ஜப்பானியர்களும் நல்ல இருக்கணும்.. இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும் கார் இவ்ளோ பாதுகாப்பானதா!!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), தன்னுடைய தாய் நாடான ஜப்பானுக்கு இந்தியாவில் இருந்தே எலிவேட் (Elevate) கார்களை ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கு இந்தியா மற்றும் ஜப்பான் இரண்டு நாடுகளிலும் சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தான் ஓர் மிக அதிக பாதுகாப்பான கார் என்பதை எலிவேட் நிரூபித்திருக்கின்றது.

சமீபத்தில் ஜப்பானுக்கான மேட்-இன் இந்தியா எலிவேட் காரை ஜப்பான் என்சிஏபி (Japan NCAP) மோதல் ஆய்விற்கு உட்படுத்தியது. இதில் அக்கார் மாடல் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றது. இதன் வாயிலாக மிக அதிக பாதுகாப்பைத் தரும் கார் மாடல் இது என்பது தெரிய வந்திருக்கின்றது.

Honda elevate earns 5-star rating

அதாவது ஜப்பானியர்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் எலிவேட் கார்களும் மிக அதிக பாதுகாப்பான மற்றும் தரமான காராகவே தயாரிக்கப்படுகின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. 193.8 புள்ளிகளுக்கு 176.23 புள்ளிகளையே அந்த கார் மாடல் மோதல் ஆய்வில் பெற்றிருக்கின்றது. இதுவே எலிவேட் காரின் உச்சபட்ச பாதுகாப்பு திறனுக்கு கிடைத்த அதிகபட்ச புள்ளிகள் ஆகும்.

குறிப்பாக, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அடாஸ் (Advanced Driver Assistance System) அம்சத்திற்கு 'ஏ' (A) ரேங்க் வழங்கப்பட்டு இருக்கின்றது. 85.8 புள்ளிகளுக்கு 82.22 புள்ளிகளை அது பெற்றிருக்கின்றது. ஹோண்டா நிறுவனம் இந்த காரை டபிள்யூஆர்-வி எனும் பெயரிலேயே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Honda elevate earns 5-star japan ncap rating

இதுமட்டுமல்ல ஜப்பானிய சந்தைக்கு ஏற்ப கணிசமான மாற்றங்களைச் செய்தும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அது உச்சபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று அசத்தியிருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த காரின் விற்பனை ஜப்பானில் மேலும் பன்மடங்காக அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

இந்தியாவில் இந்த காரின் விற்பனை வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கான எலிவேட் கார்களுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. மேலும், இரண்டும் ஒரே மாதிரியான தரநிலையுடன் இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன. இதை வைத்தே நம் நாட்டிலும் இக்காருக்கு டிமாண்ட் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

அதேநேரத்தில், ஏற்கனவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் ஹோண்டா எலிவேட் ரூ. 11.91 லட்சம் என்கிற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹோண்டாவின் ஒரே ஒரு எஸ்யூவி ரக கார் மாடல் இது மட்டுமே ஆகும்.

ஒரே நேரத்தில் இந்த காரில் ஐந்து பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். மேலும், லிட்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக 16.92 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. 1.5 லிட்டர் ஐ-விடெக் டிஓஎச்சி எஞ்சினே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 89 kW மற்றும் 145 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இந்த காரில் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஹோண்டா காராக எலிவேட் எஸ்யூவி இருக்கின்றது. இதற்கு வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையிலேயே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் அமைந்திருக்கின்றன. இங்கு மட்டுமல்ல ஜப்பானிலும் இப்போது கிடைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதிக வரவேற்பு இந்திய தயாரிப்பு டபிள்யூஆர்-வி-க்கு கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 17, 2025, 11:55 [IST]
English summary
Honda elevate secures 5 star rating in japan ncap safety tests demonstrating exceptional features
மேலும்... #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+