அடிமாட்டு விலையில் ஹோண்டா விற்பனை செய்யும் காரை இனி இந்த கலரிலும் வாங்கலாம்!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), தனது பிரபலமான காம்பாக்ட் செடான் காரான 3-ஆம் தலைமுறை ஹோண்டா அமேஸுக்கு ஒரு புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. 'கிரிஸ்டல் பிளாக் பேர்ல்' (Crystal Black Pearl) எனப்படும் இந்த நிறம், அமேஸ் காருக்கு ஒரு தனித்துவமான அழகியலைச் சேர்க்கிறது.

புதிய கிரிஸ்டல் பிளாக் பேர்ல் நிறம், ஹோண்டா அமேஸின் ஸ்டைலான வடிவமைப்பிற்கு கூடுதல் மிடுக்கையும் கம்பீரத்தையும் வழங்குகிறது. கருப்பு நிறம் தற்போது இளைஞர்களிடையே பிரபலமாகி வருவதால், தங்கள் கார் தனித்துவமாகவும், ஸ்போர்ட்டியாகவும், நேர்த்தியாகவும் இருக்க விரும்பும் வாடிக்கையாளர்களை இந்த புதிய நிறம் வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

crystal black pearl colour option

இதன் மூலம், அமேஸ் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது ரசனைக்கு ஏற்ற வண்ணத் தேர்வுகளை ஹோண்டா வழங்குகிறது. ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துணைத் தலைவர் திரு. குணால் பெஹல் இது குறித்து பேசுகையில், "இந்தியாவின் இளம் வாடிக்கையாளர்கள் இடையே ஹோண்டா அமேஸ் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஸ்டைல், நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு ஆகியவற்றை விரும்புவோரை இது ஈர்க்கிறது.

கிரிஸ்டல் பிளாக் பேர்ல் நிறத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இன்றைய இளைஞர்களின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்ப ஒரு நவீன தேர்வை நாங்கள் வழங்குகிறோம். இந்த புதிய நிறம் அமேஸுக்கு ஒரு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. குறிப்பாக, தங்கள் கார் தனித்துத் தெரிய வேண்டும் என விரும்பும் முதல் முறை கார் வாங்குபவர்களுக்கும் இளம் தொழில் வல்லுநர்களுக்கும் இது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமையும்" என்றார்.

முதல் முறை கார் வாங்குபவர்கள், இளம் குடும்பங்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் மத்தியில் ஹோண்டா அமேஸ் ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. பாதுகாப்பு அம்சங்கள், தனித்துவமான ஸ்டைல், விசாலமான உட்புறம், கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுடன், காம்பாக்ட் செடான் பிரிவில் அமேஸ் ஒரு வலுவான போட்டியாளராக திகழ்கிறது.

இந்த கார், பிரபலமான 1.2 லிட்டர் 4-சிலிண்டர் i-VTEC பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது சிவிடி (CVT) மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் மூலமாக, அமேஸ் கார் மென்மையான ஓட்டுதல் அனுபவத்தையும், சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குகிறது.

மேலும், செக்மென்ட்டிலேயே முதல் முறையாக ஹோண்டா சென்சிங் (ADAS) மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புடன் வரும் இந்தியாவின் மிகவும் மலிவு விலை கொண்ட காராகவும் அமேஸ் உள்ளது. இந்தியாவில் தற்சமயம் 3-ஆம் தலைமுறை ஹோண்டா அமேஸ் வி (V), வி.எக்ஸ் (VX) மற்றும் இசட்.எக்ஸ் (ZX) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

லூனார் சில்வர் மெட்டாலிக், மெட்டியோராய்டு கிரே மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல், கோல்டன் பிரவுன் மெட்டாலிக், ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், அப்சிடியன் ப்ளூ பேர்ல் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கிரிஸ்டல் பிளாக் பேர்ல் ஆகிய ஏழு வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் (Sedan) ரக கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு குறைந்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகும் செடான் கார்களுள் அமேஸ் ஒன்றாக உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு பல்வேறு மாடர்னான தொழிற்நுட்ப அம்சங்களை அமேஸ் காரில் ஹோண்டா வழங்குகிறது. இத்தகைய காரில் புதியதாக கருப்பு நிற பெயிண்ட் ஆப்ஷனை அறிமுகம் செய்வதன் மூலம் அமேஸ் காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2025, 16:44 [IST]
English summary
Honda introduced new crystal black pearl colour option for its amaze sedan car
மேலும்... #honda #honda amaze #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+