ஹோண்டாவை வாழ வைக்கும் தெய்வம்.. இந்த காரு இல்லைனா கதையே மாறியிருக்கும்..
ஹோண்டா (Honda) நிறுவனத்தை வாழ வைக்கும் தெய்வமாக அதன் தயாரிப்பு ஒன்று மாறியிருக்கின்றது. நிறுவனத்தின் ஒரே ஒரு எஸ்யூவி (SUV) ரக கார் மாடலான எலிவேட் (Elevate)-தான் அது ஆகும். இந்த கார் மாடலே இப்போது நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக மாறி உள்ளது. இந்த (ஹோண்டா) நிறுவனம் சந்தையில் இருக்கிறதா?, இல்லையா?.. என்று கேட்கும் அளவிற்கு அதன் இந்திய இருப்பானது சமீப சில காலமாகவே இருந்து வந்தது.
இந்த மாதிரியான சூழலிலேயே எலிவேட் எஸ்யூவி கார் மாடலை நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் வருகையாலே நிறுவனத்தின் இந்திய இருப்பானது தற்போது நிலையானதாக மாறியிருக்கின்றது. சொல்லப் போனால் விற்பனையில் இந்த நிறுவனத்தை எலிவேட் கார் மாடலே தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக எலிவேட் காரின் விற்பனை ஒரு லட்சம் யூனிட்டுகளைத் தொட்டு இருப்பது ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் புதுமுக கார் மாடல்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வராமலே இருந்து வந்தது.
ஏற்கனவே இருக்கும் விற்பனையில் இருந்த கார் மாடல்களையே அது புதுப்பித்து விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருந்தது. மிக முக்கியமாக செடான் ரக கார்களின் விற்பனையில் மட்டுமே அது அதிகம் முக்கியத்துவத்தைச் செலுத்தி வந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் மாதிரியான இந்த பிரிவில் இருந்து சற்றே வெளியே வரும் விதமாக எலிவேட் எஸ்யூவி ரக கார் மாடலை அது விற்பனைக்குக் களமிறக்கியது.
இதுவே தற்போது நிறுவனத்தைத் தாங்கி நிற்கும் முக்கிய தூணாக மாறியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அந்த கார் விற்பனையில் 1 லட்சம் யூனிட்டுகளை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை ஹோண்டா நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கி இருக்கின்றது.
ஹோண்டா நிறுவனம் எலிவேட் கார் மாடலை இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே ஒன்றரை ஆண்டுகள்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் அது ஒரு லட்சம் யூனிட் விற்பனையை எட்டி இருக்கின்றது.
இதில் 53,326 யூனிட்டுகள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகியவை ஆகும். மீதமுள்ள 47,653 யூனிட்டுகள் உலக நாடுகளுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் எலிவேட் கார் மாடல் ஜப்பான், தெற்கு ஆப்பிரிக்கா, நேபாளம் மற்றும் பூட்டாம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்தியாவில் இந்த கார் மாடல் ரூ. 11.91 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் எஞ்சின் 1,498 சிசி திறன் கொண்டது ஆகும். இதன் அதிகபட்ச மைலேஜ் திறன் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 17 கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் செடான் கார் மார்க்கெட்டை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வந்த நிலையில் தற்போது எஸ்யூவி கார் மார்க்கெட்டிலும் கால் தடம் பதித்து இருக்கின்றது. விரைவில் இன்னும் சில புதுமுக கார் மாடல்களை அது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








