10 புதிய கார்களை கொண்டு வரப்போகும் ஹோண்டா! இந்த கார் கூட வரப்போகுதா?

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 30 கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் நடந்து வரும் மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் இது குறித்த அறிவப்பை அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஹோண்டா நிறுவனம் பல்வேறு கார்களை அறிமுகப்படுத்துவது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜப்பானில் நடந்து மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் இயக்குநர், தலைவர் மற்றும் ஆர்இஓவான தோஹிஷீரோ மைப் என்பவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் ஜப்பான், வடக்க அமெரிக்கா பகுதகளிில் வரவிருக்கும் பைக்குகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

Honda To Launch 10 New Cars

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாக மக்கள் நம்பிக்கையை பெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்த பிராண்டை விரிவாக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் தனது பிராண்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளது.

தற்போது ஜப்பானில் நடந்து வரும் மோட்டார் ஷோவில் அந்நிறுவனம் தனது 0 சிரீஸ் காரின் 3வது எடிசனை காட்சிப்படுத்தியுள்ளது. இது அடுத்த தலைமுறை இவி காராக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஹோண்டா 0 அல்ஃபா கார் ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இந்த கார் இந்தியா மற்றும் ஜப்பானில் வரும் 2027ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என எதரி்பார்க்கப்படுகிறது.

Honda To Launch 10 New Cars

இந்தகார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவில் சர்வதேச அளவில் கார்களை தயாரிக்கும் ஒரு தளமான பயன்படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் அமேஸ், சிட்டி மற்றும் எலவேட் ஆகிய கார்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட 0 சிரீஸ் ஆல்ஃபா கார் எலவேட் காரின் லுக்கை கொண்டுள்ளது. இது மட்டுமல்லா அடுத்த 5 ஆண்டுகளுக்கும் இந்நிறுவனம் 10 புதிய மாடல்கள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இ்நத 10 காரில் 7 கார் எஸ்யூவி கார்களாக இருக்கும். இதில் பல்வேறு செக்மெண்டில் இந்த கார் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

Honda To Launch 10 New Cars

மேலுமு் அமேஸ் மற்றும் சிட்டி பிளாட்ஃபார்மை பயன்படுத்தி காம்பேக்ட் எஸ்யூவி காரையும் அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இது போக சில மாடல்கள் சர்வதேச மார்கெட்டிற்காகவும், சில மாடங்கள் இந்தியாவிற்காக பிரத்தியேகமாக வடிவமைத்து தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதில் அடுத்த தலைமுறை சிட்டி காரும் அடக்கம், அடுத்த 2 ஆண்டிகளில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த கார்கள் எல்லாம் திட்டமிட்டபடி விற்பனைக்கு வந்தால் நிச்சயம் இதனால் மிகப்பெரிய அளவில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இதனால் போட்டி தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனைக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். தற்போதுஇந்தியாவில் ஆட்டோமொபைல் மார்கெட் மிகப்பெரி்ய அளவில் வளர்ந்து வருகிறது. இதை அந்நிறுவனம் பயன்படுத்தினால் லாபம் சம்பாதிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் தாமதமாக இந்த முடிவை எடுத்துள்ளது. எலவேட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடனேயே எஸ்யூவி கார்களுக்கான பணிகளை துரிதப்படுத்தியிருக்க வேண்டும். தற்போது மக்கள் அதிகம் எஸ்யூவி கார்கள் பக்கம் நகர துவங்கிவிட்டனர். இதனால் இன்னும் காலம் தள்ளாமல் விரைவாக இந்த கார்கள் வந்தால் மார்கெட்டில் நல்ல விற்பனை கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 1, 2025, 8:48 [IST]
English summary
Honda to launch 10 new cars in india including 7 suvs by 2030
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X