30 கி.மீ மைலேஜ் தரும் கார் கம்மி விலையில் வரப்போகுது! ஹோண்டாவின் மாஸ்டர் பிளான் இதான்!

ஹோண்டா நிறுவனம் தனது ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை மற்ற கார்களிலும் பொருத்த திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக மைலேஜ் தரும் கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி புதிய 7 சீட்டர் எஸ்யூவி, மிட்சைஸ் எஸ்யூவி கார்களிலும் ஸ்டிராங்க் ஹைபிரிட் பொருத்தப்பட்ட வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி காரில் இ:எச்இவி என்ற ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்ட் காரை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட இது ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இணைக்கப்படுகிறது. இந்த கார் 124 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் 26.5 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது.

Honda Strong Hybrid Cars

அதிகமான மைலேஜை வழங்கினாலும் இந்த கார் கமர்ஷியல் ரீதியாக பெரிய அளவி்ல ஹிட்டாகவில்லை. அதற்கு முக்கியமான காரணம், இதன் விலை தான். இந்த கார் ரூ20.85 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் இந்த காரை வாங்க விருப்பம் காட்டவில்லை. இந்நிலையில் ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்டில் பல புதிய மாடல் கார்களை வெளியிட ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் தான் அதிக விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இதை பெரும்பாலும் உள்ளூரிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் குறைந்த விலையில் ஸ்டிராங்க் ஹைபிரிட் கார்களை விற்பனை செய்ய முடிவும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

Honda Strong Hybrid Cars

புதிதாக வரவுள்ள ஹோண்டா ஹைபிரிட் கார்கள் எல்லாம் அந்நிறுவனம் புதிதாக உருவாக்கிய பிஎஃப்2 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட கார்களாக இருக்கும். எதிர்காலத்தில் கார் கட்டுமானத்திற்க மாடுலர் ஆக்கிடெக்ஷரையே அந்நிறுவனம் பயன்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் குறைந்த விலையில் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் புதிய தலைமுறை செடான், புதிய 7 சீட்டர் எஸ்யூவி, மற்றும் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி ஆகிய கார்கள் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கார்கள் எல்லாம் ரூ15-30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கம் என எதிர்பாரக்கலாம். இந்தியாவில் CAFE மாசு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் இந்த ஸ்டிராங்க் ஹைபிரிட் இந்த கட்டுப்பாடுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

ஹோண்டா போல ஹூண்டாய், கியா, மற்றும் ஸ்கோடா -ஃபோக்ஸ்வேகன் ஆகிய வாகனங்கள் இந்தியாவில் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை தங்கள் வாகனங்களில் பொருத்த திட்டமிட்டு வருகிறது. கியா புதிய தலை முறை செல்டோஸ், புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா , ஸ்கோடா - ஃபோக்ஸ்வேகனின் புதிய மிட்சைஸ் எஸ்யூவி ஆகிய கார்களில் ஸ்டிராங்க் ஹைபிரிட் பொருத்தப்பட வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மைலேஜ் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இது நியாயமான விலையில் கிடைத்தால் நிச்சயம் அதிகமாக விற்பனையாகும் அதுவும் எஸ்யூவி கார்களில் கிடைத்தால் நிச்சயம் மக்கள் அதிகம் வாங்குனார்கள் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, June 30, 2025, 8:43 [IST]
English summary
Honda strong hybrid cars upcoming suvs and model details revealed
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+