சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்ளும் ஹோண்டா.. யாருமே விரும்பாததை செஞ்சிட்டு காரணம் வேற..

ஹோண்டா (Honda) நிறுவனம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும் விதமாக தன்னுடைய முக்கிய தயாரிப்பு கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கின்றது. சமீபத்தில் விலை உயர்வை மேற்கொள்ள இருப்பதாக நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்தே தற்போது அந்த நிறுவனம் விலையை உயர்வு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றது. நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களாக அமேஸ் (Amaze), சிட்டி (City) மற்றும் எலிவேட் (Elevate) ஆகிய கார் மாடல்கள் இருக்கின்றன.

இதில் அமேஸ் மற்றும் சிட்டி இரண்டும் வெவ்வேறு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அமேஸ் பழைய தலைமுறை (Old Gen) மற்றும் புதிய தலைமுறை (New Gen)ம், சிட்டி இரண்டாம் தலைமுறை (2nd Gen), சிட்டி ஐந்தாம் தலைமுறை (5th Gen) மற்றும் சிட்டி இ:எச்இவி (City e:HEV) ஆகியவையும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Honda increases prices for city and elevate models

இவற்றின் விலையையே நிறுவனம் தற்போது உயர்த்தி இருக்கின்றது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கார் பிரியர்களை கவலையில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த பதிவில் எந்தெந்த கார் மாடலின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்டா சிட்டி : ஹோண்டா நிறுவனம் இந்த கார் மாடலில் பன்முக வேரியண்ட் ஆப்ஷன்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் குறிப்பிட்ட சில ஆப்ஷன்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கின்றன. ஆரம்ப நிலை தேர்வு மற்றும் குறிப்பிட்ட சில தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து வேரியண்டுகளின் விலையையும் ஹோண்டா உயர்த்தி இருக்கின்றது. ரூ. 20 ஆயிரமே உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

ஹோண்டா சிட்டி இ:எச்இவி : ஹைபிரிட் தொழில்நுட்ப அம்சத்தைத் தாங்கியிருக்கும் இந்த சிட்டி-யின் விலையிலும் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதிலும், ஆரம்ப நிலை தேர்வுகளின் விலை உயர்த்தப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இதன் ஆரம்ப விலை ரூ. 19 லட்சமாகவே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆனால், இதன் உயர்நிலை தேர்வின் விலை ரூ. 20.75 லட்சமாக உயர்ந்திருக்கின்றது.

ஹோண்டா எலிவேட்: நிறுவனம் இப்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஒரே ஒரு எஸ்யூவி ரக கார் மாடலே இதுவாகும். இந்த கார் மாடலிலும் ஆரம்ப நிலை தேர்வுகளின் விலையில் எந்த மாற்றமும் இப்போதைக்கு செய்யப்படவில்லை. உயர்நிலை வேரியண்டுகளின் விலையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதன் இப்போதைய ஆரம்ப விலை ரூ. 11.69 லட்சமாகவும், உயர்நிலை தேர்வின் விலை ரூ. 16.63 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இந்தியாவில் இந்த காருக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதன் விலையை ஹோண்டா நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யாருமே விரும்பாத விலை உயர்வை செய்துவிட்டு, இந்த விலை உயர்விற்கு வாகன உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதே காரணம் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. நிறுவனம், உயர்நிலை தேர்வுகளின் விலையிலேயே மாற்றம் செய்திருக்கின்றது. இது ஹோண்டா கார் பிரியர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 31, 2025, 11:10 [IST]
English summary
Honda increases prices for city and elevate models more details
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+