இந்த கார் ரோட்டுல போனா எல்லாரும் திரும்பி பாப்பாங்க! அப்படி என்ன கார் தெரியுமா?

ஹோண்டா நிறுவனத்தின் எலெவேட் கார் அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் காராக இருக்கிறது.இந்த கார் 4.2-4.4 மீ நீளம் கொண்டு எஸ்யூவிகார் செக்மெண்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இந்த கார் அந்நிறுவனம் சமீபத்தில் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்திய 0 ஆல்ஃபா என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் பல்வேறு அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 0 ஆல்ஃபா கார் 2027ம் ஆண்டு இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலவேட் என்ற கார் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. இன்று அந்நிறுவனத்திற்கு பெரும் விற்பவனை நடப்பதற்கு இந்த கார் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த விற்பனையை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள அந்நிறுவனம் இதில் ஸ்பெஷல் எடிசன் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அந்நிறுவனத்தின் சமூகவலைத்தள ஹேண்டில்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.

Honda Elevate New Edition

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை விற்க புதிய திட்டத்தை களம் இறங்குகிறது. அந்நிறுவனம் ஜப்பான், அமெரிக்காவை தொடர்ந்து மிகப்பெரிய மார்கெட்டாக இ்நதியாவையும் கருதுகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 10 புதிய கார்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இதில் 7 கார்கள் எஸ்யூவி கார்களாக உள்ளன.

இந்நிலையில் தற்போது விற்பனையை சற்று சூடுபிடிக்க வைக்க தனது எலவேட் எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிசனை உருவாக்கியள்ளது. இது குறித்த டீசர் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசரில் போல்ட் மற்றும் எக்ஸ்ப்ளோரர் ஆகிய வாசங்கள் இடம்பெற்றள்ளது. இதனால் இந்த எடிசன் போல்ட் அல்லது எக்ஸ்ப்ளோரர் எடிசன் என்ற பெயர் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda Elevate New Edition

இந்த டீசரில் உள்ள கார் எர்த்தி பிரெளன் நிறத்தில் சிவப்பு நிற ஆக்ஸட்களுடன் உள்ளது. இதன் சிவப்பு நிற ஆக்ஸன்ட்கள் முன்பக்க பம்பர் பகுதியிலும், பக்கவாட்டில் உள்ள ஃபாக் லைட்டிலும் உள்ளது. இந்த காரில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மொத்த வீலும் இல்லாமல் சில போர்க்ஸ் மட்டும் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது போக கிரில் மற்றும் பானட் பகுதியிலும் சிவப்பு நிற டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உட்புற ஆம்பியன்ஸ் லைட்டும் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. உட்புற கட்டமைப்பு கருப்பு மற்றும் ஐவரி கலரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புற டிசைன் முழுமையாக கருப்பு நிற டிசைனாக இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

Honda Elevate New Edition

இதற்க முன்னர் வெளியான அப்பெக்ஸ் சம்மர் எடிசன் பேக்கில் உள்ள அதே 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட சாதாரண எடிசனில் இல்லாத சில அம்சங்கள் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இன்ஜினை பொருத்தவரை அதே 1.5லி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் தான் இடம்பெறுகிறது. இது 119 பிஎச்பி பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெவேட் காரின் புதிய எடிசன் எப்பொழுது வரும் என்ற தகவல் இதுவரை இல்லை. ஆனால் நிச்சயம் இது வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம். தனித்துவமான காரை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு தான். இந்த கார் நிச்சயம் சிறப்பான விற்பனையை பெறும்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 2, 2025, 10:15 [IST]
English summary
Honda elevate new edition teased ahead of launch details
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X