ரூ95,500 விலை குறையுது! இந்த கம்பெனி காரை இனி போட்டி போட்டுட்டு வாங்க போறாங்க!
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு தங்கள் தயாரிப்புகள் எவ்வளவு விலை குறையும் என்ற விபரங்களை வெளியிறட்டுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் ரூ95,500 வரை விலை குறையப்போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது இதனால் இந்தியாவில் வாகனங்களின் விலை கணிசமாக குறையப்போகிறது. இந்நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலை எவ்வளவு குறைகிறது என்ற விபரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஹோண்டா நிறுவனமும் தனது விலை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் மார்கெட்டில் 2ம் தலைமுறை அமேஸ், 3ம் தலைமுறை அமேஸ், ஹோண்டா எலவேட், ஹோண்டா சிட்டி போன்ற கார்களை விற்பனவை செய்து வருகிறது. தற்போது இந்த கார்களின் விலைகள் எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது.முதலில் ஹேண்டா அமேஸ் காரை பொருத்தவரை 2ம் தலைமுறை மற்றும் 3ம் தலை முறை கார்கள் விற்பனவையாகி வருகிறது. இந்த இரண்டு கார்களுக்கும் தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 1 சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. தற்போது இந்த காருக்கு 18 சதவீதமாக வரி குறைக்கப்படுகிறது.
இதனால் 2ம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காருக்கான விலை ரூ72,800 வரையிலும், 3ம் தலைமுறை ஹேண்டா அமேஸ் காருக்கான விலை ரூ95,500 வரையிலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ள்ளது. ஹோண்டா விற்பனை செய்யும் எலெவேட் மற்றும் சிட்டி ஆகிய கார்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

ஹோண்டாவின் எலவேட் கார் மார்கெட்டில் ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக களம் இறங்கி வருகிறது. இந்த கார் 9 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ரூ11.91 லட்சம் முதல் ரூ16.73 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலை ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு அதிகபட்சம் ரூ58,400 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி காரை பொருத்தவரை மொத்தம் 8 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ12.38 லட்சம் முதல் ரூ16.64 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலை ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு அதிகபட்சமாக ரூ 57,500 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரும் 40 சதவீத வரி வரம்பிற்குள் வருகிறது.

ஹோண்டா நிறவனம் தனது சிட்டி காரின் இவி வெர்ஷனாக இ: எச்இவி ஹைபிரிட் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ரூ 19,89,990 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு எந்த விதமான வரி குறைப்பும் இல்லை. இவி கார்கள் அதே 5 சதவீத வரியில் இருப்பதால் விலை குறையாது அதே விலை தான் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா கார்களுக்கு தனி மவுசு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இந்த விலை குறைவை பயன்படுத்தி பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பலர் புதிய காரை வாங்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் நீங்கள் எந்த காரை வாங்குவீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









