31 நாளில் 4050 பேர் இந்த கம்பெனி காரை நம்பி வாங்கிருக்காங்க! சம்பாதிச்ச நல்ல பெயர் தான் இதுக்கு காரணம்!
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் குறைவான மாடல் கார்களை விற்பனை செய்து வந்தாலும் விற்பனையில் கணிசமான எண்களை பதிவு செய்து வருகிறது. இந்நிறுவனம் அமேஸ், சிட்டி மற்றும் எலெவேட் ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த 3 மாடல்களும் சேர்ந்து கடந்த ஜூலை மாதம் சிறப்பான விற்பனவை எண்களை பதிவு செய்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 4050 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் விற்பனையான 4624 என்ற விற்பனை எண்ணிக்கையை ஒப்பிடும் போது குறைவு தான் என்றாலும் இந்த காரின் விற்பனை 12 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதில் அமேஸ் மற்றும் சிட்டி ஆகிய கார்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவே எலவேட் காரின் விற்பனவை வளர்ச்சியடைந்துள்ளது. இதை விரிவாக காணலாம் வாருங்கள். ஹோண்டாவின் அமேஸ் காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் மொத்தம் 2009 கார்கள் விற்பனவையாகியுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 2327 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளது.
ஹோண்டா சிட்டி காரை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 646 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 957 கார்கள் விற்பனையாகியிருந்தது. இந்த காரின் விற்பனை 32 சதவீதம் சரிவடைந்துள்ளது. அடுத்தாக எலவேட் காரின் விற்பனவையை பொருத்தவரை கடந்த ஜூலை மாதம் 1395 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜூலை மாதம் 1340 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் ஒட்டு மொத்தமாக விற்பனை வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் இந்நிறுவனம் வெறும் 3 கார்களை விற்பனை செய்து 4000 என்ற எண்ணிக்கையை ஒரு மாதத்தில் தாண்டியுள்ளது. இது நிச்சயம் சாதனைதான். சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய கார்கள் செடான் செக்மெண்டில் விற்பனையாவதால் அந்த செக்மெண்டிற்கே மவுசு குறைந்து வருகிறது. இதனால் அந்த ரக கார்கள் அதிகம் விற்பனையாகவில்லை.
இந்த கம்பெனி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் பலர் இந்த கம்பெனியின் எலெவேட் காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்நிறுவனம் வரிசையாக எஸ்யூவி செக்மெண்டில் பல கார்களை களம் இறக்கினால் நிச்சயம் பெரிய அளவில் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் ஹோண்டா கார்கள் விற்பனை ஒரு காலத்தில் சிறப்பாக தான் இருந்தது. ஆனால் இந்நிறுவனம் வரிசையாக தங்கள் வாகனங்களை நிறுத்தியது. இதனால் தற்போது விற்பனை குறைந்துள்ளது. இந்நிறுவனம் மீண்டும் புதிய எஸ்யூவி ரக கார்களை நவீன அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரும் போது நிச்சயம் விற்பனை அதிகமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மக்கள் மத்தியில் இந்த ஹோண்டா நிறுவனத்திற்கு நற்பெயர் இருப்பது இந்த நிறுவனம் தொடர்ந்து விற்பனையை பெறுவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்நிறுவனம் தரமான கார்களை கொண்டு வந்தால் நிச்சயம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக கார்களை விற்பனை செய்யும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications









