சிஎன்ஜி இல்லைனா வேலைக்கே ஆகாது.. இத புரிஞ்சுட்டு நல்ல முடிவை எடுத்திருக்கு ஹோண்டா.. என்ன அது?

இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையை உணர்ந்து பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் பிரபல கார் மாடல் ஒன்றில் சிஎன்ஜி ஆப்ஷனை சேர்த்திருக்கின்றது. எலிவேட் (Elevate) கார் மாடலிலேயே அது சிஎன்ஜி தேர்வைச் சேர்த்திருக்கின்றது. ரெட்ரோஃபிட் செய்தே சிஎன்ஜி ஆப்ஷனை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் முன் வந்திருக்கின்றது. ஏற்கனவே இந்த செயலை சில முன்னணி ஹோண்டா கார் விற்பனையாளர்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டாவும் இந்த பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, ஹோண்டா எலிவேட் கார் பிரியர்கள் வரும் நாட்களில் அந்த காரை சிஎன்ஜி ஆப்ஷனிலும் வாங்கிக் கொள்ள முடியும். இதை வாங்குகையில், உத்தரவாதம் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றிலும் எந்த சிக்கலும் ஏற்படாது என்பது கவனிக்கத்தகுந்தது.

Honda elevate cng

பொதுவாக ஆஃப்டர் மார்க்கெட் சிஎன்ஜி கிட்களைப் பொருத்துகையில் உத்தரவாதம் மற்றும் இன்சூரன்ஸை கிளைம் செய்வதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படும். ஏனெனில், இப்போது சந்தையில் பெரும்பாலான சிஎன்ஜி தயாரிப்பாளர்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு தங்களின் கிட்களை தயாரிப்பதில்லை. இந்த மாதிரியான கிட்களில் ஆபத்து அதிகம்.

இதன் விளைவாகவே உத்தரவாதம் மற்றும் இன்சூரன்ஸை கிளைம் செய்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால், ஹோண்டா டீலர்கள் மற்றும் ஹோண்டா நிறுவனம் ரெட்ரோஃபிட் செய்து தரும் சிஎன்ஜி கிட்கள், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு தயாரிக்கப்பட்டவை ஆகும். ஆகையால், சாலை பயன்பாட்டின்போதும்கூட இது எந்த சட்ட சிக்கலையும் சந்திக்காது.

ஆகையால், ஹோண்டா எலிவேட் விற்பனை வரும் நாட்களில் இரட்டிப்படையும் என நம்பப்படுகின்றது. ஏற்கனவே நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக எலிவேட் உள்ளது. இதுவே இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

அதிக கவர்ச்சியான மற்றும் மனதை மயக்கும் அம்சங்கள் பலவற்றை இது தன்னுள் தாங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதிகம் மைலேஜை விரும்புவோரையும் ஈர்க்கும் விதமாக எலிவேட் கார் மாடலில் சிஎன்ஜி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ மைலேஜ் விபரம் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இருப்பினும், அது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26 கிமீ முதல் 28 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். இந்தியாவில் ஹோண்டா எலிவேட் 1.5 லிட்டர் ஐ-விடெக் டிஓஎச்சி எஞ்சின் ஆப்ஷனில் மட்டும் விற்பனைக்குக் கிடைக்கின்றுத. இது அதிகபட்சமாக 89 kW மற்றும் 145 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றன. இது லிட்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக 16.92 கிமீ வரையில் மைலேஜை தரும். மேலும், இந்த கார் இந்தியாவில் ரூ. 11.91 லட்சம் என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதை அறிந்துக் கொண்டே, இந்த ஆப்ஷன் இல்லை என்றால் வேலைக்கே ஆகாது என ஹோண்டா நிறுவனம் அதன் எலிவேட் கார் மாடலில் தற்போது சிஎன்ஜி ஆப்ஷனை ரெட்ரோஃபிட் செய்து விற்பனைக்கு வழங்க முன் வந்திருக்கின்றது. ஆகையால், இதன் விற்பனை மேலும் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 19, 2025, 5:30 [IST]
English summary
Honda elevate introduces cng option for buyers across india
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+