி டிசையர் உள்ளிட்ட கார்கள் விற்பனையாகி வருகிறது. இதில் ஹோண்டா சிட்டி காரின் விற்பனை மிக மோசமான அளவில் குறைந்ததுள்ளது. கடந்தாண்டை விட 50.73 சதவீதம் அளவிற்கு விற்பனை கணிசமான அளவு சரிந்துள்ளது.

Honda City Sales April 2025

ஹோண்டா சிட்டி கார் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 824 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதுவே கடந்தாண்டு விற்பனை பாதிக்கும் அதிகமாக விற்பனை குறைந்துள்ளது. இந்த காரின் அம்சம், இன்ஜின் மற்றும் பிற விபரங்களை விரிவாக காணலாம் வாருங்கள்.

ஹோண்டா சிட்டி காரை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளத. இந்த கார் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும் ,145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் 7 ஸ்பீடு சிபிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 17.8 கி.மீ மைலேஜை வழங்குகிறது.

Honda City Sales April 2025

இது போக 1.5 லிட்டர் இன்ஜினில் ஆட்டோமெட்டிக் கியர் வேரியன்டில் விற்பனையாகி வருகிறது. 18.4 கி.மீ மைலேஜை வழங்குகிறது. இந்த கார் மார்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், மாருதி சியாஸ், ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட கார்கள் விற்பனையாகி வருகிறது .

இந்த காரின் உள்ளே 8 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், சன்ரூஃப், பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், அடாஸ் தொழிற்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் இரக்கிறது. இந்த கார் மார்கெட்டில் ரூ12.28 லட்சம் முதல் ரூ16.65 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Honda City Sales April 2025

இந்தியாவில் எஸ்யூவி கார்கள் ஆதிக்கம் அதிரித்திருப்பது செடான் விற்பனையை பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்தியாவில் பெரிய விற்பனை பாதித்தாலும் செடான் காருக்கு தனி ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். சில ஆண்டுகளில் இந்த காருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டு விற்பனையில் பெரிய அளவில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காரின்விற்பனையை அதிகரிக்க பல்வேறு தள்ளுபடிகளையும் அந்நிறுவனம் வழங்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனை மிக குறைவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் தற்காலிகமாக விற்பனை குறைவு ஏற்பட்டாலும் விரைவில் இதன் விற்பனை அதிகரிக்கும் என மார்கெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் இது தெரியவரும்!

More from DriveSpark

Article Published On: Tuesday, May 27, 2025, 13:45 [IST]
English summary
Honda city sales fells only 406 units sold
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X