இந்திய கார் தான் வேணும்னு அடம்பிடித்து வாங்கும் வெளிநாட்டு மக்கள்! இந்த கம்பெனியின் 2 லட்சம் கார்கள் ஏற்றுமதி!
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வாகன ஏற்றுமதியில் முக்கிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. இந்நிறுவனம் 2 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 33 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் ஏற்றுமதியாகியு்ளது. இந்த ஏற்றுமதி சாதனைக்கு மேக் இன் இந்தியா திட்டம் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து இந்தியாவிற்கான கார்களை தயாரிப்பது மட்டுமல்லாமல் இந்த ஆலையில் வெளிநாடுகளுக்கான கார்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுமதியை துவங்கியது. இந்திய தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் ஏகப்பட்ட வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது.

இந்நிலையில் நேப்பாள், பூட்டான் போன்ற சார்க் நாடுகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் எஸ்ஏடிசி நாடுகளுக்கு முதலில் ஏற்றுமதியை துவங்கிய நிலையில் கடந்த 2021 ஆண்டு முதல் 50,000 வாகனங்கள் ஏற்றுமதி என்ற மைல் கல்லை எட்டி பிடித்தது. அதன் பின்னர் இடது பக்க டிரைவ் கொண்ட மார்கெட்டான மத்திய கிழக்கு நாடுகள், மெக்ஸிக்கோ, துருக்கி போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி நடந்தது.
முதல் 50,000 வாகனங்கள் ஏற்றுமதி சாதனை மைல் கல்லை எட்டி அடுத்த 2.5 ஆண்டுகளில் அடுத்த 50,000 என்ற சாதனை மைல் கல்லை எட்டி பிடித்தது. ஒரு லட்சம் வாகனங்கள் என்ற சாதனை எட்டி பிடிக்கப்பட்ட நிலையில் அடுத்த 1 லட்சம் கார்கள் ஏற்றுமதிக்கு வெறும் 2 ஆண்டுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிறுவனம் தனது மிட்சைஸ் எஸ்யூவி காரான எலவேட் என்ற காரை ஜப்பானில் டபிள்யூஆர்வி என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பான், தென் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் ஹோண்டா சிட்டி மற்றும் எலவேட் ஆகிய கார்கள் தான் 78 சதவீத ஏற்றுமதியை பெற்றுகின்றன. பாக்கி உள்ள 22 சதவீதம் தான் பிரியோ, அமேஸ், ஜாஸ், பிஆர்-வி, மொபிலோ, சிட்டி இ-எச்இவி, அக்கார்டு, சிஆர்-வி ஆகிய கார்களை ஏற்றமதி செய்கிறது. இதில்
இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் 33 நாடுகளுக்கு ஹோண்டா நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனம் ஜப்பானிற்கு மட்டும் மொத்த ஏற்றுமதியில் 30 சதவீதமும், தென்னாப்பிரிக்கா மற்றும் எஸ்ஏடிசி நாடுகளுக்க 26 சதவதமும், மெக்ஸிக்கோவிற்கு 19 சதவீதமும், துருக்கிக்கு 16 சதவீதமும் பாக்கி உள்ள 9 சதவீதம் மத்திய கிழக்கு, சார்க், கரீபியன் தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய கார்களுக்கு வரவேற்பு கிடைப்பது தெளிவாக தெரகிறது. இது இந்திய மக்களின் கடினமான உழைப்பையும், ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பு திறனையும் காட்டுகிறது. அந்நிறுவனத்தின் சொந்த நாடான ஜப்பான் நாட்டு மக்களே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை தான் விரும்புகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் பெரிய அளவில் இந்திய மார்கெட்டை கவனிக்கவில்லை. இந்நிறுவனத்தின் எலெவேட் கார் மட்டுமே ஒரளவிற்கு விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் கார்களை களம் இறக்கினால் விற்பனை நிச்சயம் அதிகமாகும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








