அதுக்குள்ள ஷோரூமுக்கு வந்தாச்சா... இந்த புதிய சிட்டி கார் மேல ஹோண்டா ரொம்ப நம்பிக்கை வெச்சி இருக்கு!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனத்தில் இருந்து புதியதாக சமீபத்தில் சிட்டி ஸ்போர்ட் (City Sport) கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபலமான ஹோண்டா சிட்டி காரின் புதிய விலைமிக்க டாப் வேரியண்ட்டாக சிட்டி ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.89 லட்சம் மற்றும் ரூ.14.97 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் காரை பற்றிய விபரங்களை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த நிலையில், சிட்டி ஸ்போர்ட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கி உள்ளன. இதனை உறுதி செய்யும் படங்கள் ஹோண்டா ஷோரூம் ஒன்றில் இருந்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கார்கள் ஷோரூமுக்கு வர துவங்கியுள்ளதால், சிட்டி ஸ்போர்ட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இந்த காரில் அப்படி என்ன சிறப்பு என்றால், ஹோண்டாவின் பிரபலமான செடான் (Sedan) ரக காரான சிட்டி காரின் உடலமைப்பை கொண்டது என்பதாகும்.

honda city sport at dealership showrooms

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில ஹோண்டா கார் மாடல்களுள் சிட்டி ஒன்றாகும். இதனாலேயே முடிந்தவரையில் சிட்டி காருக்கு அவ்வப்போது அப்டேட்களை ஹோண்டா வழங்கி விடுகிறது. அந்த வகையில் மக்களை கவரும் முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ளதே சிட்டி ஸ்போர்ட் கார் ஆகும்.

இந்தியாவில் பல விதமான வேரியண்ட்களில் ஹோண்டா சிட்டி கார் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றுள் வி மற்றும் வி.எக்ஸ் (VX) வேரியண்ட்களில் சிட்டி ஸ்போர்ட் கிடைக்கும். வழக்கமான சிட்டி காருக்கும், புதிய சிட்டி ஸ்போர்ட் காருக்கும் தோற்றத்தில் முக்கியமான வித்தியாசம் என்றால், அது சிட்டி ஸ்போர்ட் காரில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும் கருப்பு நிற பேனல்கள் ஆகும்.

காரின் முன்பக்கத்தில், க்ரில், ஏர்டேம் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. இதில், காரின் முன்பக்க கிரில்லின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. சிட்டி காரின் வேரியண்ட்களில் கட்ட கட்டமான டிசைனில் க்ரில் வழங்கப்படும் நிலையில், சிட்டி ஸ்போர்ட் காரில் அடுக்கி வைக்கப்பட்டது போன்றதான பேட்டர்னில் க்ரில் பகுதி உள்ளது.

முன்பக்க க்ரில், ஏர்டேம் மட்டுமின்றி, காரின் பின்பக்கத்தை காண பக்கவாட்டில் பொருத்தப்படும் கண்ணாடிகளின் ஃபிரேமும் கருப்பு நிறத்தில் கிடைக்கும். இவற்றுடன், காரின் மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா கருப்பு நிறத்தில் வழங்கப்படுவதுடன், காரின் பின்பக்கத்தில் ஸ்போர்டியான டிசைனில் டிரங்க் லிப் ஸ்பாய்லரும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் வழங்கப்படும் 'Sport' என்கிற லோகோ தனியாக தெரியும் வகையில் க்ரோம் ஃபினிஷிங்கில் கிடைக்கும்.

தற்போது ஷோரூமுக்கு வந்துள்ள ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் கார் கிரே நிறத்தில் உள்ளது. அதாவது, மேற்கூறப்பட்ட க்ரில், ஏர்டேம் உள்ளிட்டவை தவிர்த்து, காரின் மற்ற பாகங்கள் அனைத்தும் கிரே நிறத்தில் உள்ளன. காரின் அலாய் சக்கரங்களின் ரிம்கள் உள்பட. சிட்டி காரின் மற்ற வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் இரட்டை நிறங்களில் வழங்கப்படுகின்றன.

சிட்டி ஸ்போர்ட் காரை எந்த கலர் ஆப்ஷனில் வாங்கினாலும், அந்த நிறத்தில்தான் சக்கரங்களின் ரிம்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் வொயிட் பேர்ல் மற்றும் மீட்டியராய்ட் கிரே மெட்டாலிக் என மூன்று விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் சிட்டி ஸ்போர்ட் கிடைக்கிறது. இந்த காரின் உட்புற கேபின் முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது. அதேநேரம், காருக்குள் நிறைய இடங்களில் சிவப்பு நிறங்களையும் பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா சிட்டி காரை வாங்க ரொம்ப நாளா திட்டமிட்டு வருபவர்களுக்கு சிட்டி ஸ்போர்ட் கார் மிகவும் ஏற்றதாக இருக்கும். கொஞ்சம் செலவு செய்தால் சூப்பரான, ஸ்டைலிஷான சிட்டி காரை வாங்கலாம். இத்தகைய கார் தற்போது ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், விரைவில் இந்த காரின் டெலிவிரிகளை எதிர்பார்க்கலாம். இதனால், சிட்டி ஸ்போர்ட் கார்கள் ஷோரூம்களுக்கு வர ஆரம்பித்து இருப்பது காரை புக் செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 25, 2025, 19:14 [IST]
English summary
Honda city sport starts to reach dealership showrooms in india check all details here
மேலும்... #honda #honda city #car showroom #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+