நானோ மாதிரி குட்டி எலெக்ட்ரிக் காரை வெளியிட்ட ஹோண்டா! பெயர் என்ன தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் நானோ கார் போன்ற குட்டி இவி கார் ஒன்றை முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் சலுகையுடன் குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹேண்டா நிறுவனம் சமீபத்தில் குட்டுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு என்ற நிகழ்வில் தனது சூப்பர் இவி கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் ஹோண்டா என் ஒன் என பெயர் வைத்துள்ளது. இந்த காரை வழக்கமான கார் போல வடிவமைக்காமல் குறைவான ஸ்டைலிங் வடிவமைப்பில் உருவாக்கியுள்ளது. இது குறித்த சில முக்கியமான தகவல்களையும் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Honda N-one

இந்த காரை அந்நிறுவனம் ஒல்டு ஸ்கூல் வைப், ரெட்ரோ எலெமென்ட்களுடன் சிம்பிளாகவும், பிராக்டிக்கல் அம்சங்களுடனும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் முன்பக்கம் வட்ட வடிவிலான எல்இடி ஹெல்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கம் கால்ம் ஸ்டைல் பானட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போக முன்பக்கம் வெஹிகிள்டு லோடு அம்சம் கொண்ட சாக்கெட்களும் வழங்கப்பட்டுள்ளன.

பக்கவாட்டு பகுதியில் பாடி கலர்டு டோர் ஹேண்டில்கள், டுயல் டோன் ஓஆர்விஎம் மற்றும் டர்ன் சிக்னல்கள், கருப்பு நிறத்தில் பி பில்லர், வட்ட வடிவிலான வீல் ஆர்ச்சுகள், சிறிய 6 ஸ்போக் வீல் டிசைன், உள்ளது. பின்பக்கம் பெரிய விண்ட் ஸ்கிரீன், நீள வாக்கிலான டெயில் லைட் மற்றும் பம்பர்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

Honda N-one

இந்த கார் மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனவைக்க வருகிறது. அதன்படி சியர்ஃபுல் கிரீன், ஃபோஜோர்டு மிஸ்ட் பியர்ல், ஸீபெட் ஃப்ளூ பியர்ல், பிளாட்டினம் ஒயிட் பியர்ல் மற்றும் லுனார் சில்வர் மெட்டாலிக் ஆகிய கலர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் அளவுகள் குறித்த விபரங்களை ஹோண்டா வெளியிடவில்லை. ஆனால் இது 3400 மிமீ நீளம் கொண்ட காராக இருக்கலாம் என தெரிகிறது.

இந்த காரின் உள்ளே போதுமான அளவு கால் வைக்கவும் தலை பகுதியிலும் இட வசதி இருக்கிறது. நிறைய ஃபிஸிக்கல் பட்டன்கள் டேஷ் போர்டு உடன் வழங்கப்பட்டுள்ளது. இது பிராக்கடிக்கல் அம்சத்தை வழங்குகிறது. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திலும், பிஸிக்கல் பட்டன்கள் உள்ளன. மேலும் இதில் ரோட்டரி டயல்களும் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ் போர்டு பகுதி செல்ஃப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய பொருட்களை வைத்துக்கொள்ளலாம். முக்கியமாக ஸ்மார்ட் போன், கண்ணாடி, வாலெட், காயின்ஸ் போன்ற பொருட்களை வைக்க முடியும்.

Honda N-one

மேலும் இந்த காரில் முக்கிய அம்சமாக வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் சிங்கிள் பெடல் கண்ட்ரோல் பங்ஷன் இருக்கிறது. இதை ஒரு பட்டன் மூலம் ஆக்டிவேட் செய்துவிடமுடியும். இந்த மோடில் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் ஆக்ஸிலேட்டராகவும் அதை விட்டால் பிரேக்காவும் செயல்படும். இதில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் கூட இருக்கிறது.

இதில் வெஹிகிள் டுலோடு அம்சம் இருப்பதால் வீட்டில் கரெண்ட் கட் ஏற்பட்டால் இந்த வாகனத்தில் உள்ள பேட்டரி பவரை பயன்படுத்த முடியும்.
இதற்கு தனி அடாப்டரை வாங்க முடியும். மேலும் இப்படி பயன்படுத்தும்போது பேட்டரி எவ்வளவு மிச்சம் உள்ளது என்பதை காருக்கு வெளியில் இருந்தே பார்க்கும் இண்டிகேட்டர்கள் உள்ளன.

இந்த காரில் 64 பிஎஸ் பவரை தரும் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 245 கி.மீ ரேஞ்சை தரும். 50KW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும்போது வெறும் 30 நிமிடத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றவிட முடியும். இந்த கார்கள் விரைவில் ஜப்பான் மார்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா என்-ஒன் எலெக்ட்ரிக் காரை பொருத்தவரை ஜப்பான் மார்கெட்டில் விற்பனைக்கு வந்தாலும் விரைவில் இந்தகார் இந்தியாவிற்கு வருவதற்கும் வாய்ப்புள்ளது. 2026ம் ஆண்டு இந்த கார் இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஆனால் இறக்குமதி செய்யப்படும் காராகவே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 29, 2025, 14:15 [IST]
English summary
Honda n one electric car 245km range debut
மேலும்... #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X